சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் தென் சென்னை மாவட்ட செயற்குழு கூட்டம் 10.01.2012 செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் ராயபுரத்தில் உள்ள மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. நிர்வாக சீரமைப்புக்காக மேலிட பார்வையாளாராக மாநில செயற்குழு உறுப்பினர் திருவள்ளூர் ஜாகிர் ஹுசைன் அவர்கள் கலந்து கொண்டார்.
மாவட்ட பொது செயலாளர் முஹம்மது ஸாலிஹ் அவர்கள் கூட்டத்திற்கு வரவேற்புரையட்டினார். மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் அவர்கள் நிர்வாக சீரமைப்பிற்கான காரணங்களை விளக்கிக்கூறினார்; செயற்குழு உறுப்பினர் திருவள்ளூர் ஜாகிர் ஹுசைன் அவர்கள் தனது உரையில் தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். அதன் அடிப்படையில் மாநில செயற்குழு உறுப்பினர் திருவள்ளூர் ஜாகிர் ஹுசைன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட நிர்வாகதில் சில மாற்றங்களும் , புதிய உறுப்பினர்களும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அண்ணா நகர் தொகுதி தலைவர் ஜுனைத் பணி மாற்றம் காரணமாக வெளியூர் செல்வதால் அவர் தொகுதி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். மாவட்ட செயலாளர் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் துணைத்தலைவராக தேர்ந்டுக்கப்பட்டார். எழும்பூர் தொகுதி தலைவர் அஹமது அலி , சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி செயாலாளர் சாகுல் ஹமீது, சைதாபேட்டை தொகுதி தலைவர் அனீஸ் முஹம்மது ஆகியோர் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தென் சென்னை மாவட்ட புதிய நிர்வாகம்:
தலைவர்: முஹம்மது ஹுசைன்
துணை தலைவர் 1: அஹமது பாஷா
துணை தலைவர் 2: முஹம்மது இஸ்மாயில்
பொது செயலாளர்: முஹம்மது ஸாலிஹ்
செயலாளர்கள் 1: அஹமது அலி
செயலாளர்கள் 2: சாகுல் ஹமீது (திருவல்லிக்கேணி)
செயலாளர்கள் 3: அனீஸ் முஹம்மது (தி நகர் )
பொருளாளர்: அஹமது ரிபாய்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
மீரான் (மயிலாப்பூர் தொகுதி தலைவர்)
முஹம்மது நாஷிம்
செய்யது இப்ராஹீம் (தி நகர் தொகுதி தலைவர் )
அப்துல் மஜீத் (சைதாபேட்டை)
முஹம்மது பஹீம் (எழும்பூர்)
காதர் பாவா (வேளச்சேரி)
முஹம்மது உமர் ( தி நகர் )
மேலும் தொகுதி நிர்வாக சீரமைப்புகள் , தொகுதி கமிட்டியின் கருத்துக்கள் கேட்கப்பற்று மாவட்ட செயற்குழுவின் ஒப்புதலின் பேரில் விரைவில் சீரமிக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. முடிவாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர் அஹமது அலி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவேறியது.
மேலும் தொகுதி நிர்வாக சீரமைப்புகள் , தொகுதி கமிட்டியின் கருத்துக்கள் கேட்கப்பற்று மாவட்ட செயற்குழுவின் ஒப்புதலின் பேரில் விரைவில் சீரமிக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. முடிவாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர் அஹமது அலி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவேறியது.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக