புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

இரு தாயின் மகன் - வழக்கறிஞர் ஷாஹித் ஆஜ்மி

11 பிப்ரவரி, 2011

ஷாஹித் ஆஜ்மி
வழக்கறிஞர் ஷாஹித் ஆஜ்மி ஒரு சிறந்த வழக்கறிஞராக திகழ்ந்தார். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் விடுதலைக்காக தன்னுடைய பணியை செய்யக்கூடியவர். எந்த சமூக மக்களாக இருப்பினும் அவர்கள் அநியாயம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றால் அவர்களுக்காக போராடக்கூடிய மிகச்சிறந்த வழக்கறிஞராக விழங்கினார்.
தீவிரவாதி முத்திரை குத்தப்பட்ட எத்தனையோ முஸ்லிம் அப்பாவி மக்களுக்காக நீதிமன்றங்களில் வாதாடி விடுதலை வாங்கித்தந்துள்ளார். அப்படி சிறந்து விழங்கியவரை ஒரு வருடத்திற்கு முன்னால் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். தன்னா பிரசுராம் கோடேகர் என்ற 60 வயது மதிக்கத்தக்க ஒரு விதவை பெண்மணி ஷாஹித் ஆஜ்மியின் ஒன்றாவது நினைவு நாளில், கவலையுடனும் கண்ணீருடனும் அவரைப்பற்றிய சில செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

தன்னா கிராந்தி நகரில், குர்லா என்ற இடத்தில் பல ஆண்டுகளாக வசித்துவருகிறார். ஒரு முறை அவரது மகன் ஹேமந்தை குர்லா காவல்துறையினர் கொலை வழக்கில் கைது செய்து செக்ஸன் 302 அடிப்படையில் சிறையில் அடைத்தனர். தனது மகனுக்கும் இன்னொருவருக்கும் ஏதேற்ச்சையாக நடந்த சண்டையில் இன்னொருவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

அவர் மேலும் கூறும்போது தன் மகனை காப்பாற்றுவதற்க்காக தன்னிடம் இருந்த எல்லா சொத்துக்களையும் விற்று நிறைய வக்கீல்களுக்கு கொடுத்தும் அவர்கள் அனைவரும் இறுதியில் தன் மகனை விடுவிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

வழக்கு ஆவணங்கள்
பின்னர் ஒரு நாள் ஷாஹித் ஆஜ்மியை பற்றிக் கேள்விப்பட்டு ஒருதடவை அவரை சந்திக்க வெறும்கையுடன் சென்றுள்ளார். இதனை விசாரித்த ஷாஹித் அவருக்கு உதவி செய்வதாக வாக்களித்து, அவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடி எந்த பணமும் அவர்களிடம் இருந்து பெறாமல் கடந்த 2006 ஆம் ஆண்டு அவருடைய மகனுக்கு விடுதலை வாங்கிக்கொடுத்துள்ளார்.

மேலும் அந்த பெண்மணி கூறும்போது வழக்கு விசாரணையின் போது தானும் தன்னுடைய மகள் அர்ச்சனாவும் அடிக்கடி ஷாஹிதை சந்தித்ததாகவும் எங்களின் ஏழ்மையையும், வறுமையையும் அறிந்து தங்களுக்கு பண உதவி செய்ததாகவும் கூறினார். ஒரு தடவை 70 சதுர அடி மட்டுமே உள்ள தனது வீட்டிற்க்கு வருகை தந்து எங்களோடு தரையில் ஒன்றாக அமர்ந்து பேசுவார், அப்போது அவரும் என்னுடைய மகன் போன்று தான் என்று ஷாஹித் கூறியதாக அவர் கூறினார்.

ஒரு நாள் அவர் கொலை செய்யப்படுவதற்கு சில் மாதம் முன்பாக எங்களுக்கு உதவியாக பணமும் கொடுத்தார் என்று கூறினார். ஷாஹித்தின் கொலை சம்பவத்தை கேள்விப்பட்ட அவருக்கு ஒரு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை கொலைசெய்து விட்டார்களே என்று மிகவும் வருத்தமடைந்தேன், நாங்கள் மீண்டு அநாதையாகிவிட்டோம் என்றே நினைத்தோம் ஆனால் அவருடைய தம்பி காலித் ஆஜ்மி அவர்கள் எங்களிடம் வந்து ஷாஹித் எங்களுக்கு எவ்வாறு உதவியாக இருந்தாரோ அதைப்போன்று தானும் இருப்பேன் என்று கூறியதாக தன்னா கூறினார்.

ஷாஹித் ஆஜ்மியின் தாய் ரெஹ்னா ஆஜ்மி அவர்களிடம் பேசும்போது "என்னுடைய மகன் ஷாஹித் பற்றி நினைக்கும் போது எனக்கு பெருமையாக உள்ளது என்றும், அவனை கொன்றவர்களை கைது செய்து தூக்கில் போட வேண்டும் இதன் மூலம் அவனுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று கூறினார். உங்களுடைய மகனைக்கொன்றது யார் என்று கேட்டதற்க்கு, ஹேமந்த் கர்கரேயை யார் கொன்றார்களோ அவர்களே என்னுடைய மகனையும் கொலை செய்துள்ளதாக கூறினார்.

ஷாஹிதின் அலுவலகம்
உங்கள் மூத்தமகன் விரோதிகளால் கொலை செய்யப்பட்டிருக்க ஏன் நீங்கள் உங்களுடைய இளைய மகன் காலிதையும் இதே துறையை தேர்ந்தெடுக்க அனுமதித்துள்ளீர்கள்? என்று கேட்டதற்கு, நான் அல்லாஹ்விற்க்கு பயப்படுகிறேன், அவன் கேட்கும் கேள்விகளுக்கு நான் பயப்படுகிறேன், நாளை ஒரு நாள் என் இறைவனை சந்திக்கும்போது, உன்னுடைய மூத்த மகன் கொலை செய்யப்பட்டதால் அச்சமடைந்த நீ ஏன் உனது இளையமகனை அப்பாவி மக்களை பாதுகாக்கும் விஷயத்திலிருந்து தடுத்தாய்? என்று கேட்டால் என்னால் பதில் கூற முடியாதே! நிச்சயமாக என்னுடைய இறைவன் என் இளயமகனை பாதுகாப்பான் என்று அந்தத் தியாகத் தாய் கூறினார்.

தன்னா பிரசுராம்
எத்தனையோ குற்றவாளிகளிடமிருந்து மிரட்டல் வந்த போதிலும் மஹாராஷ்டிரா அரசாங்கம் ஷாஹித்திற்கு எந்த பாதுகாப்பையும் அளிக்கவில்லை.  இறுதியாக கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி அன்று அவரது அலுவலகத்தில் வைத்தே சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஷாஹித் ஆஜ்மி அவர்கள் தீவிரவாத வழக்குகளை மேற்கொள்வதில் சிறந்தவராக் விளங்கினார். இதிலே சோகமான விஷயம் என்னவென்றுச்சொன்னால அவரை கொலை செய்த குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பதுதான். இன்று அவரது சகோதரர் காலித் ஆஜ்மி அவர்கள் அந்த வழக்கை எடுத்து விசாரித்து வருகிறார். 26/11 தாக்குதல் வழக்கு, 7/11 ரயில் குண்டு வெடிப்பு, 2006 மாலேகான் குண்டுவெடிப்பு, போன்ற பல வழக்குகளை அவர் விசாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





நன்றி: TWO CIRCLES
தமிழில்: முத்து

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010