புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

அவதூறு பிரச்சாரத்திற்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய அளவில் பிரச்சாரம்

28 செப்டம்பர், 2012


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக நடத்தப்படும்  அவதூறுப் பிரச்சாரங்களை தேசிய செயற்குழு வன்மையாக கண்டித்துள்ளது.

அரசு மற்றும் காவல்துறை - உளவுத்துறை ஏஜென்சிகளைச் சார்ந்த சிலர் வகுப்புவத சிந்தனையுடன் பாப்புலர் ஃப்ரண்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான உரிமைப் போராட்டங்களை சீர்குலைக்கின்றனர். அவதூறுப் பிரச்சாரங்களில்ன் நோக்கம், இந்த பிரிவினரை சக்திப்படுத்துவதற்காக பாடுபடும் இயக்கத்திற்கு எதிரான சூழ்ச்சியாகும். இது அரசியல் சாசனம் கூறும் மதச்சார்பற்ற ஜனநாயக‌ விழுமியங்களை மறுப்பதாகும். லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள இவ்வியக்கத்தின் செயல்பாடுகள் சில சுயநலவாதிகளுக்கு எரிச்சலூட்டியுள்ளது. அதன் விளைவாகவே அவர்கள் இவ்வியகத்திற்கு எதிராக மறைமுக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இத்தகையதொரு சூழலில் (WHY POPULAR FRONT? ) "பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்?" என்ற தலைப்பில் அக்டோபர் 10ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தேசிய அளவிலான பிரச்சாரத்தை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு தீர்மானித்துள்ளது. இப்பிரச்சாரத்தின் வாயிலாக பாப்புல்ர் ஃப்ரண்ட் ஆற்றி வரும் பணிகள், பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான அவதூறுகளின் பின்னணி ஆகியன் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

கூடங்குளம் பிரச்சனை குறித்து மிகுந்த கவலையை தேசிய செயற்குழு வெளியிட்டது. மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கும் பாதுகாப்பை உறுதிச் செய்யுமாறும் தேசிய செயற்குழு அரசை வலியுறுத்தியது.

அஸ்ஸாம் அகதிகள் தங்கள் வீடுகளுக்கும், கிராமங்களுக்கும் திரும்பிச் செல்வதற்கான நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். கலவரத்திற்கு காரணமானவர்கள் மற்றும் பணிகளில் தவறிழைத்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்க சிறப்பு நீதிமன்றத்தை நிறுவ வேண்டும்.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நாட்டின் பொருளாதார கட்டமைப்பிற்கும் கடுமையான பாதிப்புகளை உருவாக்கும் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இச்செயற்குழு கூட்டத்திற்கு தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் அறிக்கையை வாசித்தார். துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010