புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

பெண்கள் பணிக்கு செல்வதால் ஏற்படும் விபரீதங்கள்

5 மார்ச், 2011

ஆண்களின் தகுதிக்கும், தன்மைக்கும் தக்க பணிகளில் எவ்வித தடையும் இன்றி பெண்களை ஈடுபடுத்துவதால் ஏராளமான விபரீதங்கள் ஏற்படுகின்றன.



1. இது பெண்களே அவர்களுக்கு ஏற்படுத்திக் கொள்ளும் கேடாகும், காரணம் அவள் தங்களுக்கே உரித்தான தனித்தன்மையயும், பெண்மையையும் இழக்கின்றாள். மேலும் அவள் தனது வீட்டிலிருந்தும் தனது குழந்தைகளிடம் இருந்தும் அந்நியப்படுத்தப்படுகின்றாள். குணாதியங்களால் அவள் ஆண் பெண் என்ற இருசாராருமற்ற ஒரு புதிய இனமாக மாறும் நிலை ஏற்படுகிறது.

2. இது ஒரு பெண் தனது கணவனுக்கு ஏற்படுத்தும் கேடாகும், காரணம், அவன் எதிர்பார்க்கும் அபரிமிதமான சந்தோஷம் மற்றும் துணையின்றி வாடும் நிலை ஏற்படும். பணியிடங்களில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் தொழிலாளர்களுக்கிடையே உள்ள சச்சரவுகள் பற்றிய வாக்குவாதங்களும், குற்றம் குறைகளுமே வீட்டில் அடிக்கடி விவாதிக்கும் விசய்ங்களாக ஆகி விடும். சில நேரம் ஒரு படி மேலே சென்று தன்னுடன் பணி புரிபவளின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்க்காக தொழிலாளர்கள் மீதும் போட்டியும், பொறாமையும் கொள்ளச் செய்துவிடுவதும் உண்டு.

3. இது ஒரு பெண் தனது குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் கேடாகும். காரணம் ஒரு தாயின் அன்பு, அரவணைப்பு மற்றும் கழிவிரக்கம் ஆகியவற்றை வேலைக்காரியாலோ அல்லது ஒரு ஆசிரியையாலோ வழங்கிவிட முடியாது. பகல் முழுவதும் பணியாற்றிவிட்டு களைப்போடும், மன அழுத்தத்தோடும் வீடு திரும்பும் தாயிடம் எவ்வாறு அவள் குழந்தைகள் பலன் பெற முடியும். அவள் நேரிடையாக அல்லது மனரீதியாக குழந்தை வளர்ப்பில் அல்லது படிப்பில் கவனம் செலுத்துவதற்கு இது ஒரு பேரிடர் என்றால் அது மிகையல்ல.

4. இது ஒரு பெண் ஆண் சமூகத்திற்கு ஏற்படுத்தும் கேடாகும். காரணம், ஒவ்வொரு பணிபுரியும் பெண்ணும் தகுதியுடைய ஒரு ஆணின் வேலையை எடுத்துக் கொள்கின்றாள். எனவே சமூகத்தில் ஆண்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிப்பதற்கு இது காரணமாக அமைகிறது.

5. இது ஒரு பெண் தான் செய்யும் தொழிலுக்கே ஏற்படுத்தும் கேடாகும். காரணம் அவள் தனது இயற்கையான தேவையை நிறைவேற்றும் முகமாக மாதவிடாயின் போது, குழந்தை பிறப்பின் போது, குழந்தைக்கு பாலூட்ட வேண்டி என பல நாட்கள் விடுப்பில் செல்ல வேண்டியுள்ளது. இது போன்றவைகளால் அவள் வேலையில் ஒழுங்கு லாபகரமான உற்பத்திக்கு குந்தகம் ஏற்படுத்தும் நிலை ஏற்படும்.

6. இது ஒரு பெண் தனது ஒழுக்க விழுமியங்களுக்கு ஏற்படுத்திக் கொள்ளும் கேடாகும். காரணம் ஆண்களின் கவனமற்ற செயல்களால் அவள் தனது கண்ணியத்தை இழக்கும் சூழல் ஏற்படும். வாழ்க்கைக்கான வாழ்வாதாரங்களை பெருக்குவதற்கான வழியில் அவள் தனது கண்ணியத்தையும், முன்மாதிரியையும் தொலைத்துவிடுவது என்பது அவள் ஒட்டு மொத்த சமூகத்திற்கே செய்யும் கேடாகும்.

7. இது ஒரு பெண் சமூக வாழ்வில் ஏறபடுத்தும் சீர்கேடாகும். காரணம் அவள் இயற்கையின் நியதிகளுக்கு எதிராக நிர்ணயிக்கப்பட்ட நியதிகளை அதன் இடத்திலிருந்து மாற்ற முனைகின்றாள். இது வாழ்வில் ஒழுங்கற்ற, சமச்சீரற்ற பாரிய குழப்பங்களை ஏற்படுத்தும்.

ஒரு பெண் எப்போது வேலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறாள்? பெண்கள் வேலைக்கு செல்வது என்பது இறைவனால் தடைசெய்யப்பட்ட செயலா? நிச்சயமாக இல்லை. இருந்த போதிலும் அவள் எந்தெந்த துறைகளில் எந்த அளவுக்கு பணிபுரிய முடியும் என்பதை இஸ்லாமிய சட்டம் வரையறுத்துச் சொல்கின்றது. அவைகளை நாம் சுருக்கமாகவும், தெளிவாகவும் காண்போம். இது ஒரு சிக்கலான் விஷயம் என்பதால் சத்தியம், அசத்தியத்துடன் கலந்து குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு பெண்ணின் முதலும் முக்கியமுமான பணி தன் சந்ததிகளை பேணி பாதுகாத்து வளர்ப்பதாகும். இதில் அவளுக்கு ஈடு இணை வேறு யாரும் இல்லை. அதற்கான உடல் மற்றும் மனரீதியான குணாதிசியங்களுடன் அல்லாஹ் அவர்களை படைத்திருக்கின்றான். எனவே உல்காதாயம் பெறும் வேறு எந்த பணிகளிலும் அவள் தரிபட்டுவிடுவது முறையல்ல காரணம் இத்தகைய பணியை அவளின் பகரம் மற்றொருவர் நிறைவேற்றுவது என்பது சாத்தியமான ஒன்றல்ல. ஒரு சமூகத்தின் எதிர்கால வளமே அவள் உருவாக்கும் குழந்தைகள்தான் என்றால் அது மிகையல்ல. இதனையே ஹபீஸ் இப்ராஹீம் எனும் அரபிக் கவிஞர் தனது கவிதையில்...

" தாய் ஒரு பள்ளிக் கூடம்..
இதன் நல் தயாரிப்பு,
ஒட்டுமொத்த ஆரோக்கியமான சமூகத்தின் தயாரிப்பு"


இதனால் வெளியுலகில் பெண்கல் வேலைக்கு செல்வதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது என்பது பொருளல்ல. சரியான ஆதாரத்தின் அடிப்படையில் இன்றி அவ்வாறான தடையை ஏற்படுத்துவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை. இன்னும் சொன்னால் அவளது தேவையை அனுசரித்து அவள் பணிக்கு செல்ல சில நேரங்களில் கேட்டுக் கொள்ளப்படுவாள். சில வேளைகளில் அவள் விவகாரத்து செய்யப்பட்டு கைம்பெண்ணாக இருக்கிறாள்.

மீண்டும் திருமணம் செய்யும் வாய்பு அவளுக்கு இல்லை. அவளுக்கு எந்தவிதமான வருமானமும் இன்றி தவிக்கும் நிலை. மக்களும் களிவிரக்கம் கொண்டு அவளுக்கு உதவாத ஒரு சூழல். இத்தகைய சூழலில் அவளது குடும்பத்தால் அவள் வேலைக்கு செல்ல கேட்டுக் கொள்ளப்படலாம். இது ஒரு வேளை தனது கணவனை காப்பாற்றுவதற்கு, அல்லது அல்லது தனத் குழந்தைகளை வள்ப்பதற்கு, அல்லது தனது சகோதர சகோதரிகளை காப்பதற்கு, அல்லது வயது முதிர்ந்த தனத் பெற்றோரை பேணுவதற்கு என்பது போன்ற காரணங்களுக்காகவும் இருக்கலாம். திருமறை குர்ஆனில் இது போன்ற சந்தர்ப்பத்தை காண முடியும். சூரத்துல் கஸஸ் எனும் அத்யாயத்தில் வயது முதிர்ந்த ஒரு மனிதரின் இரண்டு புதல்வியர் தனது தந்தையின் ஆட்டு மந்தைக்கு நீர் புகட்டும் சம்பவத்தைப் பற்றி குறிப்பிடும் திருமறைக் குர்ஆன்....

"இன்னும் அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த்துறையின்) அருகே வந்த போது அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்களைத் தவிர பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர்ப் புகட்டது) ஒதுங்கி நின்றதை கண்டார். "உங்களிருவரின் விஷயம் என்ன?" என்று அப்பெண்களிடம் அவர் கேட்டார். அதற்கு "இம்மேய்ப்பாளர்கள் (தண்ணீர் புகட்டி விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது. மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர் என்று அவ்விருவரும் கூறினார்கள். (அல்குர்ஆன் 28:23).

சில பல வேலைகளில் சமூகத்திற்கே பெண்களின் வேலை தேவைப்படுகிறது.. பெண்களுக்கு மருத்துவம் செய்தல், அவர்களை பராமரித்தல், பெண்களுக்கு கல்வி அறிவு புகட்டுதல் போன்ற பணிகளில் பெண்கள் பணிபுரிதல் அவசியமானது. ஒரு பெண்ணால் தன்னைப் போன்ற உடல் கூறுகள் கொண்ட ஒரு பெண்ணை சரிவர கவனிக்க முடியும். இது ஒரு ஆணுக்கு சாத்தியமான ஒன்றல்ல. ஆனால் தவிர்க்க முடியாத சில வேளைகளில் ஆண்கள் இது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். ஆனால் சமூக முன்னேற்றதிற்கான பணிகளில் பெண்களை வேலை செய்ய அனுமதிக்கும் போது சில காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

1. அத்தகைய பணிகள் இஸ்லாம் அனுமதித்த ஒன்றாக இருக்க வேண்டும். இஸ்லாம் தடை செய்திருக்கும் அல்லது தடைசெய்த ஒன்றை அடைவதற்கான வேலையாக அது இருத்தலாகாது. உதாரணமாக ஆண்கள் மட்டும் இருக்கும் வீடுகளில் பணிப் பெண்ணாக பணிபுரிவது. அல்லது ஒரு மேலாளருக்கு அந்தரங்க காரியதரிசியாக பணிபுரிவது. சில நேரம் அவருடன் தனிமையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அல்லது ஒரு நாட்டியக்காரியாக பணிபுரிவது. அதன் மூலம் காண்பவரது உள்ளுணர்வும், காமமும் தூண்டப்படுவதாக அமையும். அல்லது உணவு விடுதிகளில் மதுபானம் பரிமாறுபவராக பணிபுரிவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதுபானம் உற்பத்தி செய்பவரையும், அதனை எடுத்துச்செல்பவரையும், விற்பவரையும் வன்மையாக கண்டித்திருக்கிறார்கள். விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிவது தடுக்கப்பட்டதாகும். காரணம் இஸ்லாம் தடை செய்திருக்கும் ஆடைகளை அணிவதற்கு அவள் நிர்பந்திக்கப்படுகின்றாள். மேலும் பயணிப்பவர்களுக்கு தடுக்கப்பட்டவைகளை பரிமாறும் நிலை ஏற்படும். மேலும் சில நாட்கள் அவள் தூரமான இடங்களில் சென்று தங்க வேண்டிய சூழல் ஏற்படும். இது அவளுக்கு பாதுகாப்பானதாக அமையாது. இதை போன்ற இஸ்லாம் தடுத்திருக்கும் பணிகளில் பெண்கள் ஈடுபடுவது கூடாது. இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தான்.

2. அவள் வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது இஸ்லாம் காண்ப்த்து தரும் ஒழுக்க மாண்புகளை தனது உடை, நடை, மற்றும் உரையாடலில் கடைபிடிக்க வேண்டும். இதைப்பற்றி எடுத்தியம்பும் திருமறை...

"இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக, அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக்கூடியதைத்தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் மார்புகளை மறைத்துக்கொள்ள வேண்டும். " (அல்குர் ஆன் 24:31)

" நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்ற பெண்களைப்போலல்ல. நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால் (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அ(த்தகைய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்ல பேச்சையே பேசுங்கள்..." (அல்குர்ஆன் 33:32)

3. அவளது வேலை, கடமையாக அவள் பேணிச் செய்ய வேண்டிய பணிகளான குழந்தைகளை பராமரித்தல், கணவனுக்கு பணிவிடை செய்தல் ஆகியவைகளை புறம் தள்ளுவதாக இருத்தலாகாது.

4. பெண்கள் பணிபுரியும் வண்ணம் முறையான சூழலை உருவாக்கித் தருவது முஸ்லிம் சமூகத்தின் கடமையாகும். இதனால் அவளது கண்ணியத்திற்கு குந்தகம் ஏற்படாமல் இருப்பதுடன், அவளும் அவளது குடும்பத்தாரும் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் எவ்வித குறைவும் இன்றி நடக்க வழிவகை செய்யும். நிச்சயமாக சமூகத்தின் சூழல் அவள் தனது கடமையான பணிகளையும், உரிமைகளையும் சரிவர நிறைவேற்ற உதவி புரியும். பெண்களுக்கென்று பிரத்தியேகமாக குறைந்த நேரம் அல்லது பாதி நாள் பணிகளை உருவாக்கி (வாரத்திற்கு மூன்று நாட்கள் என்பது போன்று) அதற்கெற்றவாரு ஊதியம் வழங்கும் முறையை ஏற்படுத்தலாம். மேலும் அவளது திருமணம், பேறுகாலம் மற்றும் பிரசவத்திற்கு தாராளமான விடுப்பு வழங்கும் முறையையும் ஏற்படுத்துவது அவளது ஏனைய கடமையான பணிகளில் குறைவின்றி நடக்க ஏதுவாக அமையும்.

5. பெண்கள் பயிலும் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலை கழகங்களில் அவர்கள் விளையாடுவதற்கு மற்றும் உடற்பயிற்சிகள் மேற்கொள்வதற்கென்ற பிரத்தியேக வழிமுறைகளை ஏற்படுத்தித் தருதல் வேண்டும். இதன் மூலம் அவர்கள் தங்கு தடையின்றி பல்வேறு பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சாத்தியமாக அமையும். மேலும் பெண்கள், தொழில் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அமைச்சகத்தில் கூட பணிபுரிய முடியும். ஆனால் அந்த வேலை அவளுக்கு சுமையானதாகவோ அல்லது ஆண்களுடன் கலந்து பணிபுரிவதாகவோ இல்லாமல் இருத்தல் வேண்டும்.


அல்லாஹ்! அவன் தான் சத்தியத்தை உரைப்பவன். நேரிய பாதையில் வழி நடத்துபவன்.....

நன்றி : விடியல் வெள்ளி

2 விமர்சனங்கள்:

abd_allah சொன்னது…

ur article may be correct..but some widow sisters r there.. they hav to look of their innocent babies...wat 'll htey do..?she has to go out for their basic needs no muslim is coming fwd to marry them..

சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் சொன்னது…

உங்களுடைய கேள்வி நியாயமானதே! விதவை பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்று இஸ்லாம் தடுக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு விதவை பெண் வேலைக்கு போக வேண்டும் என்று அனுமதி கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள். இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் வேலைக்கு செல்லும் இடங்களில் பாதுகாப்பாகவும் அதே சமயம் மார்க்கத்திற்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். பெரும்பாலான இடங்களில் விபரீதங்களே அதிகம் நிகழ்கின்றன. அதனை சுட்டிக்காட்டவே இந்த கட்டுரை.

நீங்கள் கூறுவது போன்ற பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றது. மறுப்பதற்கில்லை. இந்த நிலை கண்டிப்பாக‌ மாற வேண்டும்.

தங்களுடைய கருத்திற்கு மிக்க நன்றி!
வஸ்ஸலாம்.

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010