புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

NWF சார்பாக சென்னையில் ஆபாசம் மற்றும் மதுவை எதிர்த்து பேரணி

6 மார்ச், 2012

சென்னை: உலக மகளிர் தினமான மார்ச்-8யை முன்னிட்டு "ஆபாசம் அழித்து பெண்ணினத்தை காப்போம்! குடியைக்கெடுக்கும் குடியை ஒழிப்போம்" என்ற கோஷத்தோடு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே காலை 10:30 மணியளவில் மாபெரும் பேரணி நடக்க இருக்கின்றது.

தமிழ்நாட்டில் தற்போதைய கணக்கெடுப்பின்படி  6,696 டாஸ்மார்க் கடைகளும், 45 புதிய கடைகளும், 4350 பார்களும் இயங்கிவருகிறது என்பது ஒரு கசப்பான உண்மையாகும். மதுக்கடைகளின் மூலமாக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கின்றது என்பதற்காக மக்களை காக்க வேண்டிய அரசாங்கமே மதுக்கடைகளை நடத்தி வருவது வேதனையான விஷயமாகும். இப்படி அரசாங்கமே மக்களை சீரழிக்கக்கூடிய செயலை செய்தால் சமூகத்தை சீரமைக்கும் பணியை யார் தான் மேற்கொள்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுவை அருந்திவிட்டு தன்னிலை உணராமல் அலங்கோலமாய் சாலை ஓரங்களில் விழுந்துகிடக்கும் அவல நிலையை நம்மால் காணமுடிகிறது. இத்தகைய சூழலில் பெண்களும், பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவ்வழியை கடக்கும் போது மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இதே போல் பெண்களை நதியாகவும், பெண்கள் நாட்டின் கண்கள் போன்ற பொன்மொழிகள் கொண்டும் கண்ணியமாக மதிக்கும் இந்திய நாட்டில் ஆபாசம் என்னும் கொடிய நோய் பெருகி பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்க்கும் கலாச்சாரம் பெருகிவருகிறது.

இதனை கருத்தில் கொண்டு உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மது மற்றும் ஆபாசத்தை எதிர்த்து மாபெரும் பேரணி நடக்க இருக்கின்றது. இதில் பெரும்திரளான பெண்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010