புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

கருத்தரங்கம் -‍ நீதி தேடும் பாபரி மஸ்ஜித்

4 பிப்ரவரி, 2011

பெங்களூரு: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்க்கொண்ட‌ "நீதி தேடும் பாபரி மஸ்ஜித்" தேசிய அளவிலான‌ பிரச்சாரத்தின் நிறைவு நிகழ்ச்சி சென்ற ஜனவரி மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை அன்று பெங்களூரு தாருஸ்ஸலாம் அரங்கத்தில் நடைப்பெற்றது.


பாபரி மஸ்ஜித் இடிப்பு மற்றும் லிபர்ஹான் கமிஷன் அறிக்கையை மையமாக வைத்து மஹாத்மா காந்தி படுகொலை முதல் பாபரி மஸ்ஜித் இடிப்புவரை என்று மக்கள் மத்தியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டது.

இந்நிகழ்ச்சிக்கு, 27 ஆண்டுகளாக பாபரி மஸ்ஜித் வழக்கில் ஈடுபட்டுவருபவரும், ஆல் இந்தியா பாபரி மஸ்ஜித் ஆக்ஷன் கமிட்டியில் இருந்து வரும் வழக்கறிஞர் ஜ‌ஃபரியாப் ஜீலானி அவரகள் கலந்து கொண்டார்கள். அவர்கள் கூறும் போது இது பாபரி மஸ்ஜித் பிரச்சனையோ அல்லது முஸ்லிம்களுடைய பிரச்சனையோ அல்ல, மாறாக ஒட்டு மொத்த இந்திய ஜன நாயகத்தின் பிரச்சனை என்று கூறினார். இந்நிகழ்ச்சிக்கு பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.
பாபரி மஸ்ஜித் பிரச்சனையில் பல வரலாற்று ஆசிரியர்கள் ஆல் இந்தியா பாபரி மஸ்ஜித் ஆக்ஷன் கமிட்டிக்கு ஆதரவு அளித்து வருவதாக அவர் கூறினார். காரணம் பாபரி மஸ்ஜித் பிரச்சனை என்பது ஒரு மஸ்ஜிதின் பிரச்சனை அல்ல மாறாக அது வரலாற்றின் பிரச்சனை என்பது அவர்களின் கருத்தாக உள்ளது என்று அவர் கூறினார்.

பாபரி மஸ்ஜித் வழக்கில் தான் ஒரு தனி மனிதனாக நின்று போராட வேண்டும் என்ற நிலை ஏற்ப்பட்டாலும் இந்திய நீதித்துறையில் நம்பிக்கை வைத்து போராடுவேன் என்று மேலும் அவர் கூறினார்.

பேராசிரியர் எம்.எஸ். ஜெய்பிரகாஷ் அவரகள் உரையாற்றும்பொழுது இருட்டடிப்பு செய்யப்பட்ட பாபரி மஸ்ஜிதின் உண்மையான வரலாற்றை எடுத்துக்கூறினார். அதில் அவர் கூறும்போது பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் இராமர் கோயில் இருந்ததற்க்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், பாபர் கோயிலை இடித்துதான் மஸ்ஜித் கட்டினார் என்ற பொய் பிரச்சாரம் ஹிந்துத்துவ பாஸிச பயங்கரவாதிகளால்தான் உருவாக்கப்பட்டது என்று கூறினார்.
ஹிந்துத்துவ பாஸிச பயங்கரவாதிகள் ஹிந்து ராஷ்டிரா என்ற பெயரில் தங்களது பிரம்மணிச கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்க்காக‌ அடிப்படை ஆதாரம் கூட இல்லாத வரலாற்றை பரப்பி வருகின்றனர். மேலும் பாபர் ராமர் கோயிலை இடித்துத்தான் பள்ளியை கட்டினார் என்று பொய்யான தகவல்களை அளித்து வரும் ஆராய்ச்சியாளர்களின் குள்ள நரித்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டினார்.
ஆரியரகள் இந்த நாட்டிற்க்குள் நுழையும்போது சிந்து சமவெளியின் நாகரீகத்தை தகர்த்து தங்களுடைய கலாச்சாரத்தை மக்கள் மத்தியில் திணித்தார்கள். மன்னர் அஷோக்கா வின் காலத்திலே புத்தமத கொள்கையால் தங்களது கேடுகெட்ட கலாச்சாரத்திற்க்கு சவுக்கடி வாங்கிய ஆரியர்கள் பின்னர் குப்தாவின் காலத்தில் மீண்டு தலைதூக்க ஆரம்பித்தார்கள். பின்னர் முகலாய மன்னர்களின் வரவால் தங்களது கொளகையை வளர்க்க முடியாத ஆரியர்கள் வெள்ளையர்கள் இந்த நாட்டிற்க்குள் நுழையும் வரை பின்வாங்கியே இருந்தனர். பிரம்மத்துவத்தில் இருக்கக்கூடிய ஜாதி பாகுபாடான "மனு ஸ்மிதி" யை நடைமுறைப்படுத்துவதற்க்காகவே பாபரி மஸ்ஜித் பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டது என்று அவர் தனது உரையில் கூறினார்.

மேலும் ஒரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பத்திரிக்கை ஆசிரியர் திரு. சிவசுந்தர் கூறும் பொழுது அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் செல்வாக்கை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தவேண்டும் என்பதற்க்காகத்தான் பாபரி மஸ்ஜித் பிரச்சனையை பரப்ப ஆரம்பித்தார்கள் என்று கூறினார்.










   







பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீப், பாப்புலர் ஃப்ரண்டின் கர்நாடகா மாநில தலைவர் சகோதரர் இல்யாஸ் முஹம்மது மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களையும் பதிவு செய்தனர்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010