புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை - தாம்பரத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்

14 டிசம்பர், 2012

காஞ்சிபுரம்: பாபரி மஸ்ஜித் சங்பரிவார பாசிஸ்டுகளால் திட்டமிட்டு இடிக்கப்பட்டு 20 வருடங்கள் கழிந்தும் அதில் இன்றளவும் நீதி மறுக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. டிசம்பர் 6 தினத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஃபாசிச எதிர்ப்பு தினமாக அனுசரித்து 'பாபரி மஸ்ஜித் என்றும் நம் நினைவில்' என்ற தலைப்பில் நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெறுகிறது.


தமிழகத்தில் டிசம்பர் 6 அன்று "பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டு ! குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு !!" எனும் முழக்கத்தோடு "பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை" என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் , கருத்தரங்குகள் , போஸ்டர் பிரச்சாரம் மற்றும் 1 இலட்சம் துண்டு பிரசுரங்கள் விநியோகம் என பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெறுகிறது .

அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக 06.12.2012 அன்று மாலை 7.00 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் மார்கெட் மஸ்ஜித் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது . இப்பொதுக்கூட்டதிற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அஹமது முஹைதீன் தலைமை தாங்கினார் . பாப்புலர் ப்ரண்டின் சலாஹுதீன் வரவேற்புரையாற்றினார்.

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலவி.செய்யது இப்ராஹீம் உஸ்மானி மற்றும் SDPI கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள் . இதில் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.




0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010