இம்பால்: நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கொலைச் செய்ததை கண்டித்து சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா பேரணி நடத்தியது.
இஸ்ஹாக் அலி(வயது 25), முஸ்தகீம்(வயது 24) ஆகிய இளைஞர்களின் படுகொலைக் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பேரணியில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கோரி முதல்வரின் வீட்டிற்கு அருகே இருந்து துவங்கி ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடைபெற்றது. ஆனால், இப்பேரணியை போலீஸ் வழியில் தடுத்து நிறுத்தியது. பின்னர் மாநில எஸ்.டி.பி.ஐ தலைவர் வஹீதுர் ரஹ்மான், செயலாளர் ராஃபி ஷா ஆகியோர் ஆளுநரிடம் மனுவை அளித்தனர்.
கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என வஹீதுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார். மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என ராஃபி ஷா அரசுக்கு கோரிக்கை விடுத்தார். கட்சி உறுப்பினர்கள் உள்பட ஏராளமான சமூக ஆர்வலர்கள் பேரணியிலும், கண்டன கூட்டத்திலும் பங்கேற்றனர்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக