பெங்களூர்: பிஜாபூர் மாவட்டம் சிந்தகி நகரில் உள்ள தாசிலலதார் அலுவலகத்தில் பாகிஸ்தானின் தேசிய கொடியை ஏற்றி தேசத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்திய குற்றவாளிகளையும் அவர்கள் சார்ந்த இயக்கங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்டின் கர்நாடக மாநில தலைவர் இல்யாஸ் தும்பே கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் கூறும்போது தாசில்தார் அலுவலகத்தில் பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடியை ஏற்றிய 6 சங்கப்பரிவார தீவிரவாதிகளை கைது செய்த காவல்துறையினரை பாராட்டுவதாக தெரிவித்தார். மேலும் இதனை தீர விசாரித்து இவர்களுக்கு பின்னால் இருந்து கொண்டு நாட்டுக்கு அவமரியாதையை ஏற்படுத்தியவர்களையும் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரை கேட்டுக்கொண்டார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக இதே போன்றதொரு சம்பவம் சிந்தகி மாவட்டத்தில் நடைபெற்றது. ஆனால் அப்பொழுது ஆட்சியாளர்கள் அவர்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டதால் குளிர்விட்டு மீண்டும் இதே வேலையை செய்துள்ளனர்.
இந்த சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் பாகிஸ்தான் கொடியை ஏற்றி விட்டு முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி விட்டு ஆர்பாட்டங்களையும் நடத்தினர். தாசில்தார் அலுவலக பணியாளர்களையும் சிந்தகி நகரின் காவல்துறையினரையும் அவமரியாதை செய்தனர். அதுமட்டுமல்லாமல் சிந்தகி நகரில் உள்ள மஸ்ஜிதுகளின் சுவர்களை சேதப்படுத்தி வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்த முயற்ச்சி செய்தனர். மேலும் சிந்தகி நகரின் சில ஊர்களில் பந்தினை அறிவித்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தனர். இவர்கள் செய்த இத்தகையை காரியங்களை உற்று நோக்கும் போது ஒரு பெரும் மதக்கலவரத்தை ஏற்படுத்துவதற்காகவே இத்தகைய சதி வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என இல்யாஸ் தும்பே கூறினார்.
இல்யாஸ் தும்பே மேலும் கூறும்போது "இந்த கைது சம்பவத்தை தொடர்ந்து பல அரசியல்வாதிகள் தங்களது கருத்தினை வெளியிட்டு வருகின்றனர். அதில் சிலர் இதில் ஸ்ரீராம் சேனாவின் உறுப்பினர்கள் ஈடுபடவில்லை என்றும் மாறாக பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் உறுப்பினர்கள் தான் ஈடுபட்டுள்ளார்கள் என்று கூறுகின்றனர். சில பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்தியில் அரசியல் தலைவர்கள் சிலர் இதில் தலையிட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு முயற்ச்சி செய்து வருவதாகவும், அப்பகுதி எம்.எல்.ஏ தான் இவற்றிற்கெல்லாம் காரணம் என்பது போன்ற செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இது போன்ற குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு இதன் விசாரணையை மேற்கொள்வதற்காக சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினரை நியமித்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். அமைதிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் குந்தகம் விளைவித்துக்கொண்டிருக்கும் சங்கப்பரிவார இயக்கங்களை உடனே தடை செய்ய வேண்டும் என செய்தி வெளியிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக