பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த 01.03.2011 செவ்வாய்கிழமை மதுரையில் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயீல் தலைமையில் கூடியது, பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இச்செயற்குழுவில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் நிலைபாடு பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. முடிவில் முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை 5%மாக உயர்தி உயர்கல்விகளில் போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்க செய்யவும் வஃக்ப் வாரிய சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்பட்டு முறைப்படுத்தவும் அரசியல் அதிகாரத்தின் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கிடும் மாநில கட்சிக்கு முழு ஆதரவு என தீர்மானிக்கப்பட்டது.
அதே நேரத்தில் முஸ்லிம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை முன்வைத்து மாபெரும் தேசிய அரசியல் சக்தியாக உருவாகியிருக்கும் எஸ்.டி.பி.ஐக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் முழு ஆதரவை தெரிவிப்பதோடு போட்டியிடும் இடங்கள் அனைத்திலும் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் இணைந்து தேர்தலில் கள்ப்பணி செய்வார்கள் என தீர்மானிக்கப்பட்டது. மேலும் கோவையில் வெடிகுண்டு நாடகம் நடத்தி அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்கிய உளவுத்துறை அதிகாரி ரத்தின சபாபதி மீது வழக்குப் பதிவு செய்து தண்டிக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களை பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் மனித உரிமை அமைப்புகள் நடத்தி வரும் இந்நிலையில் மீண்டும் உயர் பதவி அளிக்கப்பட்டதை செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட ரத்தினசபாபதிக்கு வழங்கிய பதவி உயர்வை ஆணையம் உடனே ரத்து செய்வதோடு தமிழக அரசு அவர் மீது வழக்கு பதிந்து உடனே நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறது. தாமதாகும் நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஒட்டுமொத்த மக்களையும் ஒன்று திரட்டி உச்சகட்ட போராட்டங்களை நடத்தும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக