புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

உங்கள் அரசியல் சண்டைக்கு எங்களை பலியாக்காதீர்!

9 செப்டம்பர், 2012

மீண்டும் ஒரு ஏமாற்றத்தை நம்மால் தாங்க முடியாது. 

கோடி ரூபாய் செலவழித்து பல நாட்கள் கஷ்டப்பட்டு, கணக்கு  காட்டாத பல கருப்பு பணங்கள் வெளியே விட்டு, அடிதடி, பிரச்சாரம், விளம்பரம், என பல வகையான பரபரப்புக்கு மத்தியில் நடந்து முடிக்கப்படும் தேர்தல் என்ற கச்சேரிக்கு பின்னால் அரங்கேற்றப்படும் ஆட்சி மாற்றங்களும், நம்மை ஆள்பவர்களுமால் மக்கள் நலத்திட்டங்களுக்கும், நமது நாட்டின் முன்னேற்றங்களுக்கும்  ஒன்றும் பிரோயோஜனமில்லை என்ற விரக்தியில் இருந்த என்னைப் போல் சாமானியர்களுக்கு

ஆறுதல் அளிக்க கூடியதாய் இருந்தது மத்திய தணிக்கை குழுக்களால் (சி  ஜி) அண்மையில் கொடுக்கப்படும் அறிக்கையின் மூலம். ஏநென்றால் ஆட்சியில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி நாங்கள் எங்கள் கடமையை  செய்தே தீருவோம். நாட்டின் செல்வங்கள் வீனாக்கப்படுவதும், விரயமாக்கபடுவதையும், நஷ்ட்டப்படுத்தபடுவதையும் மக்கள் மன்றங்களில் சமர்ப்பிப்போம். உண்மையை உறக்க சொல்வோம் என்பது போன்ற நடவடிக்கைகள் நமக்கு ஒரு ஆறுதலாய் இருந்தது.

ஆம் சமீபத்திய சிஏஜியினுடைய அறிக்கைகள் முழுவதும் இந்தியாவில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. முதலில் 2 ஜி ஸ்பெக்ட்ராம் என்ற தொலை தொடர்பு துறையின் மூலம் எவ்வளவு லாபங்கள் இளக்கபட்டுள்ளோம் என்ற செய்தி நம்மையெல்லாம் வாய்பிளக்க வைத்துள்ளது. அந்த அளவுக்கான நஷ்டங்கள், அதனாலான ஆட்ச்சியாளர்களுக்கான லாபங்களின் கணக்குகள் நம்மை ஆச்சரியபடுத்த வைத்தது மட்டுமல்லாமல் இந்திய மக்களுக்கு சோனியாஜி,அத்வானிஜி என பெயருக்கு பின்னால் ஜி போட்டு அளித்த மக்களுக்கு இது போன்ற ஒரு ஜி யும் உள்ளது என்பதே தற்போதுதான் தெரியவந்தது.

அது போல்தான் தற்போது பாராளுமன்றத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதும் வரலாறு காணாத அளவுக்கு நாட்கணக்கில் பாராளுமன்றம் முடக்கம் செய்யப்பட்டு வருவதுமான நிலக்கரி ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட நஷ்டங்களும் அதனால் இந்தியாவில் கட்சி நடத்தபடுபவர்களுக்கு எவ்வளவுக்கெல்லாம் கிடைக்கிறது என்பதும் நமக்கு  ஆச்சரியமளித்தன.
ஆனால்  இதில் இன்னொரு  வருத்தமும் உள்ளது. நாட்டிற்கு நஷ்டம் ஏற்ப்பட்டு விட்டதே என அங்கலாய்த்து எந்த திட்டத்தால் நாட்டிற்கு   அறிக்கை வழங்கப்பட்டு அதன்  மீது நடவடிக்கை எடுக்க  ஆட்சியாளர்களுக்கு பரிந்துரைக்கபட்டதோ  அந்த சம்பவமே பல நாட்களாக பாராளுமன்றம் முடக்கம் செய்யப்பட்டு பலகோடி ரூபாய் வீண் செலவுக்கும் திட்டங்கள் முடக்கபடுவதர்க்கும் காரணமாக அமைந்து விட்டதே  என்ற வருத்தம்தான்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010