புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

நரேந்திர மோடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!

15 பிப்ரவரி, 2012

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,



சல்மான் குர்ஷித்திற்கு எதிராக தேர்தல் ஆணையம் எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் தேவையற்றது என்றும், அநாவசியமானது என்றும் குறிப்பிட்டுள்ள அவர் இது தொடர்பாக ஜனாதிபதி பிரதீபா பாட்டில் உடனே தலையிட்டு இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சல்மான் குர்ஷித் கூறியது சட்டத்திற்கு விரோதமானது என்றும் முறையற்றது என்று கூறும் தேர்தல் ஆணையத்தின் கூற்று தவறானதாகும். தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களிடம் வாக்குறுதிகள் அளிப்பது ஒன்றும் நமது தேசத்தில் புதிய ஒன்றல்ல, மேலும் எல்லா அரசியல் கட்சிகளும் இதனையே செய்து வருகின்றன.

உத்திரபிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு சல்மான் குர்ஷித் முஸ்லிம்களுக்கு தனது அரசு இடஒதுக்கீடு வழங்கும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார். மற்ற அரசியல் தலைவர்களை போலவே அவரும் வாக்குறுதி அளித்திருக்கிறார். இதை சட்டத்திற்கு விரோதமானது என்று கூறும் தேர்தல் ஆணையத்தின் கூற்று தவறானதாகும்.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தேர்தல் பிரச்சாரத்தை உண்ணிப்பாக கவனித்து வரும் தேர்தல் ஆணையம் மதவாத கட்சியான பா.ஜ.கவின்  தலைவர்கள் அதிலும் குறிப்பாக அத்வானி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது சட்டத்திற்கு புறம்பாக அயோத்தியில் "இராமர் கோயில்" கட்டுவோம் என்று இந்துக்களிடம் பிரச்சாரம் செய்வதை ஏன் தேர்தல் ஆணையம் தடுப்பதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் ஆணையம் இது விஷயத்தில் நடுநிலையான போக்கை கையாளவேண்டும் என்று வலியுறுத்தினார்.

குஜராத் கலவரத்தின் போது இடிக்கப்பட்ட மஸ்ஜிதுகளை பாதுகாக்க நரேந்திர மோடி அரசு தவறிவிட்டது என்றும் அதற்கு முழு காரணம் நரேந்திர மோடியே என்று குஜராத் உயர் நீதி மன்றம் தற்போது தீர்பளித்துள்ளது. இந்திய ஜனாதிபதி இதனை கருத்தில் கொண்டு முதலைமைச்சர் பதவியிலிருந்து நரேந்திர மோடியை நீக்க வேண்டும் என கே.எம் ஷரீஃப் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

கலவரக்காரர்களால் சேதப்படுத்தப்பட்ட மஸ்ஜிதுகளை மாநில அரசு உடனே புதுபித்து கொடுக்க வேண்டும் இல்லையேல் அதற்கான இழப்பீட்டு தொகையை வழங்கவேண்டும் என்று கூறி மாவட்ட நீதிமன்றங்களுக்கு இது தொடர்பாக ஆணையிட்ட குஜராத் உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்பதாக செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010