ஜெய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே இந்துத்துவ தீவிரவாதிகலை தோலுரித்து காட்டியதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் கே.எம். ஷரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள், அரசியல் படுகொலைகள் மற்றும் மதக்கலவரங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆல் தூண்டிவிடப்பட்ட இந்துத்துவ தீவிரவாத இயக்கங்களே காரணம் என்பதை கடந்த பல ஆண்டுகளாக பிரசித்திப்பெற்ற அரசியல் தலைவர்கள், அறிவு ஜீவிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இந்த தேசத்திலுள்ள மக்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றனர்.
ஆனால், அரசாங்கமோ அரசியலில் பழிவாங்கப்படுவோம் என்ற பயத்தினாலோ அல்லது மென்மையான இந்துத்துவத்தை நாமும் கடைபிடிக்க வேண்டும் என்ற காரணத்தினாலோ நாட்டின் சமூக ஒற்றுமையை சுக்கு நூறாக்கி வரும் இந்த காவி பயங்கரவாதம் குறித்த புகார்களுக்கு செவிசாய்க்கவில்லை.
காவி பயங்கரவாதத்திற்கு ஒத்து ஊடும் தேசியளவிலான ஊடகங்கள் மற்றும் காவல்துறை, உளவுத்துறையில் உள்ள உயர் அதிகாரிகளின் துணையுடன் ஆர்.எஸ்.எஸ் நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளுகு முஸ்லிம்கள் மீது பழியை சுமத்தியதுடன் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை மகிழ்வுடன் கைது செய்து அவர்கலை துன்புறுத்தி செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்து சிறைகளில் அடைத்துள்ளனர்.
இந்த தேச விரோத குற்றங்களை காரணம் காட்டி பல காட்டு மிராண்டித்தனமான பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால்சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, ஐதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு உட்பட டஜனுக்கு மேற்பட்ட குண்டு வெடிப்புகள், படுகொலைகள் ஆகியவற்றிற்கு காரண கர்த்தா இந்துத்துவ இயக்கங்கள் தான் என்பதை என்.ஐ.ஏ கண்டறிந்துள்ளது.
இது விஷயத்தில் தயக்கங்களை களைந்து உள்துறை அமைச்சர் சார்பற்ற மற்றும் உறுதியான நடவடிக்கைகள் மூலம் இந்துத்துவ தீவிரவாத வலைப்பின்னல்களை அடையாளம் கண்டு போலீஸ் மற்றும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது. அதே போன்று உளவுத்துறையின் தவறான தகவல்களினால் பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலிகாடாக்கப்பட்டுள்ளனர் என்பதை அரசு மனமுவந்து ஏற்றுக்கொண்டு அவர்களை விடுவிப்பதற்கும் பிணை வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

3 விமர்சனங்கள்:
சதி செயல்களின் பின்னணியில் யார்? உள்துறை அமைச்சர் பரபரப்பு!
Jan 21: இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் பயங்கரவாத சதிகளுக்கு BJP, RSS போன்ற இந்துத்துவா அமைப்புகள்தான் காரணம் என மத்திய உள் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மத்திய உள் துறை அமைச்சர் அளித்த பேட்டி: சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, மலோகான் குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாத தாக்குதல்களை இந்து அமைப்புகள்தான் நடத்தி உள்ளது. இதற்காக அவர்கள் காடுகளில் சிறப்பு முகாம்களை அமைத்து சதி செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது என்றார்.
சிந்திக்கவும்: உள்துறை அமைச்சர் இந்த பேட்டி வழியாக இவர்ளது பயங்கரவாத முகம் முதல் முறையாக வெளி உலகிற்கு வந்துள்ளது. இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு தொடர்பிருக்கிறது என்று உள்துறை அமைச்சரே பகிரங்கமாக தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் இருந்து செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சி போன்ற அமைப்புகள் தடை செய்யப்படுமா?
thanks : www.sinthikkavum.net
ரகசிய முகாம்களை கண்டு பிடிக்க காடுகளில் தேடுதல் வேட்டை!
Jan 20/2013: இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் இருந்து செயல்பட்டுள்ளன என்கிற உண்மை தேசிய புலனாய்வு துறை கண்டுபிடித்தது.
1). மலேகன் குண்டு வெடிப்பு: மும்பையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில உள்ள மலேகனில் செப்டம்பர் 8, 2006 - வெள்ளிக்கிழமை பகல் 2.00 மணியளவில் முஸ்லிம்கள் தொழுகை நடுத்தும் இடமும், அடக்கம் செய்யப்படும் கல்லறைகளுக்கு அருகில் நிகழ்த்தப்பட்ட தொடர் பயங்கர குண்டு வெடிப்பில் 38 பேர் உயிரிழந்தனர் 125க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். முடமாகினர். மலேகன் நகரமே ரத்தமயமானது பிய்ந்துப்போன சதைகளுடன் மனிதப் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.
2). சம்ஜோதா ரயில் குண்டு வெடிப்பு: இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த இயக்கப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் பிப்ரவரி 19 அன்று வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்ததில் பெண்கள் குழந்தைகள் உட்பட 68 பேர் கொல்லப்பட்டனர். எங்கு திரும்பினாலும் இரத்த வெள்ளம், கை, கால் துண்டிக்கப்பட்டவர்கள் பல நூறு பேர்கள் என்று அந்த இடமே கோரமாகி போனது.
3). மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு: மக்கா மஸ்ஜித், ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரில் முகலாயர்களின் கட்டிட கலையில் 1694 கட்டப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த பள்ளியில் 2007 மே 18ம் தேதி வெள்ளி கிழமை முஸ்லிம்கள் தொழுகை முடித்து வெளிவரும் பொழுது குண்டு வெடித்தது இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். பல நூறு பேர் காயம் அடைந்தனர்.
4). அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் உள்ள அஜ்மீர் தர்காவில் 2007 அக்டோபர் 11 தேதி முஸ்லிம்களின் ரமலான் நோன்பு மாலை 6.12 pm க்கு குண்டு வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர். 50 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த குண்டுகள் வெடித்தது முஸ்லிம்களின் மசூதிகளில், முஸ்லிம்கள் அதிகமாக பயணித்த ரயிலில் இதில் செத்தது அனைவரும் முஸ்லிம்களே. இப்படி இருந்தும் காவல்துறை இந்த வழக்கில் முதலில் கைது செய்தது முஸ்லிம்களைத்தான் பின்னர் இந்த வழக்கு 2010 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னரே இந்த குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா பயங்கரவாத சக்திகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சுவாமி அசிமானந்தா, பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர், இந்திய ராணுவ லப்டினட் கர்னல் புரோகித், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர் ஜோசி, மற்றும் ராஜேஷ் சவுத்திரி, சமந்தர் சிங், கேரளாவை சேர்ந்த சுரேஷ் நாயர், ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக பிடிபட்டுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய பல ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு துறை தேடிவருகிறது.
இந்தியாவில் நடந்த இந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் அதன் துணை அமைப்புகளான, பஜ்ராங்க்தல், அகில பாரதிய வித்தியாதி பரிசத் ( ABVB) இந்து ஜாக்ரன் மன்ஞ்ச் ஆகிய இயக்கங்களின் தொடர்புகள் வெளிவந்தன. இந்த வழக்கில் பிடிபட்டு சிறையில் இருக்கும் பயங்கரவாதிகள் அனைவரும் மேற்கூறிய இயக்கங்களில் முக்கிய பங்கு வகித்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது.
இந்நிலையில் இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் சம்மந்தப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் ரகசிய முகாம்களை கண்டுபிடிக்க மத்தியபிரதேச மாநிலத்தின் தேவாஸில் உள்ள காட்டுப்பகுதிகளில் தேசிய புலனாய்வு ஏஜன்சி தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த குண்டு வெடிப்புகளை நடத்துவதற்கு முன்பு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் காடுகளில் உள்ள தங்களது ரகசிய முகாம்களில் சோதனை நடத்தியிருந்தனர்.
எனவே இதுத்தொடர்பான ஆதாரங்களை மற்றும் ரகசிய முகாம்களை கண்டுபிடிக்க தேசிய புலனாய்வு துறை காடுகளில் கடும் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. இந்த வெடிக்குண்டு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாக திகழ்ந்தவரும் ( குண்டு வெடிப்பில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பெயர் வெளிவராமல் இருக்க) ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர் மற்றும் இதற்க்கு பண உதவி செய்தவருமான சுனில் ஜோசியை கொன்ற பல்பீர் சிங்கையும் தேசிய புலனாய்வு துறை இந்த தேடுதல் வேட்டைக்கு அழைத்து வந்திருந்தது.
thanks www.sinthikkavum.net
ரகசிய முகாம்களை கண்டு பிடிக்க காடுகளில் தேடுதல் வேட்டை!
இந்தூரில் மண்டல்வாடா கிராமத்தில் இருந்து கடந்த திங்கள் கிழமை பல்பீர் சிங் கைது செய்யப்பட்டான். ஜோஷியின் நெருங்கிய நண்பனும், கொலையில் குற்றவாளிகளில் ஒருவனுமான ஜிதேஷ் பட்டேலின் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது. பல்பீர் சிங்கின் வீட்டில் இருந்து 9 MM பிஸ்டலின் தோட்டக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் மீதமுள்ள தோட்டக்களை உபயோகித்து ஜோஷி கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
குராதியாராவு காட்டுப் பகுதியில் இந்த சோதனை நடந்தது. மேலும் தேவாஸின் தலைநகரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள "மோ" காட்டுப் பகுதியில் இன்னொரு சோதனை நடந்தது.. ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் ரகசிய புகலிடமாக திகழும் தீபால்பூரில் இருந்து முன்னர் கைதுச் செய்யப்பட்ட கமால் சவுகான் என்ற தீவிரவாதியை அழைத்து வந்து இங்கு சோதனை நடத்தப்பட்டது.
thanks :www.sinthikkavum.net
கருத்துரையிடுக