பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் மக்களுக்கு 65வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
அவர் தன்னுடைய சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் " நாட்டின் நிலவி வரும் பொருளாதார ஸ்திரத் தன்மையற்ற சூழல், விலைவாசி உயர்வால் கேள்விக்குறியாகிப்போன மக்களின் அன்றாட வாழ்க்கை, பொருளாதாரம் ஒரு சிலர்டிஅம் மட்டுமே தேங்குதல், கார்ப்பரேட் கம்பெனிகளின் முறைகேடான அதீத வளர்ச்சி, பழங்குடி, ஆதிவாசிகளின் வாழ்வாதாரங்கள் சுரண்டல், நாட்டில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடத்தப்படும் அரச பயங்கரவாதம், வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் இனமோதல், ஃபாசிஸ சக்திகளின் சதி என சுதந்திர இந்தியா தன்னுடைய சுதந்திர அடையாளத்தை இழக்கச் செய்வதற்கான முயற்ச்சிகள் தொடர்ந்து
நடைபெற்று வருவதைப் போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாடு இன்று உள்ளது.
சமூகங்களை தனிமைப்படுத்துதலும், அவர்களின் உரிமைக்கான போராட்டங்கள் தீவிரவாதமாகப் பார்க்கப்படுவதும் வேதனை தரும் விஷயமாகும்.
இந்த 65வது சுதந்திர தினத்தன்று இதுபோன்ற, ஏற்றத்தாழ்வுகல், மக்களின் கவலைகள், துயரங்களை போக்கி அனைவரும் சமத்துவத்தோடு, பாதுகாப்போடு வாழச் செய்ய வேண்டும் என்ற உறுதிமொழியை இந்த சுதந்திர தினத்த்லு எடுப்போம்' என தனது சுதந்திர தின வாழ்த்துச்செய்தியில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக