புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

குழந்தைகளின் படிப்பிற்காக தாரளமாக உதவி செய்யுங்கள்

30 டிசம்பர், 2011

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோரும் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. "ஸ்கூல் சலோ"  (பள்ளி செல்வோம்!) என்ற கோஷத்தோடு ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் கல்வியை தொடர முடியாத பிள்ளைகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது அல்ஹம்துலில்லாஹ்!

20 டிசம்பர் 2011 முதல் 10 ஜனவரி 2012 முதல் நடக்கும் இப்பிரச்சாரத்தில் பல்வேறு விதமான பணிகளை செய்வதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருக்கிறது.






இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள்:

1.) 6 முதல் 14 வயது வரை இருக்கக்கூடிய குழந்தைகளில் 4.2 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை.
2.) 2 கோடி குழந்தைகள் குழந்தை தொழிலாளியாக இருக்கின்றனர்.
3.) இந்தியாவில் 16% கிராமங்களில் அடிப்படை கல்வியை கற்றுக்கொடுக்கக்கூடிய பள்ளிகூடங்களே இல்லை.

எத்தனையோ குழந்தைகள் வெறும் 2 வேலை உணவிற்காக மட்டுமே கூலி வேலைகளை செய்து வருகின்றனர்.





மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்களின் நிலை:

1.) இந்தியாவிலேயே அதிக முஸ்லிம்கள் கொண்ட மாநிலமாக மேற்குவங்காள் திகழ்கிறது. 25.2% முஸ்லிம்கள் இங்கே வாழ்கின்றனர்.

2.) முஸ்லிம்கள் அதிகம் வாழும் 10 மாவட்டங்களில் 5 மாவட்டங்கள் மேற்கு வங்காளத்தில் தான் இருக்கின்றன.

3.) 2001 ஆம் வருடம் சர்சார் கமிட்டி கொடுத்த அறிக்கையின் படி மேற்குவங்காள முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரை விட பின் தங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

4.) 6 நூற்றாண்டுகளாக நவாப் பரம்பரையைச் சேர்ந்தவர்கல் மேற்கு வங்காளத்தில் வசித்திருக்கின்றனர்.




பிற மக்களை காட்டிலும் மேற்கு வங்காள முஸ்லிம்கள் கல்வியில் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர்.




மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்கள் வாழும் பெரும்பாலான கிராமங்களில் அடிப்படை கல்வியை பெறுவதற்குகூட வழி இல்லாத நிலை.




நாம் அனைவரும் ஒன்றினைந்து அவர்களுடைய இந்த அவல நிலையை போக்குவதற்கு நம்மாலான முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டுமல்லவா?




நாம் உடனே துரிதமாக செயல்பட்டு முதலில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வேலையை செய்ய வேண்டும்.


அவர்களது முகங்களில் பிரகாசத்தை ஏற்படுத்த வேண்டும்.




குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தாராளமாக உதவி செய்யுங்கள்!

மேற்கு வங்காளத்தில் டிசம்பர்-ஜனவரி மாதங்களில்தான் பள்ளிகளில் குழந்தைகளை சேர்பதற்கான பணிகள் நடைபெறுகிறது. பெற்றோர்களின் கல்வி அறிவு இல்லாததாலும், வறுமையினாலும் ஏராளமான குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை. 6 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டாயம் பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற அடிப்படையில் மேற்கு வங்காள பாப்புலர் ஃப்ரண்ட் "ஸ்கூல் சலோ" என்ற தலைப்பில் மூன்று வார பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறது.

இந்த பிரச்சாரத்தில் சிறப்பு அம்சமாக:

வீடுதோரும் சென்று கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, கல்வி அறிவு பெறாத குழந்தைகளின் கணக்கெடுப்பு, பள்ளிப்படிப்பை இடையில் கைவிட்ட குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புதல், விழிப்புணர்வு பேரணிகள், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள், போன்றவை நடைபெற்று வருகிறது.


பள்ளி படிப்பிற்கு தேவையான பொருட்களை 10,000 குழந்தைகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வழங்க இருக்கிறது. ஜனவரி 1, 2012 அன்று நடக்கவிருக்கும் இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான கலந்து கொள்ள இருக்கிறார்.

ஒரு குழந்தைக்கு பள்ளிக்குண்டா பொருட்களை வழங்குவதற்கு சரியாக ரூபாய் 300/- தேவைபடுகிறது. நீங்களும் தாராளமாக தங்களால் இயன்ற அளவு பொருளாதார உதவிகளை தரவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய சார்பாக கேட்டுக்கொள்கிறோம். பொருளாதார விருப்பமுள்ளவர்கள் கீழ் கண்ட வங்கி கணக்கிற்கு உங்களுடைய தொகையை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

பெயர்: முஹிப்புல் ஷேக்
வங்கி கணக்கு எண்: 31899955934
வங்கி பெயர்: STATE BANK OF INDIA
பிராஞ்: DALTANPUR, IFSC CODE: SBIN 008737




நமது நாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

"கல்வியை கற்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை"

"உங்களில் மிகச்சிறந்தவர், பிறருக்கு உதவக்கூடியவரே!"

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கு நற்கூலிகளை வழங்கிடுவானாக! மேலும் நம் சமூகத்தை வலிமைமிக்க சமூகமாக மாற்றி பிறருக்கு உதவக்கூடிய சமூகமாக மாற்றுவானாக! ஆமீன்!

3 விமர்சனங்கள்:

Mohammed Aslam சொன்னது…

please provide the Account name in english and also confirm the if it is valid IFSC code....

சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் சொன்னது…

வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எஃப்.சி எண் ஆகிய இரு எண்களும் சரியானவையே. இறுதியாக கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திலும் தெளிவாக இருக்கிறது.

Mohammed Aslam சொன்னது…

Thank You !! Asslam Alaikum

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010