பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் இந்திய சினிமா திரைப்பட தனிக்கைகுழுவை மத்திய அரசு ஒழுங்குபடுத்தக்கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 21.01.2013 அன்று மாலை 4:30 மணியளவில் சென்னை மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நூறாண்டுகளை கடந்து நிற்கும் இந்திய சினிமா துறையில் சிறுபான்மை சமூக மக்களுக்கு எதிரான கருத்துக்கள் பெருமளவில் புகுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக அவதூறு கதைகளை கட்டவிழ்த்துவிடுவதும், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கை தொடந்து சினிமாத்துறையிலுள்ள சில திரைப்பட இயக்குனர்கள் கடைபிடித்து வருகின்றனர். இது சிறுபான்மை சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே அத்திரைப்படம் எச்சமூக மக்களை பாதிக்காத வகையில் இருக்க திரைப்பட தனிக்கை குழு முறையாக அதனை தனிக்கைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால் இவ்வகையான திரைப்படங்களை தடைவிதிக்காமல் அதனை வெளியிடப்படுவதை காணும்போது தனிக்கைகுழுவின் அலட்சியப்போக்கை எடுத்துக்காட்டுகிறது. எனவே மத்திய அரசு தனிக்கைகுழுவை முறையாக ஒழுங்குபடுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது.
இந்த ஆர்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் ஏ. காலித் முஹம்மது மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது ஃபக்ருதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக