பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் 2012 செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் கீழ்கானும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. மாநில தலைவர் A.S. இஸ்மாயில் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் A. ஹாலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் S. பைசல் அஹமது செயற்குழு உடனே நிஜாம் முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்
1. கடந்த ரம்ஜான் பெருநாள் தினத்தன்று அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைப்பதற்க்காக தமிழகம் முழுவதும் மசூதிகளில் அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக வசூல்செய்யப்பட்டது. இதில் மொத்தம் ரூபாய் 39,95,121 வசூல் செய்யப்பட்டது. இத்தொகையை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைமையிடம் ஒப்படைப்பது என்றும் அஸ்ஸாம் நிவாரணமுகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக தமிழகத்திலிருந்து ஒரு குழு நேரடியாக செல்வது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
2. பாப்புலர் ஃப்ரண்ட்டின் சார்பாக ”சட்டப்படி பினையில் விடு, அப்பாவிகளை விடுதலை செய்” என்ற தலைப்பில் - சிறையில் வாடும் அப்பாவி கைதிகளை விடுவிக்கவேண்டியும், UAPA போன்ற மனித உரிமைக்கெதிரான சட்டங்களை உடனே நீக்க வலியுறுத்தியும் தேசிய பிரச்சாரம் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடந்து வருகின்றது. தமிழகத்தில் இந்த பிரச்சாரத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதும் என்றும், இதில் தமிழகத்தில் மொத்தம் 14 பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்றும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனைக்கூட்டங்கள்
நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் செப்டம்பர் 15-ந் தேதி நடைபெறும் மனிதச்சங்கிலி போராட்டத்தை வெற்றியடைச்செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
3. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI)-கட்சி சார்பாக அக்டோபர் 2 முதல் 17 வரை தீவிர மது ஒழிப்பு பிரச்சாரம் மற்றும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டம் வெற்றி பெற பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக முழு ஒத்துழைப்பு கொடுப்பது என்றும் அனைத்து போராட்டங்களிலும் திரளாக கலந்து கொள்வது எனவும் முடிவுசெய்யப்பட்டது.
4. வரக்கூடிய செப்டமபர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாளில் 7 வருடம் கழிந்த ஆயுள் சிறைக்கைதிகளை கருணை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்யவேண்டும் என இக்கூட்டம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
5. இவ்வருடம் பருவமழை பொய்த்ததால் நெல்லை மாவட்டத்தின் விவசாய நிலங்கள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக உடனே அறிவிக்க வேண்டும், என தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக