புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

குற்றவாளிகளை கைது செய்! அப்பாவிகளை விடுதலை செய்!

21 பிப்ரவரி, 2011

சென்னை : ஷோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் சார்பாக‌ "குற்றவாளிகளை கைது செய்!  அப்பாவிகளை விடுதலை செய்!" என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தின் துவக்கவிழா கருத்தரங்கம் நேற்று காலை 10:30 மணி அளவில் சென்னை அண்ணா அரங்கத்தில் நடைப்பெற்றது.


 சமீக கால வருடங்களாக இந்திய நாட்டில் பல இடங்களில் குண்டி வெடிப்பு சம்பவங்கள் நடந்தேரியுள்ளது அனைவரும் அறிந்ததே, ஒவ்வொரு குண்டுவெடிப்பு சம்பவத்தின் போதும்,இதற்கு காரணம் எதோ ஒரு முஸ்லிம் அமைப்புதான் என்று கூறி, பல அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆஜம்கர் நகரில் மட்டும் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் நீரூபிக்கப்படாமலேயே பல அப்பாவிகள் இன்று சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால் இன்று காவால்துறையில் இருக்கின்ற சில நேர்மையான அதிகாரிகளின் பாரபட்டசமில்லாத விசாரனணையின் விளைவாக இன்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய உண்மையான குற்றவாளிகளின் முகத்திரைகள் கிழிந்து வருகிறது. ஆம்! நமது வலைப்பூவில் ஏற்க்கனவே ஒரு கட்டுரையை கொடுத்துள்ளோம் (பார்க்க: http://harbour-popularfront.blogspot.com/2011/02/blog-post_7875.html) ஆக இந்த நாட்டில் நடைப்பெற்ற குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக இருப்பது ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், வி.ஹெச்.பி போன்ற சங்கபரிவார தீவிரவாதிகள் தான் என்ற உண்மை வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் குற்றம் நீரூபிக்கப்படாமல் சிறையில் வாடும் அப்பாவி மக்கள் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை என்றதும் இந்த நாட்டின் நீதித்துறை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பது விடையில்லாத கேள்விக்குறியாகவே உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஷோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா ஒரு தேசிய அளிவிலான பிரச்சாரத்தை துவக்கியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற‌ இந்நிகழ்சிக்கு SDPI ன் தேசிய தலைவர் ஈ.அபூபக்கர் அவர்கள் தலைமை தாங்கினார், தமிழ் நாடு தலைவர் தெஹ்லான் பாகவி, பொதுச்செயலாளர் ரஃபீக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா, பேராசிரியர் மார்க்ஸ், என்.சி.ஹெச்.ஆர்.ஓ வின் தமிழக தலைவர் வழக்கறிஞர் பவானி மோகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர். அரங்கத்தின் வெளியில் அமைக்கப்பட்டிருந்த தத்ரூபமான காட்சி கருத்தரங்கத்தின் தலைப்பை தெளிவாக எடுத்துரைத்தது..



அரங்கத்தின் வெளியில் பிரச்சாரத்தின் தலைப்பை விவரிக்கும் காட்சி

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010