ஷேக் அப்துல் கலீம் அசிமானந்தாவிடம் நடந்து கொண்ட முறையால் இதனால் வரை முஸ்லிம்கள் மீது இஸ்லாம் மார்க்கத்தின் மீதும் அவருக்கு இருந்த வெறுப்பு நீங்கி தன்னுடைய தவறை ஒப்புக்கொள்ளவைத்தது.
மேற்குவங்காளம் ஹூக்லி மாவட்டத்தில் உள்ள கமார்புகார் என்ற கிராமத்தில் பிறந்தவர் இந்த அசிமானந்தா. 1971 ஆம் ஆண்டு இளநிலை படிப்பை முடித்த அசிமானந்தா முதுநிலை படிப்பை மேற்கொள்ள பரதமான் மாவட்டத்திற்குச்சென்றார்.
பள்ளிப்பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்பு இருந்தாலும் கல்லூரி காலத்தில் தான் அதிக ஈடுபாடுடன் செயல்பட்டார். 1977ஆம் ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்-ன் முழு நேர ஊழியனாக செயல்பட தொடங்கினார். 1981ஆம் ஆண்டு அவரது ஆசிரியரான சுவாமி பரமானந்தா இவரை தன்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு "சுவாமி அசிமானந்தா" என்னும் பட்டத்தை வழங்கி இருக்கிறார்.
இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதி வாசி மக்களிடம் இந்து மத போதனையை செய்து வந்தார் அசிமானந்தா. 1997ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் டங் மாவட்டத்தில் குடியேறி "சபரி தர்மா" என்ற ஒரு ஆதிவாசிகளுக்கான தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் கிருஸ்தவ மிஷினரிகளுக்கெதிராகவும் கடுமையான முறையில் விமர்சனம் மற்றும் சொற்பொழிவு செய்து வந்ததால் மிக விரைவிலேயே அந்த பகுதி மக்களுக்கிடையில் பிரபலமானார்.
ஆர்.எஸ்.எஸ்-ன் முக்கிய தலைவர்களுடன் அசிமானந்தாவுக்கு நெருக்கம் இருந்து வந்தது. குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி, மத்திய பிரதேஷ மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் செளஹான், முன்னால் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்ஷன், தற்போதைய தலைவர் மோகன் பகவத் உட்பட முக்கிய தலைவர்கள் அசிமானந்தா நடத்திய பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர்.
அசிமானந்தாவின் வாக்குமூலத்தின் படி அக்ஷ்ர்தர்மா கோயிலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் தான் முஸ்லிம்களுக்கெதிராக தனது தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டம் தீட்டியிருக்கிறார். 2003 ஆம் ஆண்டில் தான் அசிமானந்தாவிற்கு சுனில் ஜோஷி மற்றும் பிரக்யா சிங் தாகூர் ஆகியோரிடம் அறிமுகம் ஏற்பட்டது.
9 அப்பாவி மக்களை பலி கொண்ட மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் தான் இந்த அசிமானந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள் மீது இவ்வளவு வெறுப்பு கொண்ட அசிமானந்தாவின் உள்ளம் எவ்வாறு மாறியது?
அப்துல் கலீம் என்ற அந்த இளைஞன் காவல்துறை அதிகாரிகளால் இதே மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் அசிமானந்தாவிற்கு முன் குற்றம் சுமத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டார். கைதுசெய்யப்பட்ட அப்துல்கலீமிற்கு அசிமானந்தாவை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.
அப்துல் கலீம்
சிறைச்சாலையில் அசிமானந்தாவிற்கு எல்லா உதவிளையும் அப்துல கலீம் செய்து வந்தார். அசிமானந்தாவின் வயது முதிர்ந்த நிலையை கண்டு உணவு எடுத்துவருவது, தண்ணீர் எடுத்துவருவது என அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். ஒரு முறை ஜெயில் வார்டன் அசிமானந்தாவிடம் அப்துல் கலீம் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு கடந்த 18 மாதங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக கூறினார். இதனை கேள்விப்பட்ட அசிமானந்தாவிற்கு பெறும் அதிர்ச்சியாக இருந்தது. அபுதுல் கலீம் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளையும், தான் செய்யாத தவறுக்காக தனது முழு குடும்பமு அனுபவித்த இன்னல்கள் பற்றி அசிமானந்தாவிடம் எடுத்துக்கூறியுள்ளார். இதனை கேட்ட அசிமானந்தாவிற்கு அழுகையே வந்து விட்டதாம். அத்தோடல்லாமல் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டதைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். தொடர்ந்து அசிமானந்தா அப்துல் கலீமிடம் நபி(ஸல்) அவர்கள் பற்றியும் இஸ்லாத்தைப்பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
நபி(ஸல்) அவர்களின் தாயிஃப் நகர் சென்ற வரலாற்று சம்பவத்தை அப்துல் கலீம் கூறியுள்ளார். நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக தாயிஃப் நகர் சென்ற பொழுது அங்கே இருந்த மக்கள் நபி(ஸல்) அவர்களை கல்லால் அடித்தார்கள். அவர்களுடைய உடம்பிலிருந்து இரத்தம் வழிந்தோடிய சமயம் வானவர் ஜிப்ரீல் நபியிடம் வந்து " நபியே! நீங்கள் விரும்புனீர்கள் என்றால் உங்களை துன்புறுத்திய இந்த மக்களை இருமலைகளுக்கு நடுவே வைத்து நசுக்கிவிடுகிறேன்!" என்று கூற நபி(ஸல்) அதை மறுத்து அந்த மக்களை மன்னித்தார்கள். இந்த சம்பவத்தை கேட்ட அசிமானந்தாவின் மனதில் ஒரு தாக்கம் ஏற்பட்டிருக்கிறது.
தான் செய்த தவறினால் அப்துல் கலீம் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதும், தான் செய்த தவறினால் அப்துல் கலீம் போன்ற நல்ல உள்ளம் படைத்த சில மக்களை கொன்றுவிட்டோம் என்று எண்ணிமனம் வருந்தியுள்ளார் அசிமானந்தா.அப்துல் கலீம் செய்த செயல் ஒவ்வொரு முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய பண்பாகும். குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் கூற்றுப்படி எதிரிகளிடத்திலும் அன்பு காட்டவேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கவேண்டிய உரிமைகள் தரப்படவேண்டும். அதற்காக போராடுவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையும் கூட. நபி(ஸல்) அவர்களுடைய போதனைகளில் பெரும்பாலும் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றியே இருக்கும். குறிப்பாக அன்டைவீட்டார், நண்பர்கள் மற்றும் சமூகத்தாருக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றி அதிக அளவில் போதனைகளை நாம் காணலாம். இஸ்லாம் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை வலியுறுத்துகிறது.
அனைத்து முஸ்லிம்களும் இதை நடைமுறைப்படுத்தி வந்தால் ஒட்டுமொத்த உலகமே மாறிவிடும்.
ஆட்சியும், அதிகாரமும் நம்மை தேடி வரும் எப்பொது என்றால்?
உங்களில் எவர் இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்து வந்தார்களோ அவர்களை அவர்களுக்கு முன் சென்ற சமுதாய மக்களுக்கு எவ்வாறு இந்த பூமியின் ஆட்சி அதிகாரத்த வழங்கினோமோ அதைப்போன்று இவர்களுக்கும் வழங்குவான். மேலும் தான் பொறுந்திக்கொண்ட இஸ்லாம் மார்க்கத்திலேயே அவர்களை நிலைபடுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்தை நிம்மதியை கொண்டு போக்கிவிடுவதாக அல்லாஹ் வாக்களிக்கின்றான்.
அல்லாஹ் நம்மை சிறந்த சமுதாயமாக கூறுகிறான்.
மனித இனத்தை சீர்படுத்துவதற்கான் சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் நன்மையை ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் தடுக்கிறீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்.
சிறந்த மனிதர்களுக்கான அடையாளம் உண்டு! நாம் சிறந்த மனிதர்களில் ஒருவரா? அல்லாஹ் நம்மை சிறந்தவர்களாக இருக்கும்படி கூறுகிறான்.
மேலும் நீங்கள் அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள். அவனோடு எதையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தையரிடம் நல்ல விதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அண்டைவீட்டுக்காரர்கள், வழிப்போக்கர்கள், வழக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட அடிமைப்பெண்களிடம் நீதமாக நடந்து கொள்ளுங்கள். நிச்சமாய அறிந்து கொள்ளுங்கள் பெருமையிலும், கர்வத்திலும் திரிபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் எந்த ஒரு முஸ்லிம் தன் அன்டைவீட்டாருக்கு நோவினை செய்வானோ அவன் சுவர்க்கம் செல்லமாட்டான்!.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் "அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் அண்டை வீட்டாருக்கு நோவினை செய்யவேண்டாம்!" என கூறியுள்ளார்கள். மேலும் பேசினால் நல்லதையே பேசுங்கள், இல்லையென்றால் வாய் மூடி அமைதியாக இருக்கட்டும் என கூறியுள்ளார்கள். [Al-Bukhari and Muslim].
நாம் செய்யக்கூடிய தொழுகை, நோன்பு, ஜகாத்து, ஹஜ்ஜு போன்றவற்றை விட நம்முடைய நன்னடத்தைகள், நம்முடைய பண்புகளை, நம்முடைய ஒழுக்கங்கள் போன்றவற்றை வைத்துத்தான் இஸ்லாத்தை எடைபோடுவார்கள். இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீது கடந்த காலங்களில் அதிக அளவில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது அதை நாம் தான் நம்முடைய செயல்களின் மூலம் சரிசெய்யவேண்டும்.
சிறந்த சமுதாயமாக திகழ வேண்டிய நாம், பிற சமுதாய மக்களால் அவப்பெயர்களை பெற்று வருகிறோம். அத்தோடுமட்டுமல்லாமல் நமக்குள்ளேயே பல பிரிவுகளாக பிரிந்து, பிளவுபட்டு ஒருவருக்கொருவர் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறோம். இன்று அல்லாஹ்விற்கு ஸூஜூது செய்வதற்கு அல்லாஹ் உடைய மஸ்ஜிதை நாடாமல் நம்முடைய மஸ்ஜிதை தேடி அலைகின்றோம். நம்முடைய பலத்தை பலவீனமாக்கி மற்றவர்களால் தாக்கப்படுவதற்கு ஆயத்தமாகி வருகிறோம். நம்முடைய மார்க்கத் தலைவர்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து இப்பேற்பட்ட இடைவெளியை போக்க வேண்டும். ஒரே இறை, ஒரே மறை, ஒரே தூதர் என்று இருக்கக்கூடிய நாம் ஏன் ஒன்றுபட முடியாது? முயற்சி இருந்தால் கண்டிப்பாக இயலும், அது ஒரு கடினமான காரியமாக இருக்காது.
சமீபத்திய தேர்தலின் போது எதிரிகளாக இருந்த பல அரசியல் கட்சிகள் ஒன்றினைந்து தேர்தலம் களம் கண்டதை நம்மால் காணமுடிகிறது. உலக ஆதாயதிற்காக எந்த ஒரு லட்சியமும் இல்லாத, இவர்களாலேயே ஒன்றுபட முடியும் என்றால் அல்லாஹ்விற்காக மார்க்கத்திற்காக நம்மால் ஏன் ஒன்று பட முடியாது?
பீஹார் மாநிலம் பாட்னாவில் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு புதிய மாற்றத்தை காண முடிந்தது. சில்சிலாஹ், கங்காஹ் முனேமிய கமாரியா, என்ற அமைப்பு எல்லா முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்று திரட்டி ஆலோசனை நடத்தி தொழுகை நேரங்கள், ஸஹர் நேரங்கள், இஃப்தார் நேரம் போன்றவற்ற ஓரே மாதிரியாக கடைபிடிக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதை சில வருடங்களாக கடைபிடித்தும் வருகிறார்கள். நமது ஊரிலும் காதியானிகளுக்கு எதிராக எல்லா அமைப்புகளும் ஒன்று திரண்டு நெல்லை மாவட்ட மேலப்பாளையத்தில் ஒரே மேடையில் அமர்ந்து காதியானிகளுக்கு எதிராக போராட முடிவெடுத்ததை நாம் அறிவோம். இது ஒரு தொடக்கம் தான். நாம் பயணிக்க வேண்டிய தூரம் மிகத்தொலைவு. அதிவிரைவிலேயே நல்லதொரு மாற்றத்தை நம்மால் காண முடியும்.
நமக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைகளை ஓரங்கட்டிவிட்டு ஒட்டு மொத்த சமுதாயத்திறாக பாடுபடுவோம். குறிப்பாக அசிமானந்தாவிற்கு நேர்வழி கிடைக்க இறைவனை பிராத்திப்போம்!.
நன்ற: TWO CIRCLES
தமிழில் : முத்து
மேற்குவங்காளம் ஹூக்லி மாவட்டத்தில் உள்ள கமார்புகார் என்ற கிராமத்தில் பிறந்தவர் இந்த அசிமானந்தா. 1971 ஆம் ஆண்டு இளநிலை படிப்பை முடித்த அசிமானந்தா முதுநிலை படிப்பை மேற்கொள்ள பரதமான் மாவட்டத்திற்குச்சென்றார்.
பள்ளிப்பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்பு இருந்தாலும் கல்லூரி காலத்தில் தான் அதிக ஈடுபாடுடன் செயல்பட்டார். 1977ஆம் ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்-ன் முழு நேர ஊழியனாக செயல்பட தொடங்கினார். 1981ஆம் ஆண்டு அவரது ஆசிரியரான சுவாமி பரமானந்தா இவரை தன்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு "சுவாமி அசிமானந்தா" என்னும் பட்டத்தை வழங்கி இருக்கிறார்.
இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதி வாசி மக்களிடம் இந்து மத போதனையை செய்து வந்தார் அசிமானந்தா. 1997ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் டங் மாவட்டத்தில் குடியேறி "சபரி தர்மா" என்ற ஒரு ஆதிவாசிகளுக்கான தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் கிருஸ்தவ மிஷினரிகளுக்கெதிராகவும் கடுமையான முறையில் விமர்சனம் மற்றும் சொற்பொழிவு செய்து வந்ததால் மிக விரைவிலேயே அந்த பகுதி மக்களுக்கிடையில் பிரபலமானார்.
ஆர்.எஸ்.எஸ்-ன் முக்கிய தலைவர்களுடன் அசிமானந்தாவுக்கு நெருக்கம் இருந்து வந்தது. குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி, மத்திய பிரதேஷ மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் செளஹான், முன்னால் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்ஷன், தற்போதைய தலைவர் மோகன் பகவத் உட்பட முக்கிய தலைவர்கள் அசிமானந்தா நடத்திய பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர்.
அசிமானந்தாவின் வாக்குமூலத்தின் படி அக்ஷ்ர்தர்மா கோயிலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் தான் முஸ்லிம்களுக்கெதிராக தனது தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டம் தீட்டியிருக்கிறார். 2003 ஆம் ஆண்டில் தான் அசிமானந்தாவிற்கு சுனில் ஜோஷி மற்றும் பிரக்யா சிங் தாகூர் ஆகியோரிடம் அறிமுகம் ஏற்பட்டது.
9 அப்பாவி மக்களை பலி கொண்ட மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் தான் இந்த அசிமானந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள் மீது இவ்வளவு வெறுப்பு கொண்ட அசிமானந்தாவின் உள்ளம் எவ்வாறு மாறியது?
அப்துல் கலீம் என்ற அந்த இளைஞன் காவல்துறை அதிகாரிகளால் இதே மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் அசிமானந்தாவிற்கு முன் குற்றம் சுமத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டார். கைதுசெய்யப்பட்ட அப்துல்கலீமிற்கு அசிமானந்தாவை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.
அப்துல் கலீம்
நபி(ஸல்) அவர்களின் தாயிஃப் நகர் சென்ற வரலாற்று சம்பவத்தை அப்துல் கலீம் கூறியுள்ளார். நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக தாயிஃப் நகர் சென்ற பொழுது அங்கே இருந்த மக்கள் நபி(ஸல்) அவர்களை கல்லால் அடித்தார்கள். அவர்களுடைய உடம்பிலிருந்து இரத்தம் வழிந்தோடிய சமயம் வானவர் ஜிப்ரீல் நபியிடம் வந்து " நபியே! நீங்கள் விரும்புனீர்கள் என்றால் உங்களை துன்புறுத்திய இந்த மக்களை இருமலைகளுக்கு நடுவே வைத்து நசுக்கிவிடுகிறேன்!" என்று கூற நபி(ஸல்) அதை மறுத்து அந்த மக்களை மன்னித்தார்கள். இந்த சம்பவத்தை கேட்ட அசிமானந்தாவின் மனதில் ஒரு தாக்கம் ஏற்பட்டிருக்கிறது.
தான் செய்த தவறினால் அப்துல் கலீம் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதும், தான் செய்த தவறினால் அப்துல் கலீம் போன்ற நல்ல உள்ளம் படைத்த சில மக்களை கொன்றுவிட்டோம் என்று எண்ணிமனம் வருந்தியுள்ளார் அசிமானந்தா.அப்துல் கலீம் செய்த செயல் ஒவ்வொரு முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய பண்பாகும். குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் கூற்றுப்படி எதிரிகளிடத்திலும் அன்பு காட்டவேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கவேண்டிய உரிமைகள் தரப்படவேண்டும். அதற்காக போராடுவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையும் கூட. நபி(ஸல்) அவர்களுடைய போதனைகளில் பெரும்பாலும் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றியே இருக்கும். குறிப்பாக அன்டைவீட்டார், நண்பர்கள் மற்றும் சமூகத்தாருக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றி அதிக அளவில் போதனைகளை நாம் காணலாம். இஸ்லாம் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை வலியுறுத்துகிறது.
அனைத்து முஸ்லிம்களும் இதை நடைமுறைப்படுத்தி வந்தால் ஒட்டுமொத்த உலகமே மாறிவிடும்.
ஆட்சியும், அதிகாரமும் நம்மை தேடி வரும் எப்பொது என்றால்?
உங்களில் எவர் இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்து வந்தார்களோ அவர்களை அவர்களுக்கு முன் சென்ற சமுதாய மக்களுக்கு எவ்வாறு இந்த பூமியின் ஆட்சி அதிகாரத்த வழங்கினோமோ அதைப்போன்று இவர்களுக்கும் வழங்குவான். மேலும் தான் பொறுந்திக்கொண்ட இஸ்லாம் மார்க்கத்திலேயே அவர்களை நிலைபடுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்தை நிம்மதியை கொண்டு போக்கிவிடுவதாக அல்லாஹ் வாக்களிக்கின்றான்.
அல்லாஹ் நம்மை சிறந்த சமுதாயமாக கூறுகிறான்.
மனித இனத்தை சீர்படுத்துவதற்கான் சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் நன்மையை ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் தடுக்கிறீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்.
சிறந்த மனிதர்களுக்கான அடையாளம் உண்டு! நாம் சிறந்த மனிதர்களில் ஒருவரா? அல்லாஹ் நம்மை சிறந்தவர்களாக இருக்கும்படி கூறுகிறான்.
மேலும் நீங்கள் அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள். அவனோடு எதையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தையரிடம் நல்ல விதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அண்டைவீட்டுக்காரர்கள், வழிப்போக்கர்கள், வழக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட அடிமைப்பெண்களிடம் நீதமாக நடந்து கொள்ளுங்கள். நிச்சமாய அறிந்து கொள்ளுங்கள் பெருமையிலும், கர்வத்திலும் திரிபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் எந்த ஒரு முஸ்லிம் தன் அன்டைவீட்டாருக்கு நோவினை செய்வானோ அவன் சுவர்க்கம் செல்லமாட்டான்!.
நாம் செய்யக்கூடிய தொழுகை, நோன்பு, ஜகாத்து, ஹஜ்ஜு போன்றவற்றை விட நம்முடைய நன்னடத்தைகள், நம்முடைய பண்புகளை, நம்முடைய ஒழுக்கங்கள் போன்றவற்றை வைத்துத்தான் இஸ்லாத்தை எடைபோடுவார்கள். இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீது கடந்த காலங்களில் அதிக அளவில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது அதை நாம் தான் நம்முடைய செயல்களின் மூலம் சரிசெய்யவேண்டும்.
சிறந்த சமுதாயமாக திகழ வேண்டிய நாம், பிற சமுதாய மக்களால் அவப்பெயர்களை பெற்று வருகிறோம். அத்தோடுமட்டுமல்லாமல் நமக்குள்ளேயே பல பிரிவுகளாக பிரிந்து, பிளவுபட்டு ஒருவருக்கொருவர் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறோம். இன்று அல்லாஹ்விற்கு ஸூஜூது செய்வதற்கு அல்லாஹ் உடைய மஸ்ஜிதை நாடாமல் நம்முடைய மஸ்ஜிதை தேடி அலைகின்றோம். நம்முடைய பலத்தை பலவீனமாக்கி மற்றவர்களால் தாக்கப்படுவதற்கு ஆயத்தமாகி வருகிறோம். நம்முடைய மார்க்கத் தலைவர்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து இப்பேற்பட்ட இடைவெளியை போக்க வேண்டும். ஒரே இறை, ஒரே மறை, ஒரே தூதர் என்று இருக்கக்கூடிய நாம் ஏன் ஒன்றுபட முடியாது? முயற்சி இருந்தால் கண்டிப்பாக இயலும், அது ஒரு கடினமான காரியமாக இருக்காது.
சமீபத்திய தேர்தலின் போது எதிரிகளாக இருந்த பல அரசியல் கட்சிகள் ஒன்றினைந்து தேர்தலம் களம் கண்டதை நம்மால் காணமுடிகிறது. உலக ஆதாயதிற்காக எந்த ஒரு லட்சியமும் இல்லாத, இவர்களாலேயே ஒன்றுபட முடியும் என்றால் அல்லாஹ்விற்காக மார்க்கத்திற்காக நம்மால் ஏன் ஒன்று பட முடியாது?
பீஹார் மாநிலம் பாட்னாவில் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு புதிய மாற்றத்தை காண முடிந்தது. சில்சிலாஹ், கங்காஹ் முனேமிய கமாரியா, என்ற அமைப்பு எல்லா முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்று திரட்டி ஆலோசனை நடத்தி தொழுகை நேரங்கள், ஸஹர் நேரங்கள், இஃப்தார் நேரம் போன்றவற்ற ஓரே மாதிரியாக கடைபிடிக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதை சில வருடங்களாக கடைபிடித்தும் வருகிறார்கள். நமது ஊரிலும் காதியானிகளுக்கு எதிராக எல்லா அமைப்புகளும் ஒன்று திரண்டு நெல்லை மாவட்ட மேலப்பாளையத்தில் ஒரே மேடையில் அமர்ந்து காதியானிகளுக்கு எதிராக போராட முடிவெடுத்ததை நாம் அறிவோம். இது ஒரு தொடக்கம் தான். நாம் பயணிக்க வேண்டிய தூரம் மிகத்தொலைவு. அதிவிரைவிலேயே நல்லதொரு மாற்றத்தை நம்மால் காண முடியும்.
நமக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைகளை ஓரங்கட்டிவிட்டு ஒட்டு மொத்த சமுதாயத்திறாக பாடுபடுவோம். குறிப்பாக அசிமானந்தாவிற்கு நேர்வழி கிடைக்க இறைவனை பிராத்திப்போம்!.
நன்ற: TWO CIRCLES
தமிழில் : முத்து
2 விமர்சனங்கள்:
சகோதரரரே!அஸிமானந்தா தான் கொடுத்த வாக்குமூலத்திலிருந்து பல்டியடித்த்விட்டார்.மனமாற்றம் என்பதெல்லாம் அவர்களின் பம்மாத்துவேலை.ஆகவே சமீபத்திய செய்திகளையும் அறிந்துகொண்டு கட்டுரையை வரையுங்கள்.
இந்த மாதம் 14ஆம் தேதி டூ சர்கில்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியை தான் தமிழில் மொழி மாற்றம் செதுள்ளேன். அசிமானந்தா பல்டி அடித்துவிட்டாரா? இல்லையா? என்பதற்கான செய்தி என்னிடம் இல்லை! தாங்கள் அதை தந்து உதவினால் நன்றாக இருக்கும்.
நன்றி!
கருத்துரையிடுக