நடிகர் கமலஹாசன் தயாரித்து இயக்கி நடித்து வெளியாக உள்ள விஸ்வரூபம் திரைப்படம் குறித்து முஸ்லிம் சமுதாயத்தினரிடையே கடுமையான ஐய்யங்கல் ஏற்பட்டுள்ளனர்.
இதனை நிவர்த்தி செய்யும் விதமாக தமிழ் நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இந்த விவகாரத்தை அணுகி வருகிறது. அதன் அடிப்படையில் நடிகர் கமலஹாசன் அவர்களை இரு முறை நேரில் சந்தித்து முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளை விளக்கியதும் கமலும் தமது நேரத்தை ஒதுக்கி முஸ்லிம்களின் உணர்வுகளை உள் வாங்கி கொண்டார். அவருடைய கருத்துக்களையும் பதிவு செய்தார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உணர்வுகலை காயப்படாமல் பேச்சுவார்த்தைகள் முடிந்தன. இப்படம் திரையிடப்படும் முன் முஸ்லிம் தலைவர்களுக்கு திரையிட்டு காட்டப்படும் என்று உறுதி மொழியை கமலஹாசன் வழங்கினார்.
இதற்கிடையில் தமிழக அரசு உள்துறை செயலாளரிடம் இத்திரைப்படத்தை குறித்து கோரிக்கை மனு கூட்டமைப்பு சார்பாக கொடுக்கப்பட்டது. தமிழக அரசு உள்துறை செயலாளர் கூட்டமைப்பு தலைவர்களை நேரில் அழைத்து மனுவில் கூறப்பட்ட கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என உறுதி அளித்துள்ளார். எனவே கமலஹாசன் இத்திரைப்படத்தை திரையிட்டு காட்டும் வரை முஸ்லிம் சமுதாயம் எந்த வித அனுமானத்திற்கும் இடம் அளிக்க வேண்டாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இச்சந்திப்பின் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது ஃபக்ருதீன் அவர்கள் கலந்து கொண்டார்.
வலமிருந்து (அஹமது ஃபக்ருதீன், மன்சூர் காஷிஃபி, உமர் ஃபாரூக், முனீர், ஹனீஃபா, அப்துல் சமது, சிக்கந்தர்) |
இச்சந்திப்பின் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது ஃபக்ருதீன் அவர்கள் கலந்து கொண்டார்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக