பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று குஜராத்தில் முஸ்லிம்கள் பற்றிய ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. குஜராத்தில் வாழக்கூடிய முஸ்லிம்கள் தங்களுடைய உண்மை பெயரை மறைத்து ஹிந்து பெயர்களை பயன்படுத்துகிறார்கள்.
தங்களுக்கு வேலை கிடைப்பதற்காத்தான் இவ்வாறு அவர்கள் செய்கிறார்கள் என அந்தப்பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இந்த செய்தியை அந்தப்பத்திரிக்கை தலையங்கமாக வெளியிட்டுள்ளது. அதில் மெஹபூப் பதான் என்ற ஒருவரைப் பற்றிய செய்தி வெளியிட்டுள்ளது. தனக்கு வேலை கிடைப்பதற்காக தன்னுடைய பெயரை "ஜெயந்தி பத்தி" எனக் கூறிக்கொண்டு சூரத்தில் வேலை தேடியுள்ளார். ஒரு பணத்தகராறில் கொலை செய்யப்பட்ட பின்பு தான் அவரின் குடும்பத்தினர் மூலமாக அவர் ஒரு முஸ்லிம் என்றே தெரியவந்திருக்கிறது.
அந்தப் பத்திரிக்கையின் வெளியிட்ட அறிக்கையின்படி பத்தான் கொலை செய்யப்பட்ட பின்னர் தான் அவரைப் பற்றிய செய்தி தெரிவந்திருக்கிறது. மண்டை உடைக்கப்பட்ட நிலையில் அந்த்ரோலி அருகே உள்ள ஓரு வயல்வெளியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பத்தானின் உடலை சவக்கிடங்கில் வைத்திருந்தனர். பின்னர் ஹிந்து முறைப்படி இறுதிச்சடங்கை நிறைவேற்ற இருந்தனர்.
இதற்கிடையில் பதானின் குடும்பத்தினர் அவரை காணவில்லை என ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்ததாக தெரிகிறது. யாருமே பதானின் உடலை பெற்றுக்கொள்ள முன் வரவில்லை என்ற செய்தியை படித்த பதானின் குடும்பத்தினர், தனது மகனாக இருக்கலாமோ என்றெண்ணி பதானின் மருமகன் இஃக்பால் காவல்துறையினரை தொடர்பு கொண்டுள்ளார், ஆனால் அதற்குள்ளாகவே பதானை ஹிந்து முறைப்படி இறுதிச்சடங்கை செய்து முடித்துள்ளனர். இருந்த போதிலும் காவல்துறையினர் பதானின் உடலை புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தை வைத்து இஃக்பால் பதானை அடையாளம் கண்டுள்ளார். பதானின் குடும்பத்தினர் கூறும்போது, பதான் ஒரு பக்தியிள்ள முஸ்லிம் என்றும் தனக்கும் தன்னுடைய பிள்ளைகளுக்கும் வேலை கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் தன்னை ஒரு ஹிந்து போல் காட்டிக்கொண்டார் என்றும் கூறினர்.
"நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்கிறோம்! எங்களால் எதுவும் செய்துவிட முடியாது! அப்படியிருக்க காவல்துரறையினர் எப்படி அவரை ஹிந்து முறைப்படி இறுதிச்சடங்கை செய்தனர்? அவரை பிரேத பரிசோதனை செய்யும்போதே பிறப்பு உருப்பை வைத்து அவர் ஒரு முஸ்லிம் என்பதை தெரிந்து கொள்ளலாமே! என அவரது மகன் முஸ்தாக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கதோதரா காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் வி.ஆர். மல்ஹோத்ரா கூறும்போது " நாங்கள் அவருடைய (பத்தான்) உடலை சவக்கிடங்கில் பல நாட்கள் வைத்திருந்தோம், ஆனால் யாருமே அவரது உடலை பெற்றுக்கொள்ள வரவில்லை. எனவே தான் அவரை ஹிந்து முறைப்படி இறுதிச்சடங்கை நடத்தினோ, அவர் ஒரு முஸ்லிம் என்று எங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
சூரத்தில் பத்தானைப்போன்று பலரும் இவ்வாறு தங்களுடைய பெயரை மாற்றி கூறியுள்ளனர். பதானின் மகன் முஸ்தாக் தன்னுடைய பெயரை முகேஷ் என்றும் அவரது மகள் ஷாமினா, ஷர்மிளா என்று மாற்றிக் கூறியுள்ளனர். தற்போது இந்த சம்பவம் வெளியே தெரியவந்ததால் தங்களுடைய வேலை போய்விடுமோ என அஞ்சுகின்றனர்.
குஜராத்தில் முஸ்லிம்கள் தங்களை முஸ்லிம்கள் என்று கூட காட்டிக்கொள்ள முடியாத சூழ்நிலைதான் குஜராத்தில் முஸ்லிம்கள் தங்களை முஸ்லிம்கள் என்று கூட காட்டிக்கொள்ள முடியாத சூழ்நிலைதான் இருந்து வருகிறது. இந்த நிலையில் குஜராத் ஒளிர்கிறது என்றும், வளர்ச்சி அடைந்த மாநிலங்களிலேயே குஜராத் முதலிடத்தில் இருக்கிறது என்றும், சிறந்த முதலமைச்சர் நரேந்திர மோடிதான் என்று பொய்யான தகவல்களை மீடியாக்கள் பரப்பி விட்டிருக்கிறது.ஆனால் அங்கே வாழக்கூடிய முஸ்லிம்களின் நிலை மோசமாகிக்கொண்டிருக்கிறது. எங்கே நாம் முஸ்லிம் என்று கூறினால் வேலைக்கிடைக்குமா? முஸ்லிம் என்று கூறினால் செத்துவிடுவோமே என்ற அச்சத்தில்தான் வாழ்கிறார்கள். மொத்தத்தில் புஸ்வானமாகிக்கொண்டிருக்கிறது குஜராத்!
செய்தி: முத்து
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக