ஹைதரபாத்: போலி வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு காவல்துறையினரால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு நீதியை போன்று தற்போது நஷ்டஈடும் மறுக்கப்பட்டுள்ளது.
சில வருடங்களுக்கு முன்னால் ஹைதரபாத் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற மஸ்ஜிதான மக்கா மஸ்ஜிதில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் போது சங்கப்பரிவார தீவிரவாதிகளின் சதியால் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கிலும் வழக்கம் போல் முஸ்லிம்கள் மீதே குற்றம் சுமத்தப்பட்டு அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் பின்னர் தான் இந்த சதிச்செயல் சங்கப்பரிவாரங்களால நிகழ்த்தப்பட்டது என்றும் கைது செய்யப்பட்டு முஸ்லிம் இளைஞர்கள் அனைவரும் அப்பாவி இளைஞர்கள் எனவும் தெரியவந்தது.
6 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை பெற்று வந்த அந்த இளைஞர்கள் காவல்துறையினரால் கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்களை நிரபராதிகள் என்று பின்னர் அறிவித்த நீதிமன்றம் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதாக அறிவித்தது. தற்போது முஸ்லிம்களுக்கு எவ்வாறு நீதி மறுக்கப்பட்டு வருகிறதோ அதே போன்று நஷ்டஈடும் மறுக்கப்பட்டு வருகிறது.
முஹம்மது ரயீசுதீன் என்பவர் இவ்வாறே மக்கா மஸ்ஜித் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டு 15 நபர்களுடன் இவரும் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 3 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தது. ஆனால் நஷ்டஈடு பெற வேண்டிய ரயீசுதீனின் பெயர் அந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ள தெரிய வந்தது.
அதே போன்று செய்யது இம்ரான் மற்றும் ஷுஹைப் ஆகிய இருவர் தான் 2007ல் நடந்த குண்டுவெடிப்பில் முதன் முதலாக கைது செய்யப்பட்டவர்கள். ஆனால் இவர்களுடைய பெயரும் நஷ்டஈடு பெறுவோரின் பட்டியலில் இல்லை. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட இன்னும் எத்தனையோ அப்பாவி இளைஞர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கும் நஷ்டஈடு வழங்கவில்லை மேலும் அவர்கள் மீது போடப்பட்ட எண்ணற்ற பொய் வழக்குகள் இன்னமும் வாபஸ் பெறப்படவில்லை.
குண்டு வெடிப்பிற்கு பிறகு 84 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அதில் 70 நபர்களுக்கு மட்டுமே நஷ்டஈடாக மொத்தம் 70 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. கடைசி நேரத்தில் 15ற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நஷ்டஈடு மறுக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட அந்த இளைஞர்கள் கூறும்போது வேண்டுமென்றே காவல்துறையினர் இதில் தலையிட்டு தங்களுக்கு நஷ்டஈடு கிடைக்காமல் இருக்க வழிவகுத்திருப்பதாக தெரிவித்தனர்.
"முஹம்மது ரயீசுதீன்" இவரது வழக்கை பார்க்கும் போது மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டு காவல்துறையினரால கடுமையான முறையில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார் காரணம் 2004ஆம் ஆண்டு ஹைதரபாத் காவல்துறையினர் இவரது நண்பர் முஜாஹித் சலீம் என்பவரை சுட்டுக்கொன்றுள்ளனர். அதனை கண்ணால் கண்ட சாட்சி முஹம்மது ரயீசுதீன் ஒருவரே. எப்படியாவது இந்த சாட்சியை அழித்துவிடவேண்டும் என்பதற்காகவே காவல்துறையினர் இவர் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.
முஹம்மது ரயீசுதீன் கூறும்போது தனது நண்பரை சுட்டுக்கொலை செய்த காவல்துறையினரை சட்டத்திற்கு முன் நிறுத்தி தகுந்த தண்டனை அழிக்க வேண்டும் என்று கூறினார்.
ஒரு சமையம் நான் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது காவல்துறையினர் என்னை கைது செய்தனர். பின்னர் ஒரு பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். என்னுடைய உடலில் மின்சாரத்தை செலுத்தி கொடுமை செய்தனர். என்னுடைய நண்பன் கொலை செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறவேண்டுன் இல்லையென்றால் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் என்னை குற்றவாளிகள் பட்டியலில் இணைத்துவிடுவோம் என்று மிரட்டினர் இவ்வாறு ரயீசுதீன் கூறினார்.
இதனால் வரை நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வந்த ரயீசுதீனுக்கு அந்த வேலையும் பரிபோய்விட்டது. காவல்துறையினர் என்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளின் காரணமாக இனி யார் தான் எனக்கு வேலை தருவார்கள் என்று பரிதாபத்தோடு கேட்கிறார்.
நான் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் காவல்துறையினர் என்னை கொடுமை செய்து வருகின்றனர். பல முக்கிய பண்டிகை தினம், விநாயகர் சதுர்த்தி, டிசம்பர்-6 போன்ற தேதிகளில் என் வீட்டிற்கு வந்து என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச்செல்கின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்று கூறி காவல் நிலையத்தில் வைத்து என்னை இன்னமும் சித்திரவதை செய்கின்றனர் என கூறினார். செய்யது இம்ரான் ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். பன்னாட்டு வங்கி ஒன்றில் வேலைக்கு சேர இருக்கும்போது அவரும் ஷுஹைப் ஆகிய இருவரும் நகரத்திற்குள் ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்களை கொண்டு வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரும் போலி பாஸ்போர்ட்கள் தயாரித்தனர் என்று காவல்துறையினர் கூறி பழைய பொய் வழக்கை காரணம் காட்டி இவர்களுக்கும் நஷ்டஈடு வழங்க மறுத்துள்ளது. இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனக்கு பணம் எதுவும் வேண்டாம். நன்நடத்தை சான்றிதழ் வழ்ங்கினார் போதும், அதை வைத்துக்கொண்டு என்னுடைய பணிக்கு சென்று என் குடும்பத்தை பார்த்துக்கொள்வேன் என்று பரிதாபமாக கூறுகிறார்.
மற்றொரு நிரபராதியான் இம்ரான் கூறும்போது "எங்களால் வேலைக்கு செல்ல முடியவில்லை, சமூகங்கள் இன்னும் எங்களை தீவிரவாத கண்ணோட்டத்துடனேயே பார்க்கின்றனர். நிரபராதிகள் என்று கூறி நாங்கள் விடுதலை அடைந்தோம் ஆனால் இன்னமும் சிறையில் இருப்பதாகவே உணர்கிறோம்" என்று கூறினார்.
இப்படி நீதி மறுக்கப்பட்ட தங்களுடைய வாழ்க்கையை தொலைத்த முஸ்லிம் இளைஞர்கள் இந்தியாவில் ஏராளமாக இருக்கிறார்கள். சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகளால் குண்டுவெடிப்பை நிகழ்த்தப்பட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டு வருகின்றனர். இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது சங்கப்பரிவார தீவிரவாதியான அசிமானந்தா ஆனால் சிறை தண்டனையை அனுபவித்து வந்ததோ அப்பாவி முஸ்லிம்கள். என்று இந்த நிலை மாறும்?
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக