பெரம்பலூர்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பெரம்பலூர்
மாவட்ட வி.களத்தூரில் "ரமழான் தரும் படிப்பினை" என்ற தலைப்பில் மாபெரும்
பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் ஏ. காலித் முஹம்மது
மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் இபுராஹிம் உஸ்மானி ஆகியோர் கலந்து
கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவருக்கு நினைவுப்பரிசும்,
ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. இதில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானவர்கள்
கலந்து கொண்டனர். இப்பொதுக்கூட்டத்தின் மூலம் கீழ்கண்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்:
1. வி.களத்தூரில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் தொடர்ந்து மருத்துவர்களைக்கொண்டு இயக்க வேண்டும் எனவும், சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பொதுக்கூட்டத்தின் மூலமாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
2. வி.களத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் உள்ள் ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பி மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற நடவடிக்கை மேற்கொள்ள பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலரிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
3. வி.களத்தூர் ஊராட்சி மன்றம் மூலம் தொற்று வியாதிகள் மற்றும் காலராக்கள் பரவாமல் இருக்க அனைத்து தெருக்களிலும் துப்புறவு பணியாளர்களைக் கொண்டு தினசரி தூய்மை செய்து கொசு மருந்துகள் அடித்து துப்புறவு செய்யுமாறு இப்பொதுக்கூட்டத்தின் மூலமாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
4. வி.களத்தூரில் அரசுக்கு சொந்தமான சர்வே எண் 119 (1)ல் சென்னை உயர் நீதிமன்ற ஆணை எண்: நாள் 20.03.2012-ன் படி அடிப்படை வசதியுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க உத்தரவிட்டும் இது நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் உடன் ஆணையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தை இப்பொதுக்கூட்டம் மூலம் வலியுறுத்தப்படுகிறது.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக