புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

இந்தியாவின் மிகப்பெரிய மஸ்ஜித்

10 பிப்ரவரி, 2011

கோழிக்கோடு: இந்தியாவிலேயே மிகப்பெரிய மஸ்ஜித் (பள்ளி வாசல்) கேரள மாநிலம் கோழிக்கோடு நகரம் அருகே கட்டப்பட இருக்கின்றது. 12 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படவிருக்கும் இந்த பள்ளிவாசலில் ஒரே சமயத்தில் 25,000 வரை மக்கள் தொழலாம் என்று கூறப்படுகின்றது. இதை கட்டுவதற்க்கான மொத்த செலவும் ரூபாய் 40 கோடியாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

திருச்சூரைச்சேர்ந்த ரியாஸ் அஹமது என்பவர் இதை வடிவமைத்துள்ளார். அவர் கூறும் போது இந்த மஸ்ஜித் பழங்காலத்து முகலாய மன்னர்களின் கட்டிடங்கள் போல் கட்டப்பட இருக்கிறது என்றார்.


கேரள அரசாங்கம் விதித்துள்ள சட்டங்களுக்கு உட்பட்டே இதன் கட்டுமாண வேலைகள் அமையும் என்று செய்தியாளர்களிடம் ரியாஸ் அஹமது தெரிவித்தார். இதில் கட்டுமாணம் மட்டும் 8 ஏக்கர் நிலப்பரபில் அமையும் என்றும் மீதி இருக்கக்கூடிய 4 ஏக்கர் நிலப்பரப்பில் அழகான தோட்டமும் அமையவிருப்பதாக கூறினார்.

விசாலமான தொழுகை அரங்கம் உட்பட, கருத்தரங்கம் நடத்துவதற்க்கான அரங்கமும், ஒரே சமயத்தில் 1000 பேர் வரை அமர்ந்து படிக்கும் நூலகமும் அமையவிருக்கிறது என்று மேலு அவர் கூறினார்.

இது இந்தியாவிலேயே அமையவிருக்கின்ற பிரம்மாண்டமான பள்ளி வாசலும், மிகப் பெரிய இஸ்லாமிய கலாச்சார மையமாகவும் திகழ இருக்கின்றது. இன்னும் ஐந்து மாதங்களில் இதற்க்காண கட்டுமாணப்பணி தொடங்க இருக்கின்றது. இரண்டு வருடத்திற்க்குள் கட்டி முடிக்கப்படும் என்று கூறினார்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010