பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநில சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் மஃதனி வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியிருப்பதாவது:
கோயம்புத்தூர் சிறையிலிருந்து நான் விடுதலையான பிறகு கூடுதல் பலத்துடன் பி.டி.பி கட்சியும் அதன் கொள்கைகளும் கேரளாவில் செல்வாக்கு பெறுவதை விரும்பாத பல பழைய சக்திகளும், புதிய சக்திகளும் இணைந்து என்னை பொய்வழக்கில் சிக்கவைத்து கேரளாவிலிருந்து நாடு கடத்த முயற்சிக்கின்றனர்.
ஒடுக்கப்பட்ட சமூகங்களை ஒன்றிணைக்க உள்ளார்ந்த நேர்மையுடன் நடத்திய முயற்சிகளும், இந்த சமூகங்கள் எதிர்கொள்ளும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பிய ஒரே காரணத்தால் என்னை பத்தாண்டு காலம் பொய்வழக்கில் சிக்கவைத்து சிறையில் அடைத்தனர்.
கட்சியின் பல தலைவர்கள் ராஜினாமா செய்த பிறகும் ஆத்மார்த்தமாக கட்சியின் செயல்களத்தில் உறுதியாக நிற்கும் அனைத்து தொண்டர்களையும் உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் மேற்கொண்டு மேலும் பணிகளில் உத்வேகம் அளிப்பதற்கான நிகழ்ச்சிகளை பி.டி.பி தலைமை நடைமுறைப்படுத்தும்.
கட்சி உருவான காலம் முதல் எழுப்பிக் கொண்டிருக்கும் அனைத்து முழக்கங்களையும் நிறைவேற்ற கேரளாவின் அரசியல் சூழலில் முடியவில்லை எனினும் வஞ்சிக்கப்பட்ட மக்களின் கூட்டமைப்பு என்ற முழக்கத்தை முதன்முதலாக முன்வைத்தது பி.டி.பியாகும். இனிமேலும் இந்த முழக்கத்தை கட்சி வலுவாக முன்வைத்து செயல்படும். இவ்வாறு அப்துல்நாஸர் மஃதனி தெரிவித்துள்ளார்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக