புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

கோவை வெடிகுண்டு நாயகனை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

7 மார்ச், 2011

சென்னை: ரத்தினசபாபதியின் பதவி நியமன உயர்வை கண்டித்து சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.


கோயம்புத்தூர் வெடிகுண்டு நாயகன் "ரத்தின சபாபதி"யின் பணி நியமன உயர்வை கண்டித்து தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னையில் நேற்று ஞாயிற்றுகிழமை (06.03.2011) காலை 10:30 மணி அளவில் மெமோரியல் ஹால் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சென்னை மாவட்டச்செயலாளர் சகோதரர் ஷாஹித் இந்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சென்னை மாவட்ட தலைவர் சகோதரர் முஹம்மது நாஜிம் கணடன உரை நிகழ்த்தினார். அவரது உரையில் தமிழக அரசு சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் என்று கூறிக்கொண்டு இத்தகைய குற்றவாளிகளுக்கு பதவி உயர்வுகளை அளித்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறினார். தனி ஒரு மனிதனுக்காக ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, இது ஒரு தனி மனித பிரச்சனையா? ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் தீவிரவாதியாக சித்தரிக்க முயற்ச்சி செய்த ரத்தின சபாபதியை பதவி நீக்கம் செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார். நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் ரத்தினசபாபதி மற்றும் அவனுக்கு பதவி உயர்வை வழங்கிய தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு  பின்னர் விடுவிக்கப்பட்டனர். கொண்டித்தோப்பு காவலர் சத்திரத்தில் அடைக்கப்பட்டனர். அங்கு வந்த பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் அவர்கள் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் மத்தியில் உரையாற்றினார். அதில் தமிழக அரசு இந்த விஷயத்தில் பாரபட்சம் காட்டி வருவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் ஒட்டு மொத்த சமூகத்தையும் திரட்டி இன்னும் வீரியத்துடன் போராட்டங்களை நடத்தி தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவோம், நிச்சயம் மக்கள் சக்தி வெள்ளும் என்பது சமீபத்திய சம்பவங்கள் மூலம் நமக்கு தெளிவாக தெறிகிறது என்று கூறினார்.







 


செய்தி: முத்து



0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010