புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் - கமிஷனரை சந்தித்தனர் இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள்

23 ஜனவரி, 2013


சென்னை : முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் படத்தை தடை செய்யக் கோரி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர்கள் 22.01.2013 அன்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்தனர். கமிஷனர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்று (23.01.2013) இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் உள்துறை செயலாளரை சந்திக்க உள்ளனர் .

இச்சந்திப்பின்போது இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தொண்டு அனீபா , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல், மாநில பொதுச்செயலாளர் ஏ.காலித் முஹம்மது , மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அஹமது பக்ருதீன் , SDPI கட்சியின் மாநில செயலாளர் அப்துல் சத்தார் , வடசென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சா , சட்டமன்ற உறுப்பினர் M.H.ஜவாஹிருல்லாஹ் , த.மு.மு.க மாநில தலைவர் ஜே.எஸ்.ரிபாயி , INTJ மாநில தலைவர் S.M.பாக்கர் , மாநில துணைத்தலைவர் முனீர் அஹமது உட்பட இஸ்லாமிய கூட்டமைப்பை சார்ந்த பல தலைவர்கள் உடனிருந்தனர் .

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் அவர்கள் பேட்டியளித்த போது

1 விமர்சனங்கள்:

பெயரில்லா சொன்னது…


விஸ்வரூபம் கமலஹாசனின் பரிணாம வளர்ச்சி!






Jan 24: நடிகர் திலகம் சிவாஜி கணேஷனுக்கு அடுத்து, தமிழ் சினிமா உலகின் தலை சிறந்த நடிகராக கமலஹாசன் தனது நடிப்பு திறமையை பல்வேறு படங்களில் வெளிப்படுத்தியவர்.

உயர் ஜாதியை சேர்ந்த இவர், தன்னை கடவுள் மறுப்பாளராகவும், நடுநிலையாளராகவும், முற்போக்கு சிந்தனையாளராகவும் காட்டி கொண்டதன் மூலம், தமிழக மக்கள் பெரும்பான்மையினரின் நன்மதிப்பை பெற்ற நடிகர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுது பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தவர். மும்பை கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து கண்ணீர் விட்டு, அதற்காக அப்போதைய பிரதமர் நரசிம்மராவை சந்தித்து பேசியவர் என்று சிறுபான்மை மக்களின் நண்பனாக தன்னை காட்டி கொண்ட கமலிடம் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள மாறுதல்கள்.

மாறுதல்(1) ஹேராம் திரைப்படம்: இந்த படத்தில் முஸ்லிம் வெறியர்களால் தன் மனைவி கற்பழித்து கொல்லப்பட்டதால் தான் இந்து தீவிரவாதியாக மாற நேர்ந்ததாக ஒரு கருத்தை சொல்வார். இது உண்மைக்கு எதிரான திரிபுவாதம் இந்தியாவில் நடந்த கலவரங்களில் இந்து பெண்கள் முஸ்லிம்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்ததாக வழக்குகள் இல்லை. அதேநேரம் முஸ்லிம் பெண்கள் ஆர்.எஸ்.எஸ். பேன்ற ஹிந்துத்துவா இயக்கங்களால் கூட்டமாக கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

மாறுதல்(2): உன்னைப்போல் ஒருவன்: கோவை குண்டு வெடிப்பு சம்பவம் 1998ல் நடந்தது. குஜராத் கலவரம் 2002ல் நடந்தது. குஜராத் கலவரத்தில் முஸ்லிம் ஒருவருடைய மூன்றாவது மனைவி (வயது 16) உயிரோடு எரிக்கப்பட்டதால், அவர் பயங்கரவாதியாக மாறி கோவையில் குண்டு வைத்ததாக சொல்லியிருப்பார். இந்த மிகபெரிய வரலாற்று புரட்டை கமலஹாசன் அறியாமல் செய்திருப்பார் என்று சொல்ல முடியவில்லை.

மாறுதல்(3) விஸ்வரூபம்: இந்த படத்தில் முஸ்லிமாக நடிக்கும் கமலஹாசன் தன் மனைவியை வெளி நாட்டினருக்கு கூட்டி கொடுப்பார். அல்குரானை தீவிரவாதத்தை போதிக்கும் நுலாகவும், தொழுகை உட்பட முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தீவிரவாதத்திற்கு ஊக்கம் அளிப்பதாகவும், கோவை, மதுரை போன்ற நகரங்கள் சர்வதேச தீவிரவாதிகளின் புகலிடம் போல சித்தரித்துள்ளார்.

இதுவரை முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரித்தவர் இப்பொழுது அவர்கள் பொண்டாட்டியை கூட்டி கொடுக்கும் அளவுக்கு ஒழுக்கம் கெட்டவர்கள் ஆகவும், அவர்கள் புனிதமாக மதிக்கும் வேத நூல் குரானை அசிங்கப்படுத்தியும், இனி முஸ்லிம்கள் தொழுகைக்கு செல்வதை மாற்று மதத்தினர் தவறாக பார்க்கும் அளவுக்கு படத்தை எடுத்து பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறார். அர்ஜூன், விஜயகாந்த் படங்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு முஸ்லிம்கள் மீது வெறுப்பு உண்டாக்கியிருக்கிறார். இப்படி படம் எடுத்தது மட்டும் இல்லாமல் இதற்க்கெல்லாம் தன்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று வேறு கூறியிருக்கிறார்.

இந்தியாவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கு 2010 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் பின்னணியில் இருந்த ஹிந்துத்துவாவினர் கைது செய்யப்பட்டதும், ஹிந்துத்துவாவினர் காடுகளில் பயிற்சி எடுத்த தீவிரவாத முகாம்களை தேசிய புலனாய்வு துறையினர் தேடிவருவதும் கமலுக்கு தெரியாதா? இந்த குண்டு வெடிப்புகளை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் ,பாரதிய ஜனதா கட்சி என்று உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டி உள்ள இந்நிலையில் கமலஹாசனின் இந்த முஸ்லிம் விரோத திரைப்படம் அவற்றை மறைக்க அல்லது நியாப்படுத்த உருவாக்கப்பட்டதாகவே தெரிகிறது.


*மலர் விழி*

www.sinthikkavum.net

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010