|
பத்து கிராமங்களை தத்தெடுப்பதாக அறிவிக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் |
ஏற்கனவே அறிவித்திருந்தபடி ஏழ்மையான குடும்பத்தைச்சேர்ந்த பத்தாயிரம் பள்ளிக்குழந்தைகளுக்கு பள்ளி செல்வதற்கு தேவையான பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கான புத்தகங்கள், நோட்டுகள்,பேக் போன்றவற்றை வழங்கினார். அதேபோன்று தவுலதாபாத்தில் இளநிலை கல்லூரி படிப்பை மேற்கொண்டு வரும் ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையினையும் வழங்கினார்.
கல்வி விழிப்புணர்வு பிரச்சாரமான "ஸ்கூல் சலோ" பிரச்சாரம் கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி அன்று தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சாரத்தில் வீடு வீடாக சென்று மக்களுக்கு கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஏழ்மை நிலையினால கல்வி கற்க இயலாத குழந்தைகளின் பட்டியலை சேகரிப்பதும், அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் இணைத்துவிடுவது, பெற்றோர்களுக்கு கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஆலோசனை நிகழ்ச்சிகள், பள்ளிப்படிப்பை பாதியிலேயெ நிறுத்திய குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, பிரச்சார பேரணிகள் போன்றவை நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சாரம் வருகின்ற 10 ஜனவரி 2012 வரை நடைபெறும். 6 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவரும் அடிப்படை கல்வியையாவது பெற்றுவிட வேண்டும் என்பதே இப்பிரச்சாரத்தின் குறிக்கோளாகும்.
|
ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கான உபகரணங்கள் வழங்குதல் |
10 கிராங்களை தத்தெடுத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அந்த கிராமங்களில் அடிப்படை கல்வி, ஆரோக்கியம், அடிப்படை பொருளாதாரம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, வளம் பெற்ற கிராமங்களாக உருவாக்குவதற்கான பணிகளை மேற்கொள்ளும். சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடன், இலவச கல்வி பயிற்சி மையங்கள் (TUITION CENTRE ), மருத்துவமனைகள், வேலை வாய்ப்பு திட்டங்கள் போன்றவற்றை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தான் தத்தெடுத்த 10 கிராமங்களில் ஏற்படுத்த இருக்கின்றது. மேலும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு, தேவையான மருத்துவ உதவிகள் போன்றவற்றையும் இக்கிராமங்களில் ஏற்படுத்த இருக்கின்றது.
எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலை இ.அபூபக்கர், பாப்புலர் ஃப்ரண் ஆஃப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் ஓ.எம்.ஏ ஸலாம் மற்றும் மேற்கு வங்காள பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர் ஷஹாபுதீன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
|
கல்லூரி பயிலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் |
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக