புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

சிக்கும் போலி எண்கவுண்டர் கதாநாயகர்கள்!

14 பிப்ரவரி, 2011

ரவீந்தர் தியாகி
புதுடெல்லி: டெல்லி சிறப்பு காவல் படையைச்சேர்ந்த அதிகாரி ரவீந்தர் தியாகி இரண்டாவது முறையாக போலி எண்கவுன்ட்டர் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இதே போன்று இவர் பாட்லா ஹவுஸ் எண்கவுன்ட்டர் வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து இவர் போலி எண்கவுன்டர் வழக்கில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்ததால் இவர் மீது உடனடியாக இடைக்கால பணி நீக்கம் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை வழுத்துள்ளது.


கடந்த 9ஆம் தேதி அன்று கூடுதல் செஷன் நீதிமன்றத்தின் நீதிபதி வீரேந்திர பட் கூறும்போது குற்றமற்றவர்கள் என்று நீரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 7 நபர்களை கைது செய்யப்பட்ட வழக்கிலும் இதே ரவீந்தர தியாகி ஈடுபட்டுள்ளார். அச்சமயத்தில் ஏற்பட்ட எண்கவுன்டர் விவகாரத்தில் போலியான கதைகளை கூறியுள்ளார் என்ற குற்றமும் இவர் மீது இருக்கிறது என்று கூறினார். அந்த வழக்கில் ஏ.கே ரக கைத்துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், கள்ள நோட்டுக்கள் பரிமுதல் செய்யப்பட்டதாகவும், வெடிமருந்துகள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் ஐ.எஸ்.ஐ உளவாளிகள் என்றும் கூறினர். ஆனால் இவை அனைத்தும் பொய் என்பதை நீதிமன்றம் தெரிவித்தது.

ஜாமியா டீச்சர்ஸ் சாலிடாரிட்டி அஷோஷியெஷன் (JTSA) கூறும்போது இத்தகைய சிறப்புப் படை காவல்துறை அதிகாரிகளின் இவ்வாறான குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதும், அப்பாவி மக்களை போலி எண்கவுண்டர் மூலம் கொலை செய்வது தொடர்ந்து நடைப்பெற்றுவருவதாக கூறியது.

இதில் அதிர்ச்சியான‌ விஷயம் என்னெவென்றால் இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடும் காவல்துறையினர் பெரும்பாலும் சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இதே போன்று 2008 ஆம் ஆண்டு ரவீந்தர் தியாகி அல் பத்ரு இயக்கத்தைச்சார்ந்த தீவிரவாதிகள் எனக்கூறி இர்ஷாத் அலி மற்றும் முஹம்மது கமர் என்ற இரு வாலிபர்களை கைது செய்தார். அவர்களிடமிருந்து ஆர்.டி.எக்ஸ், ஜம்மு காஷ்மீர் பேருந்தின் பயணச்சீட்டு மற்றும் கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார். ஆனால் இவை அனைத்தும் போலியாக ஜோடிக்கப்பட்டவை என்பது சி.பி.ஐ விசாரணையில் தெரியவந்தது. மேலும் சந்தேகத்திற்கு இடமான பொருட்களை கைப்பற்றிய போலிஸார் அது எங்கிருந்து கொண்டுவரப்பட்டது போன்ற எந்த ஒரு விசாரணையையும் மேற்கொள்ளவில்லை என்று JTSA கூறுகிறது.

இதே போன்று காவல்துறை சிறப்புப்படையினரால் நடத்தப்பட்ட எல்லா எண்கவுண்டர்களும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தி உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும். இதே பாட்லா ஹவுஸ் எண்கவுண்டர் விவகாரத்தில் ஈடுபட்ட இன்னொரு காவல்துறை அதிகாரி கர்னைல்சிங் இஸ்ரத் ஜஹான் போலி எண்கவுண்டர் வழக்கிலும் குற்றம் சுமத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை போன்ற காவல்துறை அதிகாரிகளால் இன்னும் எத்துனை அப்பாவிகள் எண்கவுண்டர் என்கிற பெயரில் கொலை செய்யப்படுவார்களோ? எத்துனை அப்பாவிகள் சிறையில் அடைக்கப்படுவார்களோ? இவர்களுக்கு ஏற்பட்ட இந்த இழப்பை யார் சரி செய்வார்கள்? தேசிய மனித உரிமைக் ஆணையம் இதை போன்ற குற்றச்செயல் நடைபெருவதிலிருந்து அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டும். அதை விடுத்து அப்பேற்பட்ட செயல்கள நடந்த பின்பு அதனை விசாரித்து குற்றவாளிகளை பதிவி நீக்கம் செய்வதால் அல்லது அவர்களை சிறையில் அடைப்பதனால பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

JTSA உள்துறை அமைச்சகத்திடமும், காவல்துறை ஆணையரிடமும் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட ரவீந்தர் தியாகி மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. அதே போன்று உயர் மட்ட விசாரணை குழுவை ஏற்படுத்தி இவரோடு வேறு யாரெல்லாம் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை கண்டரிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜே.டி.எஸ்.ஏ கேட்டுக்கொண்டது.
 

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010