சென்னை: சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ரமழான் மாதத்தில் நடைபெற்ற இக்கலவரத்தில் முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தங்களுடைய எல்லா சொத்துக்களையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கி தங்களது உயிரை காத்துக்கொண்டிருக்கும் அஸ்ஸாம் மக்களுக்காக உதவ வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு முடிவெடுத்தது.
அதன் அடிப்படையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஈத் பெருநாளை முன்னிட்டு தொழுகை முடிந்தவுடன் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் நிதி வசூல் செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. சென்னையிலும் பல்வேறு இடங்களில் கடந்த பெருநாள் மற்றும் அதற்கடுத்த ஜும்மா தினத்திலும் அஸ்ஸாம் மக்களுக்காக நிதி வசூலிக்கப்பட்டது.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக