பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட செயற்குழு நேற்று சென்னையில் நடைபெற்றது. புதிய மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நடைபெற்ற முதல் செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம். என். மீரான் தலைமை தாங்கினார்.
வருகின்ற பிப்ரவரி 17 அன்று இந்தியா முழுவதும் நடைபெற இருக்கின்ற "பாப்புலர் ஃப்ரண்ட் தினம்" தொடர்பான விவாதங்கள் இச்செயற்குழு கூட்டத்தில் நடைபெற்றது. இதில் சென்னை மாநகர் முழுவதும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுவததோடு சுவர் விளம்பரம், சுவரொட்டி மற்றும் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சிக்காக வருகின்ற 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று பிரச்சார தினமாக கடைபிடிக்கப்பட்டு மாநகர் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள்.
இச்செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் முத்து அஹமது, அப்துல்லாஹ், ஜுனைத் அன்சாரி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக