ஆஃப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் ஒன்றில் குர்ஆன் எரிக்கப்பட்ட சமப்வத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. இந்த கொடூர செயலில் பின்னனியில் உள்ளவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா மற்றும் கூட்டுப் படைகள் ஆஃப்கானிஸ்தானிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று பொதுச்செயலாளர் கே.மெ. ஷரீஃப் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவம் தொடர்பாக இத்தகைய செயல்கள் நடைபெறுவது இது முதல் தடவை அல்ல. 2008ஆம் ஆண்டு போர் குற்றவாளிகள் இதைப்போன்ற ஏராளமான சம்பவங்களை கண்டதாக தங்கள் விசாரணையின் போது தெரிவித்திருக்கின்றனர். ஒரு சம்பவத்தில் குர்ஆனை அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர். உலக முஸ்லிம் மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதால், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்குமாறு அமெரிக்க அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் ஒரு அறிக்கையை அனுப்ப வேண்டும் என்றும் கே.எம். ஷரீஃப் கேட்டுக்கொண்டார்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக