புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

அப்பாவி முஸ்லிம்களை குறிவைக்கும் காவல்துறை - பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

2 நவம்பர், 2011



நந்தித் 1 & 2, மாலேகான் 1 & 2, கான்பூர், அஜ்மீர், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், கோவா, சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ், தென்காசி, என நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் வெளிவந்த சங்கபரிவார்களின் தொடர்பை மறைக்க, அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப சங்கபரிவார பின்புலத்தோடு கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருப்பதுதான் ஊழல் ஒழிப்பு நாடகம்.

இந்த போலியான ரதயாத்திரை தமிழகத்தில் வந்துவிட்டு செல்லும் போது திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டி என்ற கிராமத்தில் பாலத்தின் அடியில் ஒரு பைப் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குண்டு வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படும் ஆலம்பட்டி கிராமத்திற்குச் சென்றும் குண்டை பார்த்தவுடன் இது "முஸ்லிம்கள் வைத்த குண்டு" என்று கண்டு பிடித்துவிட்டதாம் காவல்துறை. இந்தியாவில் நடந்து வரும் நிகழ்வுகளைப் பொறுத்தவரை குண்டு வெடித்தவுடன் அந்த இடத்திற்கு போகாமலேயே முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி விடுவார்கள்.

இங்கு முன்பாகவே கண்டு பிடிக்கப்பட்டுவிட்டதால் அந்த இடத்திற்குப் போய் முஸ்லிம்கள் தான் என்றுள்ளனர். இது ஒன்றுதான் தமிழக காவல்துறை காட்டிய வித்தியாசம். உடனே கேரளாவுக்குச்சென்றோம், அங்கு சென்றோம் என்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களுக்கு ஏன் செல்லவில்லை என்பது தெரியவில்லை.

27.10.2011 அன்று மதுரை வந்தார் அத்வானி. 28.08.2011 அன்று திருமங்கலம் வழியாக ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, கேரளா என பயணதிட்டம் இருந்ததாக கூறும் காவல்துறை 26.10.2011 அன்று நள்ளிரவில் தான் காவல்துறைக்கே அத்வானி பயணம் செய்யும் பாதை எது என தெரியும் என்றும் சொல்கின்றனர். அப்படியிருக்கும் போது ஒரே நாளில் இந்த திட்டத்தை தீட்டி செயல்படுத்தியவர்கள் யார் என்பது பற்றி காவல்துறையினர் விசாரித்ததாக தெரியவில்லை.

கடந்த காலங்களில் 24.01.2008 அன்று தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் அவர்களே குண்டு வைத்ததையும் குண்டு வெடித்த இடத்தில் தொப்பி கண்டெடுக்கப்பட்டதையும் அப்போது ஆட்சியிலிருந்த திமுக அரசு நேர்மையான விசாரணை நடத்தி உடனடியாக உண்மையை கண்டு பிடித்ததையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் இதனை முஸ்லிம்கள் தான் செய்தார்கள், இல்லையென்றாலும் முஸ்லிம்கள்தான் செய்ததாக காட்ட வேண்டும் என்ற முடிவுடன் தான் ஆரம்பம் முதலே செயல்பட்டது காவல்துறை. அன்று இரம் பத்திக்கையாளர்களிடமும் முஸ்லிம்கள் தான் இதனை செய்தார்கள் என்ற தோரனையில் பேசியுள்ளது காவல்துறை. யாருடைய உத்தரவின் பெயரி அப்படி செயல்பட்டார்கள் என்பது தெரியவில்லை.

சரியான கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கபட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

ஆனால் இறுதியில் எல்லா வழக்குகளிலும் வழக்கமாக சொல்வது போன்று செல்போனை வைத்து கண்டுபிடித்தோம் என்று இரண்டுமுஸ்லிம் இளைஞர்களை கைது செய்துள்ளனர்.  மேலும் பலரை தேடி வருகின்றனர். இந்தியாவில் சமீப காலமாக நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளிலும் இதே போன்று செல்போன் ஆதாரம், இமெயில் ஆதாரம், எஸ்.எம்.எஸ் ஆதாரம் என்ற பெயரில் கைது செய்யப்பட்ட அனைத்து முஸ்லிம் இளைஞர்களும் அப்பாவிகள், இந்த குண்டு வெடிப்புகளின் பின்னணியில் இருப்பது ஆர்.எஸ்.எஸ்ஐ சேர்ந்தவர்கள் என்பது ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களின் வாக்கு மூலங்களின் மூலமும் பல கைதுகள் மூலமும் நிரூபணாமாகிவருவதை அனைவரும் அறிவோம்.

இச்சம்பவத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கபட்டோரின் உரிமைக்காக போராடி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை இவ்வழக்கில் சேர்த்து விடவேண்டும் என்ற அலாதியான ஆர்வம் அல்லது உத்தரவு போலீசாரிடையே காணப்பட்டது.

28.10.2011 அன்று ஸ்ரிவில்லிப்தூரில் "டீ" குடித்துக்கொண்டிருந்த பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினரான ஷாஜஹானை காவல் நிலையம் அழைத்துச் சென்று அன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அனுமதியளிக்காமல் மாலை வரை காவல் நிலையத்தில் வைத்து பின்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கைது என்று எழுதி அவரிடம் கையெழுத்து வாங்கி விட்டுள்ளனர்.

பின்னர் 01.11.2011 அன்று நள்ளிரவில் பாப்புலர் ஃப்ரண்டின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளராக சர்தார் மற்று நவாஸ் ஆகியோரை கைது செய்து சென்றுள்ளனர்.

கைது செய்து எங்கு வைத்திருக்கின்றார்கள் என்பதைக்கூட தெரியப்படுத்தாமல் மேலிடத்து உத்தரவு வரும் வரை நாங்கள் எதுவும் சொல்வதற்கு இல்லை என்றுள்ளனர்.  பாப்புலர் ஃப்ரண்ட் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை துவங்கியவுடன் 02.11.2011 அன்று காலை 9.30 மணியளவில் அவர்களை விடுவித்துள்ளனர்.

அத்வானி மதுரைக்கும் வருகை தந்திருந்தபோது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஊழில் ஊறித்திளைத்தவர்கள் ஊழலுக்கு எதிராக யாத்திரை நடத்துவதை கண்டித்து நோட்டீஸ் விநியோகம் செய்தது. அது காவல்துறைக்கும் தெரியும், அப்போதே அழைத்து பேசினார்கள். நோட்டீஸ் கொடுப்பது எங்களின்  ஜனநாயக உரிமை என்று சொல்லிவிட்டு வந்தோம்.

காவல்துறை இது போன்ற தகிடுதத்தங்களை செய்வார்கள் என்பதை அறிந்தே விநியோகிக்கப்பட்ட நோட்டீசுடன் நாம் பத்திரிக்கையாளர்களுக்கு செய்தியும் கொடுத்தோம். ஆனாலும் காவல்துறை பாப்புலர் ஃப்ரண்டை விடாமல் துரத்தி வருகின்றது. பாப்புலர் ஃப்ரண்ட் சமீப காலமாக மத்திய அரசுக்கு வைத்து வரும் கோரிக்கைதான் இதற்கு காரணம். 1992ல் இருந்து இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளையும் மீள் விசாரணை செய்யவேண்டும், அந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் அழுத்தமாக முன்வைத்து வருகின்றது. அதே போன்று சமீபத்தில் நடந்த காவல்துறை அதிகாரிகளின் சந்திப்பில் நாட்டில் நடைபெற்ற 16 குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் இருப்பது இந்துத்துவ ஃபாசிஸ பயங்கரவாதிகள் என்ற மிகவும் ஆபத்தான் அறிவிப்பு குறித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு தன்னுடைய கவலையை பதிவு செய்தது.

நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்புகளுக்குப் பின்னால் இருப்பது சங்கபரிவார ஃபாசிஸ சக்திகள்தான் என்பது மீண்டும் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்த பின்பும் மத்திய, மாநில அரசுகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மெத்தனப் போக்கையும், அமைதியையும் கடைபிடித்து வருகின்றன. இனியாவது உளவுத்துறை நிறுவனங்கள்  இந்துத்துவ ஃபாசிஸ அமைப்புகளை கூர்ந்து கண்காணிக்க வேண்டும்.

‌விசாரணை என்ற பெயரில் மீண்டும், மீண்டும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு நிறுத்தப்படவேண்டும், விசாரணை என்ற பெயரில் சிறுபான்மையினர் குறிவைக்கப்படமாட்டார்கள் என்ற பிரதமரின் வாக்குறுதி உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும். என்ற கோரிக்கையையும் முன்வைத்து வருகின்றது.

ஆக மொத்தத்தில் முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு பா.ஜ.கவிற்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்ற விதத்திலும், வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலையும் மனதில் கொண்டு பா.ஜ.கவின் மனதை குளிர வைக்கவும் ஆட்சிகும் வந்த சில காலங்களிலேயே இத்தகைய முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010