வடக்கு மற்றும் வடகிழக்கு மக்களின் பாதுகாப்பை பேணுவதை தங்களின் கடமையாக ஏற்று செயல்படுத்தி வருவதுதான் தென் இந்திய மக்களின் பாரம்பரியம் என்பதை அவர் நினைவு படுத்தினார். அஸ்ஸாம் நிகழ்வுகளை மையமாக வைத்து மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களை சில வகுப்புவாத சக்திகள் பயன்படுத்தி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்து வருவதும் கவலைக்குரியது, சுதந்திர தினத்தன்று ஹைதராபாத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதாக தவறான செய்தி பரப்பபட்டது. இக்கொடிய செயலை கடமை உணர்வுள்ள சில ஊடகங்கள் வெளிக்கொணர்ந்தன. ஹைதராபாத் சம்பவம் உள்ளிட்ட அனைத்து வதந்திகளையும் பரப்பியவர்களை அதிகாரிகள் சட்டத்தின் முன்; கொண்டு வர வேண்டும் என்று கே.எம்.ஷரிஃப் கேட்டுக்கொண்டார்.
அஸ்ஸாமில் நிலவி வரும் பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்புவதற்கு விஷமிகள் மற்றும் வகுப்புவாத அமைப்புகள் இது போன்ற சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன என்று எண்ண தோன்றுகின்றது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் அஸ்ஸாம் அரசாங்கம் தவறியதைதான் இன வன்முறை காட்டுகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தை சார்ந்த மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதில் மாநில அரசாங்கம் தவறியுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பை வழங்க முடியாதவர்கள் தற்போது பங்களாதேஷில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்ற பெரில் அரசியல் நடத்துவது துரதிஷ்ட வசமானது. எதிர்பார்த்தது போல் சங்பரிவார் கும்பல்களும் இதில் இணைந்து கொண்டு அகதிகள் முகாம்களில் உள்ள வங்க மொழி பேசும் முஸ்லிம்களுக்கு எதிரான தங்களின் வகுப்புவாத பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு மற்றும் பாதிக்கபட்டவர்கள் தங்களின் வீடுகளுக்கு பாதுகாப்பாக திரும்புவதற்கான உடனடி ஏற்பாடுகளை செய்யுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளை கேட்டு கோள்கிறோம்.
நிவாரண பணிகளில் ஒத்துழைப்பை நல்க அனைத்து குடிமக்களும் முன்வர வேண்டும் என்றும் கே.எம்.ஷரிஃப் கேட்டுக்கொண்டார். வட்டார மற்றும் மத எல்லைகளை கடந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்முடைய ஆதரவை காட்ட வேண்டிய தருணம் இது என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக