நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு, உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு தடை விதித்துள்ளது.
இஸ்லாமியர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நடிகர் கமல்ஹாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார். இதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு முன்பு மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி எலிப்பி.தர்மாராவ், அருணா ஜெகதீசன் ஆகியோர் கொண்டு முதன்மை அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி வாதிடுகையில், விஸ்வரூபம் படத்தால் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் இதனால் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழக அரசே சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை தூண்டுவிடுவதாக குற்றம்சாற்றினார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்ததோடு, பட விவகாரம் குறித்து வரும் 4ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
உயர் நீதிமன்றம் தடையால் விஸ்வரூபம் படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கமலஹாசன் தான் தமிழ் நாட்டை விட்டே போகப்போவதாகவும், தான் மனதளவில் மிகவும் வேதனைப்படுவதாகவும் பத்திரிக்கையாளர்களிடம் கூறிவருகிறார். சகலகலா வல்லவனாக, உலக நாயகனாக உலா வரும் கமலஹாசனால் இயற்றப்பட்ட இதுபோன்ற நச்சுக்கருத்துள்ள படம் வெளியானால் கோடிக்கணக்கான முஸ்லிம்களின் உணர்வுகள் புண்படும் என்பதை மட்டும் அவரால் ஏன் புரிந்து கொள்ள இயலவில்லை? "உன்னைப்போல் ஒருவன்" என்ற படத்திற்கு பின்னர் இது போன்று முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் திரைப்படம் எடுக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை காற்றில் பரக்க விட்டதேன்....?

1 விமர்சனங்கள்:
KAMAL HASSAN OORAI VITTU POVADHAAL YARUKKUM YENDHA VARUTTHAMUM ILLAI.
A.SULAIMAN SAIT
கருத்துரையிடுக