சென்னை:
முஸ்லிம் சமூகத்தின் வலிமைக்காவும், முன்னேற்றத்திற்காகவும் பாப்புலர்
ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் பல்வேறு நலதிட்ட பணிகளை மேற்கொண்டு
வருகிறது. சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் ஆற்றி வரும் பணிகளில் "சர்வ
சிக்ஸா கிராம்" என்ற மாபெரும் சேவையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
மேற்கொண்டு வருகிறது. அனைத்து கிராமங்களுக்கும் கல்வியை கொண்டு சேர்க்கும்
வகையில் பல கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு அக்கிராமத்திற்கு தேவையான அனைத்து
அடிப்படை வசதிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொள்ளும்.
தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக திருவள்ளூர் மாவட்டம் திருவேளங்காடு பகுதியிலுள்ள மஹ்மூத்பூர் மற்றும் தீன் நகர் ஆகிய இருகிராமங்களும் தத்தெடுக்கப்பட்டுள்ளது. இச்சேவையை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக கடந்த 21.09.2012 அன்று அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக