நெல்லை: கடந்த அக்டோபர் 28ஆம் தேதி என்று சில தேசவிரோத கும்பல்கள் அத்வானி ரத யாத்திரை செல்ல இருந்த பாதையில் பைப் வெடிகுண்டை வைத்துவிட்டு அசம்பாவித சம்பவத்தை நிகழ்த்த திட்டமிட்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் குண்டுவைத்தது தொடர்பாக நேரு என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் வழக்கம் போல் தங்களது விசாரணையை முஸ்லிம்கள் மீது திருப்பியுள்ளது காவல்துறை. தீவிரவாத செயல்களும், அதற்கான சூழ்ச்சிகளும் நாட்டில் உலகத்தில் எங்கு நடைபெற்றாலும் அதற்குக்காரணம் முஸ்லிம்களாகத்தான் இருப்பார்கள் என்னும் அளவிற்கு காவல்துறையின் அணுகுமுறைகள் மாறிக்கொண்டிருக்கிறது.
கடந்த 28.10.2011 வெள்ளிக்கிழமை அன்று டீ குடிக்கச்சென்ற பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினரான ஷாஜஹானை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச்சென்று ஜும்மா தொழுகைக்கு கூட அனுமதிக்காமல் அன்று முழுவதும் காவல் நிலையத்தில் இருக்க வைத்திருக்கின்றனர்.
மற்றொரு சம்பவமாக பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட செயலாளர் சர்தார் மற்றும் அடிப்படை உறுப்பினரான நவாஸ் ஆகியோரை விசாரணைக்காக இரவு 2 மணி அளவில் அழைத்துச்சென்றுள்ளனர். அன்று இரவு முழுவதும் அவர்களை எங்கு வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களது குடும்பத்தினருக்குக்கூட தெரிவிக்காமல் இருந்துள்ளனர். காவல்துறையினரின் இத்தகைய செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
தென்காசி அருகே பனபொல்லி என்ற கிராமத்தில் சில பள்ளிக்கூட மாணவர்கள் வெடிகுண்டை கண்டெடுத்துள்ளனர். மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும்போது அதில் ஒன்று வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் மாணவன் ஒருவன் பலத்த காயம் அடைந்துள்ளான். இத்தகைய சக்திவாய்ந்த வெடிபொருட்கள் தங்களுடைய கிராமத்திற்குள் எப்படி வந்தது என்று அங்குள்ள பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் 26ஆம் தேதி வரை அத்வானி செல்லும் ரதயாத்திரையின் பாதை காவல்துறையினருக்கோ, பொதுமக்களுக்கோ தெரியாத நிலையில் 2 நாட்களுக்கு முன்பே வெடிகுண்டை எப்படி வைத்திருக்க முடியும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இத்தகைய வெடிபொருட்களை இந்த சிறு கிராமத்திற்குள் கொண்டு வந்தது யார்? என்பது மர்மமாகவே உள்ளது.
இவ்வாறிருக்க பனபொல்லி கிராமத்தைச்சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் வெடிகுண்டு தயாரிக்க உபயோகப்படுத்தப்படும் டெடர்னைட் மற்றும் சில பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இது ஒரு கண்துடைப்பு போன்றே தெரிகிறது. காரணம் கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் என்பவன் யார்? என்ன கூறினான்? அதன் பிறகு காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பதற்கான கேள்விகளுக்கு ஒரு பதிலும் இருப்பதாக தெரியவில்லை.
மற்றொரு சம்வமாக மதுரை காவல்துறையினர் அப்துல்லாஹ் என்பவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அப்துல்லாஹ் கூறும் போது "போலீஸ் ஃபக்ருதீன்" என்பவன் தான் இந்த குண்டுவைத்ததற்கு மூளையாக செயல்பட்டவன் என்றும், தன்னை காவல்துறையினர் போலி எண்கவுண்டர் மூலம் சுட்டுக்கொன்றுவிடுவார்கள் என அஞ்சுவதாகவும் எனவே என்னை நீதிமன்றம் தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டு தன்னை விடுதலை செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளான். மதுரை சி.பி.சி.ஐ.டி காவல்துறை அதிகாரி கிருஷ்ணராஜன் இதை மறுத்துள்ளார். மேலும் "போலீஸ் ஃபக்ரூதீன்" என்பவதன் தலைமறைமாக உள்ளான் என்பதனையும் காவல்துறையினர் மறுக்கின்றனர்.
மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல் தமிழகம் இதுவரை அமைதிப்பூங்காவாக திகழ்ந்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக இந்த வெடிகுண்டு கலாச்சாரம் தமிழகத்தையும் குறிவைத்துக்கொண்டிருக்கிறது. தமிழக மக்களை பீதிக்குள்ளாக்கும் இத்தகைய சதிச்செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். காவல்துறையினர் இவ்வழக்கை சரியான கோணத்தில் விசாரிக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.
காவல்துறையினரை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு நீதியை நிலை நாட்டும்படியும், தமிழகத்தில் அமைதியான சூழலை உருவாக்கும்படியும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக காவல்துறையினரை கேட்டுக்கொள்வதெல்லாம் இச்சமப்வத்திற்கான விசாரணை நேர்மையாகவும், நீதியுடனும் நடத்தப்படவேண்டும். குறிப்பிட்ட சிறுபான்மை மக்களான முஸ்லிம்களின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர்களை மட்டும் குறிவைத்து விசாரணை மேற்கொள்ளும் போக்கினை கைவிட வேண்டும். பொதுமக்களிடம் நிலவிவரும் அமைதியை சீர்குழைக்க நினைக்கும் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டதிற்கு முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தரவேண்டும் என்பதே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோரிக்கையாகும்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக