"விஸ்வரூபம்" பெயருக்கு ஏற்றது போன்று தான் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கமலஹாசன் தெரிந்தோ தெரியாமலோ இப்படத்திற்கு ஏற்றதாகவே பெயரை சூட்டியுள்ளார். திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே டி.டி.ஹெச் தொடர்பாக சர்ச்சைகள், துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் படத்திலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளனவா என்ற சந்தேகம் என படிப்படியாக விஸ்வரூபம் எடுத்தது கமலின் விஸ்வரூபம். படத்தை இஸ்லாமிய தலைவர்களுக்கு போட்டுக்காட்டியது அதனை தொடர்ந்து தடை செய்யக்கோரி மனு அளித்ததை தொடர்ந்து தமிழக அரசு படத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து முறையிட்ட கமல் தரப்பினருக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய மீண்டும் விஸ்வரூபத்திர்கு தடை.
இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் இருந்ததால் முஸ்லிம்கள் இப்படத்தை எதிர்த்தார்கள். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையோ இது தமிழக அரசுக்கு கமல் தர்பபினருக்கு இடையே உள்ள சிக்கல் என்பது போன்ற நிலை ஏற்பட்டுவருகிறது. நிலை எதுவாக இருக்கட்டும் இனியும் இது போன்ற திரைப்படங்கள் வெளிவரக்கூடாது என்பதே நமது நிலை. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது ஃபக்ருதீன் தந்தி டி.வி.யில் இன்று இரவு 7:45க்கு திரைப்பட இயக்குனர்களுடன் நேரடியாக இது தொடர்பாக விவாதத்தில் ஈடுபடுகிறார்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக