புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

இஸ்லாமிய இயக்கத்தலைவர்களின் ஒன்று கூடல்

27 ஜனவரி, 2012

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான கலந்தாலோசனை கூட்டம் நேற்று மாலை சென்னையில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூகப் பிரமுகர்கள் மற்றும் சகோதர இயக்கங்களின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.



"முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு" பல ஆண்டுகளாக இதற்காக அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் தங்களால் இயன்ற அளவும் போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றனர். இதனால் வரை முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்பது ஒரு கனவாக இருந்தாலும் தற்போது மத்திய அரசு முஸ்லிம்களுக்கு மத்தியில் இடஒதுக்கீட்டை வழங்குவது என முடிவெடுத்துள்ளது. இத்துனை நாள் அமைதி காத்துக்கொண்டு தற்போது பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதையொட்டி இத்தகைய அறிக்கையை அரசியல் லாபத்திற்காக மத்திய அரசு வெளியிட்டிருந்தாலும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற நிலைக்காவது வந்திருப்பதை பாராட்டுவதில் தவறில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 3.5% இடஒதுக்கிடு அமலில் இருந்தாலும் வழங்கப்பட்ட இந்த சதவீதம் போதுமானதல்ல என்றும் தற்போது ஆட்சி செய்து வரும் மாநில அரசு தங்களுடைய தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கின்ற வேலையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டினை உடனே அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக வருகின்ற ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று கோவை, சென்னை, மதுரை, தஞ்சை, நெல்லை ஆகிய ஐந்து மாவட்டங்களில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருக்கிறது.

அதற்கும் முன்பு  தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு எத்துனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் ஒன்றினைந்து தீர்மானித்து மாநில அரசை வலியுறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனைத்து சமுதாய தலைவர்களையும் அழைத்து ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முஹம்மது காலித் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இடஒதுக்கீடு தொடர்பான விரிவான தொகுப்பை தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் வழங்கினார். சமூக தலைவர்கள் அனைவரும்  ஆலோசனை செய்து ஒத்த கருத்து ஏற்பட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் ஒன்று கூடிய இந்நிகழ்ச்சி சிறப்பானதாக அமைந்தது.

இறுதியாக பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி நன்றியுரை கூறினார்.

எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி
இஸ்லாமிய தொண்டு இயக்கத்தின் தலைவர் ஜனாப் ஏ.கே. ஹனீஃபா

தமுமுகவின் மாநில செயலாளர் ஜனாப் ஹமீது  
மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்கின் தலைவர் அ.ச உமர் ஃபாரூக்

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தலைவர் செய்யது இபுராஹிம் உஸ்மானி

ஐக்கிய சமாதானப்பேரவையின் தலைவர் ஹாமித் பக்ரி மன்பஈ
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் முஹம்மது ஷாஃபி

வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் ஜனாப் சிக்கந்தர்

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணைத்தலைவர் ஜனாப் முனீர்

NCHRO-வின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் அப்துல் காதர்


6 விமர்சனங்கள்:

Aaqif சொன்னது…

Masha Allah...

Arumaiyaana Muyarchi....

Thodarattum Ungal Samuthaya Sevai!!!

Thousif, Dubai சொன்னது…

You are trying to unite all organizations and all the people.

Insha Allah one day you will win!

Thousif, Dubai

khan சொன்னது…

enga tawheed jamaathai engae?

சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் சொன்னது…

சகோதரர் கான் அவர்கள் எந்த ஜமாத்தை கூறுகிறார்? இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணைத்தலைவர் முனீர் அவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறாரே! புகைப்படத்தை கவனிக்கவில்லையா?

unmaithedal சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்..............

சகோதரரே இந்திய தவ்ஹீத் ஜமா அத் னா ( டிரஸ்ட்டா ) இல்ல (சங்கமா)னு சொல்லலயே

சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் சொன்னது…

நீங்கள் இட்டுக்கொள்ளும் சண்டைகளுக்கு பாப்புலர் ஃப்ரண்டின் தளத்தை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010