புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

அமெரிக்காவை கண்டித்து முஸ்லிம்கள் வரலாறு காணாத போராட்டம்

20 செப்டம்பர், 2012

முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும்வகையில் அமெரிக்காவில் வசிக்கும் யூத இனத்தைச் சேர்ந்த ஷாம் பேசிலி என்பவன் தயாரித்த "Innocence of Muslims " என்றதிரைப்படத்தை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் இஸ்லாத்தையும் , நபிகள் நாயகத்தையும் கொச்சைப்படுத்தும் விதமான காட்சிகள்பெருமளவில் வருகின்றன. இதனை கண்டித்து உலக அளவில் முஸ்லிம்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சென்னை மவுண்ட் ரோட்டில் மக்கா மஸ்ஜித் அருகில் 18 .09 .2012 செவ்வாய்கிழமை மாலை 4 மணியளவில் தமிழ்நாடுமுஸ்லிம் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்(TMMK ), பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI ), இந்திய தௌஹீத் ஜமாஅத் (INTJ ), ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் , இந்தியன் யூனியன்முஸ்லிம் லீக், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா ( SDPI ),மனித நேய மக்கள் கட்சி ( MMK ), தேசிய லீக், வெல்பேர் பார்டிஆஃப் இந்தியா, இந்திய தேசிய லீக், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், தமிழ் மாநிலதேசிய லீக், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை, இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்,ஜம்மாத்துல் உலமாயே ஹிந்த் (அர்ஷத் மதனி), . ஜமாத்துல் உலமாயே ஹிந்த் (மஹ்மூத் மதனி) , ஆல் இந்தியா மில்லி கவுன்சில்,தாருல் இஸ்லாம் ஃபவுண்டேசன் ட்ரஸ்ட், இஸ்லாமிய இலக்கியக் கழகம், ஐக்கிய சமாதானப் பேரவை, ஷரிஅத் பாதுகாப்புபேரவை என தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கலந்து கொண்டு தங்களதுகண்டனங்களை பதிவு செய்தனர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.



0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010