நிகழ்ச்சிக்கு தெற்கு பகுதி தலைவர் எ.ஷாநவாஸ் அவர்கள் வரவேற்புரையாற்ற, கோவை மாவட்ட தலைவர் கே.ராஜா உசேன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். சென்னை மாவட்ட தலைவர் ஜெ.முஹம்மத் நாஜிம் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது சிறப்புரையில், "ரமளானில் மட்டுமே தொழுகை, நோன்பு, திருக்குர்ஆனை ஓதுதல், தர்மம் செய்தல் மற்றும் பிற நல்லறங்களை செய்யும் மக்கள் மற்ற மாதங்களில் இவைகளை செய்யாமல் தவிர்ந்து வருவதை வேதனையோடு சுட்டிக் காட்டினார். இது போன்று செயல்படுபவர்கள் ரமளானை வணங்குகிறோமா? அல்லது அல்லாஹ்வை வணங்குகிறோமா? என்று சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அல்லாஹ் ரமளானில் மட்டும் நல்லறங்களை செய்யச் சொல்லவில்லை. மற்ற மாதங்களிலும் தொடர்ந்து நல்லறங்கள் செய்து அல்லாஹ்வின் நேசத்தை பெறக்கூடிய மக்களாக மாறவேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.அப்துல் ரகூஃப் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
பிறகு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழுகையிலும், விருந்திலும் கலந்து கொண்டு அனைவரும் மனநிறைவுடன் திரும்பினர். இதில் ஆயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக