புதுடெல்லி: உத்திரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேலையில் அனைத்தும் கட்சிகளும் ஆட்சியை பிடிப்பதற்காக மக்களை கவர்வதற்கான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. பா.ஜ.கவும் தன்னுடைய தேர்தல் அறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 4.5% உள் ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சமீபத்தில் அங்கீகரித்தது. இதனை முற்றிலுமாக பா.ஜ.க எதிர்த்து வருகிறது. மேலும் அயோத்தியில் இராமர் கோயிலை கட்டியெழுப்புவோம் என்று எப்பொழுதும் போல் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நல்ல ஆட்சியை அமைப்பதோடு மட்டுமல்லாமல் ஊழலை ஒழிப்போம் என்றும் மாயாவதி அரசு அமைத்த நினைவுச்சின்னங்களை மறு சீரமைப்பது போன்ற வாக்குறுதிகளை அளித்துள்ளது பா.ஜ.க.
தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்போது பா.ஜ.கவின் மூத்த தலைவர்களான உமா பாரதி, சூர்ய பிரதாப் சாகி, கல்ராஜ் மிஸ்ரா, முஃக்தார் அப்பாஸ் நத்வி, நரேந்திர சிங் தோமர் மற்றும் சுதீந்திர குல்கர்னி ஆகியோர் இருந்தனர். அவர்கள் மேலும் கூறும் போது அயோத்தியில் இராமர் கோயிலை என்பது தங்களுடைய தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சமாகும் என்று கூறினர்.
இராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது என சூர்ய பிரதாப் சாகி கூறினார்.
இராமர் கோயில் அயோத்தியில் கட்டப்பட வேண்டும் என்பது கோடிக்கணக்கான இந்திய மக்களின் நம்பிக்கைக்கு உரித்தானதாகும். இராமர் என்பது கெளரவம், மதிப்பு, பெருமையின் அடையாளச் சின்னமாகும். துரதிஷ்டவசமாக போலி மதச்சார்பின்மை மற்றும் வாக்கு வங்கி அரசியல் காரணமாக இராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்பதற்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. இராமர் கோயில் கட்டுவதற்கும் தடைக்கற்களாக இருக்கும் அனைத்து சக்திகளையும் பா.ஜ.க தகர்த்து எறியும் என சூர்ய பிரதாப் சாகி கூறியுள்ளார்.
மேலும் தங்களது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தீர்மானித்துள்ளதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவிக்கிறது. இன்னும் ஒரு படி மேலே சென்று உயர் ஜாதியினரிடத்தில் பொருளாதார பலவீனம் அடைந்தவர்களை கண்டறிய ஒரு சிறப்பு குழு ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது.
சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியை குறிவைத்தே மத்திய அரசு இடஒதுக்கீட்டிற்கான வாக்குறுதிகளை அழித்துள்ளது. ஆனால் பா.ஜ.க மீண்டு ஆட்சி அமைத்தால் முஸ்லிம்களுக்கென்று வழங்கப்பட இருக்கின்ற 4.5% இடஒதுக்கீட்டினை ரத்து செய்துவிட்டு எப்பொழுதும்போல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இடஒதுக்கீட்டினை அமுல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த லட்சணத்தில் பா.ஜ.கவை ஆதிரிக்க தயாராக இருப்பதாக ஒரு முஸ்லிம் கட்சி அறிவித்துள்ளது.
பார்க்க : http://chennaipopularfront.blogspot.com/2011/06/blog-post_8336.html
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக