புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்க முயற்ச்சி! கண்டன பொதுக்கூட்டம்

10 ஜூலை, 2012

பெரியபட்டினம்:  இராமநாதபுரம் மாவட்ட பெரியபட்டினத்தில் காவல்துறையினரின் செயலைக்கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தேசிய அளவில் சமூக பணிகளை ஆற்றிவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு பல்வேறு மாநிலங்களிலும் உறுப்பினர்கள் இருக்கின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை முன்னேற்றப்பாதைக்கு வித்திடும் வகையில் பல்வேறு சமூகப்பணிகளை ஆற்றிவருகிறது. சமீபத்தில் கல்வியில் பின் தங்கி இருக்கும் முஸ்லிம் சமூகத்திடம் கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்தரங்குகள், நலதிட்ட உதவிகள் என நாடு தழுவி பல்வேறு இடங்களில் "ஸ்கூல் சலோ" பள்ளி செல்வோம் எனும் பிரச்சாரத்தை மேற்கு கொண்டு வருகிறது.


அதே போன்று இந்திய மக்கள் சுகாதார வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற அடிப்படையிலும், ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் "ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்" என்ற பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருவது வழக்கம். அவ்வகையில் உணவு பழக்க வழக்கங்கள், யோகா மற்றும் கராத்தே பயிற்சிகள் என உடல் ஆரோக்கியம் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. அவ்வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் மற்றவர்களுக்கு ஆரோக்கியம் தொடர்பாக பயிற்ச்சி அளிக்க அவர்களுக்கென்று பெரியபட்டினத்தில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பயிற்சி நடைபெற்று வந்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் இவ்வாறான பயிற்சிகள் மேற்கொள்வது என்பது புதிதல்ல‌. மாறாக இது தொடர்பாக காவல்துறையினருக்கும் ஏற்கனவே நன்கறிந்திருந்தும் முஸ்லிம் விரோத போக்கினை கையாண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை கைது செய்து தீவிரவாதிகளாக சித்தரிக்க முயற்சி செய்தனர்.

சந்தேகத்திற்கு இடமான வட மாநில இளைஞர்கள் கைது என்றும், துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது எனவும் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டது.

இதனை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் பெரியபட்டிணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில், எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர். அழகு மணி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

ஜமாத்தார்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.




0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010