05.09.2012 அன்று விருதுநகர் மாவட்ட முதலிப்பட்டி பட்டாசு ஆலையில் நடைபெற்ற விபத்தில் 38 பேர் பலியாகியிருப்பதும் 70 பேர் காயமடைந்திருப்பதும் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் இது போன்ற விபத்துக்கள் நடந்து கொண்டிருந்தும் அரசு இவ்விஷயத்தில் போதிய கவனத்தை செலுத்தி, விதிமுறைகளை கடினமாக்கியிருந்தால் இதுபோன்ற விபத்துக்களை தவிர்த்து இருக்கலாம். வருமுன் காப்பதுதானே நல்ல ஆட்சியாளர்களுக்கு அடையாளம்!
இனியாவது அரசு மற்றும் அதிகாரிகள் பட்டாசு ஆலைகள் விஷயத்தில் அதீத கவனம் செலுத்தி விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை போன்ற சட்டங்களை இயற்றுவதன் மூலம் இது போன்ற விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பிறரை மகிழ்ச்சியாக வைப்பதற்காக தங்களின் வாழ்வில் சோகங்களை சுமக்கும் பட்டாசு ஆலை தொழிலாளிகளின் நிலை இனியாவது மாற வேண்டும் என்று தெரிவித்த பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக தனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
மேலும், காயமடைந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நேற்று உதவி செய்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன் தேவைப்படும் பட்சத்தில் மதுரை, விருதுநகர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக