புதுடெல்லி: பாபரி மஸ்ஜித் வழக்கு தொடர்பாக அலஹாபாத் உயர் நீதி மன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நிலத்தை பகிர்ந்து வழங்குமாறு பிறப்பித்த உத்தரவு வினோதமாக இருக்கிறது என்றும், நிலத்தில் ஏற்கனவே உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.
நிலத்தை மூன்று சம பங்குகளாக பிரித்து இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், நிர்மோகி அகாரா என்ற அமைப்பிற்கும் வழங்குமாறு உத்தரவிட்டது. இத்தகைய தீர்ப்பு வழக்கறிஞர்கள் மத்தியிலும், சட்ட நிபுணர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதை எதிர்த்து மூன்று தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மேலு முறையீடு செய்தனர். சன்னி வஃக்பு வாரியம், ஜமாத் உலமா-ஹிந்த் தாக்கல் செய்த மனுவில், "ஆதாரங்களின் அடிப்படையில் அல்லாமால் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு அளித்திருப்பதால், உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். சர்ச்சைக்குரிய இடம், ராமர் பிறந்த இடம் என்று உயர் நீதிமன்றம் கூறியது தவறு. மேலும், மூன்று தரப்பினரும் நிலம் முழுவதையும் தங்களுக்கே வழங்க வேண்டும் என்று கேட்டபோது அதை பிரித்து வழங்க உத்தரவிட்டது தவறு என்று கூறப்பட்டு இருந்தது.
இந்து மகா சபை தாக்கல் செய்த மனுவில், "முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒரு பங்கு நிலத்தை அளிக்க வேண்டும் என்று இரண்டு நீதிபதிகல் அளித்த தீர்ப்பை மட்டும் ரத்து செய்ய வேண்டும். நிலம் முழுவது இந்துக்களுக்கே சொந்தம் என்ற நீதிபதி தரம்வீர் சர்மாவின் தீர்பையே ஏற்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. "வந்த வரை லாபம்" என்ற அடிப்படையிலேயே இந்து மஹா சபையின் கோரிக்கை இருக்கிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.
இந்த மேல் முறையீடு மனுக்கள் நீதிபதிகள் அதா ஆலம், ஆர்.எம்.லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் தொடக்கத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை யாராவது ஆதரிக்கிறீர்களா? என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு மனுதாரர்கள் யாருமே ஆதரவு தெரிவிக்கவில்லை.
பின்னர் அலஹாபாத் உயர் நீதிமன்றத் தீர்புக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். சர்ச்சைக்குரிய நிலத்தில் ஏற்கனவே உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதன் மூலம் சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டப்பட்டுள்ள தற்காலிக ராமர் கோயிலில் தொடர்ந்து வழிபாடு நடத்தலாம் என்று கூறினர்.
சர்ச்சைக்குரிய நிலத்தை பற்றி மட்டுமே மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்துள்ள போதிலும், அந்த நிலத்தின் அருகே, மத்திய அரசு கையகபடுத்தியுல்ள 67 ஏக்கர் நிலத்திலும் மத ரீதியான எந்த செயல்பாடுகளும் நடத்தக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:-
அலஹாபாத் உயர் நீதி மன்றம் அளித்த தீர்ப்பு புதிய புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், கடினமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்று கூறினர். நிலத்தை பகிர்ந்து வழங்குமாறு எந்த தரப்பினரும் கேட்கவில்லை. அது யாருடைய கோரிக்கையும் அல்ல. யாருமே கேட்காதபோது நிலத்தை பிரித்து வழங்குமாறு உயர் நீதி மன்றம் எப்படி உத்தரவிட முடியும்? என்பது ஆச்சரியமாக உள்ளது. உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு வினோதமாக இருக்கிறது. இத்தகைய தீர்ப்புகளை செயல்படுத்த அனுமதிக்க முடியாது. ஆகவே அந்த தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
சர்ச்சைக்குரிய நிலத்தில் ஏற்கனவே உள்ள நிலையே நீடிக்க வேண்டும். அந்த நிலத்தை ஒட்டி மத்திய அரசு கையகபடுத்தியுள்ள 67 ஏக்கர் நிலத்தில் மத ரீதியான எந்த செயல்பாடுகளும் நடத்தக்கூடாது. அங்கும் ஏற்கன்வே உள்ள நிலையே நீடிக்க வேண்டும். என நீதிபதிகள் கூறினர்.
சன்னி வஃக்பு வாரியத்தின் வழக்கறிஞர் ஜஃபரி ஜீலானி கூறுகையில் "இந்த தீர்ப்பு அமைதியை நிலை நாட்ட உதவும். இனிமேல், நீதிமன்றத்தின் நடவடிக்கை பொறுத்து எங்களின் அடுத்தக்கட்ட செயல்பாடு அமையும் என்றார்.
அலஹாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து பலரும் அதிருப்தி தெரிவித்த வேளையில் தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் நண்பன் என்று தன்னை பிதற்றிக்கொள்ளு கருணாநிதி "இது சரியான தீர்ப்பு!" என்று கூறி இப்பேற்பட்ட கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பிற்கு ஆதரவு தெரிவித்தார். தற்போது உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்ததைப்பற்றி என்ன கூற நினைக்கிறார் கருணாநிதி?
அலஹாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகு முஸ்லிம் சமூகம் மத்தியில் பெறும் ஏமாற்றம் அடைந்தது. இனியும் பாபரி மஸ்ஜிதிற்காக போராடுவது வீண் என நினைக்கும் அளவிற்கு சென்றார்கள். அல்லாஹ்வின் இல்லம் அல்லாஹ்விற்கே சொந்தம் என்ற அடிப்படையிலும் " நீதிக்காக காத்திருக்கும் பாபரி மஸ்ஜித்" என்ற தலைப்பில் நாடுமுழுவது முழு வீரியத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இறையில்லத்தை மீட்கும் வரை பாப்புலர் ஃப்ரண்டின் போராட்டம் தொடரும்! இன்ஷா அல்லாஹ்!

கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கிய நாட்டாமைகள் (சொம்பு இல்லாதது தான் குறையே!) |

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக