சென்னை 5 ஏப்ரல்: சென்னை துறைமுகம் தொகுதியில் உள்ள ஏழுகிணறு பகுதியில் நேற்று திங்கட்கிழமை அன்று எஸ்.டி.பி.ஐன் சார்பாக மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி உரையாற்றுகிறார். |
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக எந்த கட்சிகளோடும் கூட்டணி இல்லாமல் எஸ்.டி.பி.ஐ தனியாக மொத்தம் 7 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. அதில் மிக முக்கியமாக கருத்தப்படும் துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ-ன் தென் சென்னை மாவட்ட தலைவர் பி.முஹம்மது ஹூஸைன் போட்டியிடுகின்றார். நேற்று திங்கட்கிழமை (04.04.2011) அன்று மாலை சரியாக 7.00மணி அளவில் சென்னை ஏழுகிணரு பூங்கா அருகில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மற்றும் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு வட சென்னை மாவட்ட தலைவர் எஸ். அமீர் ஹம்ஜா அவர்கள் தலைமை வகித்து பேசினார். வட சென்னை மாவட்ட தணைத்தலைவர் ஜாகிர் வரவேற்புரை ஆற்றினார். வட சென்னை மாவட்ட செயலாளர் கரீம் தொகுத்து வழங்கினார். ஆர்.கே நகர் தொகுதி செயலாளர் ரத்தினம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதில் அவர் எஸ்.டி.பி.ஐ-ன் கொள்கைகளை எடுத்துக்கூறினார்.
இந்த பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்புரை ஆற்றிய மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி அவர்கள் பேசும்போது, இந்த நாட்டில் அரசியலுக்கு ஏற்பட்ட அவல நிலையை பட்டியளிட்டு பேசினார்.
தொடங்கப்பட்டு வெறும் 18 மாதங்களே ஆன் நிலையில் எஸ்.டி.பி.ஐ நாடு முழுவது 20ற்கும் மேற்பட்ட மாநிலங்களில் கடுமையான வேகத்தில் வளர்ந்து வருவதாக கூறினார். மேலும் ராஜஸ்தானிலும், மேற்குவங்காளத்திலும், கேரளாவிலும், கர்நாடகாவிலும் சென்ற ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் கணிசமான வெற்றியை எஸ்.டி.பி.ஐ பெற்றுள்ளது என்றும் மக்கள் மத்தியில் எஸ்.டி.பி.ஐக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறினார். துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் நமக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவும் அதற்காக தொண்டர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இருக்கின்ற எல்லா திராவிடக்கட்சிகளையும், மததுவேஷ கட்சிகளையும் மக்கள் புரக்கணிக்க தொடங்கிவிட்டார்கள் என்றும் இனி எதிர்காலம் எஸ்.டி.பி.ஐற்குத் தான் என்று கூறினார்.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர்ம் முஹம்மது நாஜிம் அவர்கள் பேசும் போது, இதனால் வரை மற்றவர்களை போன்று நாமும் மாறி மாறி இரு திராவிடக்கட்சிகளை ஆதரித்து வந்தோம், ஆனால் அவர்கள் நமக்கு துரோகம் இழைத்ததை தவிற வேறு ஏதும் செய்து விடவில்லை. 14 ஆண்டு காலமாக சமூக சேவையில் ஈடுபட்டு இம்முறை அரசியல் காணும் நமது வேட்பாளர் முஹம்மது ஹுஸைன் அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டு என்று கேட்டுக்கொண்டார். தனக்கும் வேட்பாளருக்கும் இடையே இருந்த பழைய பசுமையான நினைவுகளை பொதுமக்களுடன் பகிர்ந்துகொண்டார். சாதாரண ஏ.சி மெக்கானிக்காக இருந்து வரும் நமது வேட்பாளர் அதிக தியாகங்களை செய்யக்கூடியவர் என்றும் மக்களுக்காகவே, சமூக அக்கறைக்காகவே தமது முழு வாழ்க்கையையும் அற்பணித்தவர் என்று கூறினார். குடிகாரர்களும், ஊழல் வாதிகளையும் ஒதுக்கி விட்டு இந்த முறை மக்கள் அனைவரும் எஸ்.டி.பி.ஐற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மற்றுமொரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் பாப்புலர் ஃப்ரண்டிற்கும் எஸ்.டி.பி.ஐற்கு உள்ள தொடர்பு என்ன என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கினார். ஊழல் அற்ற ஆட்சி வரவேண்டும், மக்கள் ஆட்சி ஏற்படவேண்டும், லஞ்ச லாவண்யம் ஒழிய வேண்டும் என்றால் மக்களால் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறினார். அதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் நீண்ட அலோசனைக்கு பிறகு, நிறைய கருத்துக்கணிப்பிற்கு பிறகு சமூக ஆர்வளர்களை ஊக்குவித்து, அதன் மூலம் தொடங்கப்பட்டதே எஸ்.டி.பி.ஐ ஆகும். இனி வரக்கூடிய காலங்களில் இந்தியாவை ஆளக்கூடிய அளவிற்கு எஸ்.டி.பி.ஐ தனித்துவமிக்க கட்சியாக, மக்கள் சக்தியாக மாறும் என்று கூறினார்.
சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பி. முஹம்மது ஹுஸைன் உரையாற்றுகிறார் |
மக்களிடம் வசூல் செய்துதான் அரசியலிலே இறங்கி இருக்கின்றோம். ஆதலா தாங்களால் இயன்ற அளவு பொருளாதார உதவி செய்யுங்கள் என்று கூறிய போது எஸ்.டி.பி.ஐன் தொண்டர்கள் அல்லாத பல பொதுமக்கள் பொருளாதார உதவி செய்தனர். இக்கூட்டத்திற்கு ஐனூறுக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திரண்டிருந்த மக்களின் ஒரு பகுதி |
செய்தி: முத்து
6 விமர்சனங்கள்:
thokkirathu uruthi. veru ennaththa solla?
jaikirathu uruthi. veru ennaththa solla.
Deen Bhai, ungal perin arthathin padi nengal illai. vetriyum tholviyum Allah vin puram irunthu varuvathu athai nengal thirmanika mudiyathu. avarhaludaya ullaipai poruthu Insha Allah
payar illamal karuthuhalai sona varuhaluku. varthai halai sariyaha ubayoham paduthavum deen bhai thavaraha solli irunthal nengal athai suti kataum atharkaha nengal thavaraha vemarsika vendom. athaipol deen bhai, ungaluku avargalai pidikavillai endral nengal othungikolaum athuva siranthathu.
Insha Allah Jai SDPI.................allahvin purathil irunthu varuvathu thaan vetriyum tholiviyum athai evaraalum nirnayam seiya mudiyathu so Wait & see May 14th 2011......But SDPI vetri petraal samuthaayam thalithu oonga vaaipugal kandippaga undu Insha allah....
Please Visit www.sdpi.tk to Know About SDPI's Work in Tamil Nadu
கருத்துரையிடுக