புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

பாலியல் குற்றங்கள் தொடர்பாக கேம்பஸ் ஃப்ரண்டின் கோரிக்கை

3 ஜனவரி, 2013

அண்மையில் டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் இறந்தார். அதே போல் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 7 ஆம் வகுப்ப்பு மாணவி புனிதா பலாத்காரம் செய்ய முயற்சிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்தும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க கோரியும் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய மாணவ இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டங்களை நடத்தியது.

 தமிழகத்தில் கடந்த டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகளை விரைந்து விசாரித்து நீதி வழங்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் எனவும் பணபலம் மற்றும் அதிகார குறுக்கீடுகளால் பாலியல் பலாத்கார சம்பவங்களில் வழக்கு பதிவு செய்ய்யப்படாமலும் முறையாக விசாரணை செய்ய்ப்படாமலும் குற்றவாளிகள் தப்புவதை தடுக்க காவல்துறையில் சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசிற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை வைத்தது.

நேற்றைய தினம் தமிழக அரசு, பாலியல் குற்றங்கள விரைந்து விசாரித்து தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் பாலியல் குற்ற வழக்குகளை காவல் ஆய்வாளரே புலன் விசாரணை மேற்கொள்வார் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பாலியல் குற்றங்கள விரைந்து விசாரித்து தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது. கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசிற்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறது.

பாலியல் பலாத்கார வழக்குகளில் காவல் ஆய்வாளரே புலன் விசாரணை மேற்கொள்வதினால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை. நடைமுறையில் இதுபோன்ற குற்றங்களில் காவல் ஆய்வாளர்களே வழக்குப் பதிவு செய்து புலன் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் பணபலம் மற்றும் அதிகார குறுக்கீடுகளால் பல பாலியல் பலாத்கார சம்பவங்கள் முறையாக வழக்கு பதிவு செய்யப்படாமலும் புலன் விசாரணை மேற்கொள்ளப்படாமலும் குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர்.

எனவே கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரியிருந்தபடி பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுப்பட்டோர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவதை தடுக்க காவல்துறையில் சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010