புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் கடைபிடிக்கப்படும்

21 ஜனவரி, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு பிப்ரவரி 17ஆம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக அறிவித்துள்ளது. 2007ஆம் ஆண்டு இதே தினத்தில் பெங்களூரில் நடந்த வலிமையான இந்தியாவை உருவாக்க நடந்த மாநாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய இயக்கமாக இந்திய மக்களுக்கு அர்பணிக்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டுவந்த இயக்கங்கள் ஒன்றிணைந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற தேசிய இயக்கமாக உருவெடுத்தது. இந்தியா முழுவதும் உள்ள பாப்புலர் ஃப்ரட்ண்டின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவக்கப்பட்ட நாளை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக பிப்ரவரி 17 அன்று கொண்டாடுவார்கள். இந்த நடைமுறை வரும் ஆண்டுகளில் இதே தினத்தில் கடைபிடிக்கப்படும்/

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் யூனிட் அளவில் அனைத்து இடங்களிலும் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும். மாவட்ட அளவில் "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் பேரணியும் அதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெறும்.

இயக்கம் தேசிய அளவில் துவக்கப்பட்ட கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வடக்கும், மேற்கு, வட-மேற்கு மாநிலங்களில் கால் பதித்துள்ளது. உறுப்பினர்களில்ன் எண்ணிக்கையும், யூனிட்டுகளின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்டின் தலைமையகம் பெங்களூரில் இருந்து புதுடெல்லிக்கு மாற்றப்பட்டது. 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த சமூக நீதி மாநாடு, வட இந்தியாவில் அமைப்பின் வளர்ச்சியை துரிதப்படுத்தியுள்ளது. ஃபாசிஸ வகுப்புவாத சக்திகளின் அச்சுறுத்தல், ஓரங்கட்டப்பட்ட மக்கள் அரசியலில் சக்தி பெருதல், கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, தலித், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல், கறுப்புச் சட்டங்களை ரத்து செய்தல், சட்டவிரோத தடுப்பு காவல்களை முடிவுக்கு கொண்டு வருதல்,  பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை பல்வேறு பிரச்சாரங்கள் வாயிலாக ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளங்களில் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் படிப்படியாக ஏற்படுத்தி அவர்களை பாப்புலர் ஃப்ரண்ட் முன்னனிக்கு கொண்டு வந்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட்  இந்த தேசத்திற்கு அளித்துள்ள தனித்துவ பங்களிப்பாக ஒரு பரந்த நெட்வொர்க்கின் கீழ் அடிமட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கடமை உணர்வுமிக்க தொண்டர்கள் வெகுஜன போராட்டங்களிலும் சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

இவ்வாண்டு, பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் " " (மக்கள் உரிமைகளுக்காக ஒன்றினைவோம்) என்ற முழக்கம் முன்னிலைப்படுத்தப்படும். துண்டு பிரசுரங்கள், சுவரோட்டிகள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக இச்செய்தி மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும். மத்திய அரசு கடைபிடித்து வரும் நவீன தாராளமய பொருளாதார கொள்கையும், நமது உள்நாட்டு விவகாரங்களில் நவீன காலனி ஆதிக்க சக்திகளின் தலையீடும் இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தேவைகளை கூட ஆபத்தில் சிக்க வைத்துள்ளது. வளர்ச்சியின் ஏற்றத்தைக் குறித்து பெருமை பேசும் வேளையில் பெரும்பாலான மக்களுக்கு குடி நீர் கூட சுதந்திரமாக கிடைப்பதில்லை. மேலும் உணவும், எரிபொருள், ஆடை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக அவர்கள் லாப வெறியர்களான பெரும் நிறுவனங்களின் கருணையை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு இயந்திரங்கள் ஆணவத்துடன் நடந்து கொள்கின்றன. சட்ட அமலாக்க ஏஜென்சிகள் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக சட்டத்தையே உடைப்பவர்களாக மாறியுள்ளனர். ஒடுக்கப்பட்ட  மக்களுக்காக அரசு செய்யும் சிறிய திட்டங்களின் பலனை கூட இடைத்தரகர்களான முக்கிய அரசியல் கட்சிகளின் அரசியல்வாதிகல் தட்டிப்பறிக்கின்றனர். கவலைக்குரிய இத்தகைய சூழலில் மக்களின் உரிமைகளை மீண்டும் நிலை நாட்ட ஜனநாயகரீதியான எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வரும் இயக்கங்கள் தங்களிடையே விசாலமான கூட்டணியை கட்டியெழுப்பி ஒரு தேசிய இயக்கத்தை வழி நடத்துவது அத்தியாவசியமாகும். மக்கள் உரிமைகளுக்கான ஒருங்கிணைந்த நடவடிக்கை குறித்த செய்தியை பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் கொண்டு சேர்க்குமாறு அதன் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு அழைப்பு விடுத்துள்ளது.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010