திருப்பூர்: தமிழக அரசு சார்பாக வழங்கப்படுகின்ற முதியோர் உதவித்தொகையினை பெறுவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் பணியையும், அவர்களுக்கு உதவி செய்யும் பணியையும் திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெற்றது.
தங்களது வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் வகையில் முதியவர்களுக்கு தமிழக அரசு பென்ஷ்ன் (உதவித்தொகை) வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இத்தகைய திட்டத்தை பற்றிய தெளிவான விழிப்புணர்வு இல்லாததால், அவர்கள் இதற்காக விண்ணப்பம் செய்வதில்லை. இதனால் முதியவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பணம் அவர்களுக்கு போய் சென்றடைவதில்லை என்பதை கருத்தில் கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் சிறிய அளவில் திருப்பூரில் முகாம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இதில் கலந்து கொண்ட முதியவர்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், அவர்களுக்காக விண்ணபங்களை பூர்த்தி செய்து அதனை உரிய நபர்களிடம் ஒப்படைக்க உதவி செய்தது. சுமார் 150ற்கும் மேற்பட்டவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக