சென்னை: பதவி ஏற்பதற்கு முன்னதாகவே அரசியல்வாதிகளின் ஈகோ பிரச்சனை துவங்கிவிட்டது. இவர்களது இந்த ஈகோ பிரச்சனையில் என்னவோ சீரழிவது தமிழக மக்களின் வரிப்பணமும் நேரமும் தான். இதோ தொடங்கிவிட்டது தி.மு.கவிற்கு எதிரான ஆ.தி.மு.கவின் செயல்பாடுகள்.
முந்தைய தமிழ அரசு ஓமந்தூர் அரசினர் தோட்டத்தில் பிரம்மாண்டமான தமிழக சட்டமன்றம் மற்றும் செயலகத்தை கட்டி முடித்தனர் பல் கோடி ரூபாய் செலவில். தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஜெயலலிதா புதிய கட்டிடத்தில் போகமாட்டாறாம், ஆதலால் மீண்டும் பழைய கட்டிடமான ஜார்ஜ் கோட்டைக்கே சட்டமன்றம் செல்ல இருக்கிறது.
அதற்கான பணிகள் வேகமாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
சென்னையில் 1640-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோட்டைதான் அதிகார மையமாக செயல்படு வருகிறது. பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இந்த கோட்டை, அரசு அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அரசுக்கு தேவையான் முக்கிய அலுவலகங்கள் அனைத்தையும் இந்த கோட்டைக்குள் கொண்டு வர முடியவில்லை என்பதால் ராணிமேரி கல்லூரி அமைந்துள்ள இடத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட புதிய தலைமை செயலகத்தை கட்ட முதல் அமைச்சர் ஜெயலலிதான் கடந்த ஆட்சியில் முடிவு செய்தார். இது சம்பந்தமாக சட்டசபை விதி 110ல் கீழ் சட்டசபையில் அறிவிப்பை அவர் வெளியிட்டார். 110ஆம் விதியின் கீழ் வெளியிடப்பட்டதால் அந்த அறிவிப்பை பற்றி யாரும் விவாதிக்க முடியாது.
ஜார்ஜ் கோட்டையில் அரசு அலுவலகங்கள் இயங்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையை பராமரிப்பதற்கே கோடிக்கணக்கில் செலவிட வேண்டியிருப்பதாலும், அங்கு போதிய இடவசதிகள் மற்றும் நவீன வசதிகள் இல்லை என்பதாலும் தலைமைச் செயலகம் இடமாற்றம் செய்யப்படுவதாக காரணம் கூறப்பட்டது.
இந்த நிலையில் 2006ஆம் ஆண்டு புதிய ஆட்சி அமைந்தது. சரியான வசதிகளைக் கொண்ட செயலகத்தை அமைப்பதற்காக ஓமந்தூர் அரசினர் தோட்டத்தை அந்த அரசு தேர்வு செய்தது. இதற்காக அந்த பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த கலைவானர் அரங்கம் இடிக்கப்பட்டது.
ஆங்கிலேயே கவர்னர் கன்னிமரா பிரபு 1890ஆம் ஆண்டு தொடங்கி வைத்த 118 ஆண்டுகள் பழைய கட்டிடத்தில் இயங்கும் சென்னையிலேயே முதல் காவல் நிலையமான திருவல்லிக்கேனி காவல் நிலையமும் அகற்றப்பட்டது.
அந்த இடத்தில் ரூபாய் 450 கோடிக்கு மதிப்பிடப்பட்டு, ரூபாய் 1100 கோடி செலவில் புதிய தலமைச்செயலகம் கட்டி முடிக்கப்பட்டது. பிரம்மாண்டமான விழாவில் திறந்து வைக்கப்பட்ட அந்த கட்டிடத்தில் தலைமைச்செயலகம் மட்டுமல்ல, சட்டசபையும் இயங்குகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, தலைமைச் செயலகத்தை மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இதற்காக கோட்டை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை இயங்கி வந்த இடத்தில் முந்தைய அரசால் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நூலகத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் புத்தகங்கள் பாழாகின்றன. செய்திகளை பார்க்கும்போது புதிய தலைமைச்செயலகத்தை அப்படியே கைவிடுவதற்கு இந்த அரசு முடிவெடுத்திருப்பது தெரிகிறது. இது சட்டவிரோதமான, அங்கீகாரமற்ற, பொதுமக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கையாகும். பல கோடி பணத்தை போட்டு கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை அப்படியே விட்டுவிடுவது சரியான செயல்பாடு அல்ல.
தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வதற்காக இந்த தேர்தல் நடத்தப்படவில்லை. அதை இடமாற்றம் செய்வது பற்றி தமிழக அரசு முடிவெடுக்கவில்லை. தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்வதற்கு யார் அதிகாரம் அளித்தது? என்பதை தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும்.
புதிய தலைமைச் செயலகத்தில் செயல்படுவது சரிதான் என்று அரசு எடுத்திருந்த முடிவு, திடீரென்று மாறுவதற்கு என்ன காரணம் என்பதற்கும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். எனவே இந்த மனு மீதான விசாரணை முடியும்வரை புதிய தலைமை செயலகத்தையும், சட்டசபையும் ஜார்ஜ் கோட்டைக்கு இடமாற்றம் செய்யத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழக மக்களே! பார்த்தீர்களா? நீங்கள் இதனால் வரை மாறி மாறி ஆட்சியில் அமர்த்திக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் நிலையை? ஏன் புதிய கட்டிடத்திலேயே சட்டமன்றம் தொடரக்கூடாது? ஏறகன்வே தனது முந்தைய ஆட்சியில் சட்டமன்றத்தை இடம் மாற்றம் செய்யவேண்டும் என்று கூறியவர் தானே இந்த ஜெயலலிதா? ஏன் இன்று மீண்டும் பழைய கட்டிடத்திற்கே மாற்றவேண்டும் என்று ஆணையிட்டுள்ளார்? காரணம் இந்த புதிய சட்டமன்றம் வளாகம் தனது எதிர் கட்சியான தி.மு.க அரசால் கட்டப்பட்டது. அதில் போய் நாம் அரசாங்கத்தை நடத்தினால் நம் கவுரவம் என்னவாகும்? என்ற காரணத்தில்தானே?
சென்ற முறை ஜெயலலிதான் ஆட்சிக்கு வந்த போதும் சரி, இந்த முறை ஆட்சிக்கு வந்த போதும் சரி, அவர் கூறியது "இதனால் வரை தமிழகத்தை ஆட்சி செய்து வந்த தி.மு.க அரசு கஜானாவை காலி செய்துவிட்டது, கடுமையான் நிதி நெருக்கடியில் தான் ஆட்சிப்பொறுப்பை ஏற்கின்றோம்! இது கடுமையான சவால் தான், கடுமையாக போராடவேண்டும்!" என்றெல்லாம் கூப்பாடு போடும் ஜெயலலிதா 1000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு (சாரி! கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்) புதிய தலைமை செயலகத்தை என்ன செய்யப்போகிறார். வேண்டுமென்றால் இடித்து விடுங்கள். உங்களுக்கென்ன கவலை உங்க வீட்டு சொத்தா போகப்போகிறது?
தமிழ மக்களே! இதனால் வரை அரசாங்கத்தால் வழங்கி வந்த இலவச டி.வி, கேஸ் அடுப்பு இனி உங்களுக்கு கிடைக்காது. ஏன் தெரியுமா? அது போன ஆட்சி! இது இந்த ஆட்சி! இவங்க என்ன தேர்தல் அறிக்கை வெளியிட்டாங்களோ! அது தான் உங்களுக்கு கிடைக்கும்! வாயை பொத்திக்கொண்டு கேள்வி ஏதும் கேட்காமல் கொடுத்ததை வாங்கிக்கொண்டு போகவேண்டியது தான்!
ஜெயலலிதாம் அம்மையாரே! உங்களது ஆட்சியில் கண்ணகி சிலையை அகற்றினீர்கள். அதன் பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு சிலையை அதே இடத்தில் மீண்டும் வைத்துள்ளதே! அப்படியென்றால் கண்ணகியின் நிலை.............. ஹையோ! ஹையோ!
செய்தி: முத்து
ஜார்ஜ் கோட்டையை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது |
முந்தைய தமிழ அரசு ஓமந்தூர் அரசினர் தோட்டத்தில் பிரம்மாண்டமான தமிழக சட்டமன்றம் மற்றும் செயலகத்தை கட்டி முடித்தனர் பல் கோடி ரூபாய் செலவில். தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஜெயலலிதா புதிய கட்டிடத்தில் போகமாட்டாறாம், ஆதலால் மீண்டும் பழைய கட்டிடமான ஜார்ஜ் கோட்டைக்கே சட்டமன்றம் செல்ல இருக்கிறது.
அதற்கான பணிகள் வேகமாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
பரிதாபமாய் காட்சியளிக்கும் ஓமந்தூர் அரசினர் மாளிகை |
அரசுக்கு தேவையான் முக்கிய அலுவலகங்கள் அனைத்தையும் இந்த கோட்டைக்குள் கொண்டு வர முடியவில்லை என்பதால் ராணிமேரி கல்லூரி அமைந்துள்ள இடத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட புதிய தலைமை செயலகத்தை கட்ட முதல் அமைச்சர் ஜெயலலிதான் கடந்த ஆட்சியில் முடிவு செய்தார். இது சம்பந்தமாக சட்டசபை விதி 110ல் கீழ் சட்டசபையில் அறிவிப்பை அவர் வெளியிட்டார். 110ஆம் விதியின் கீழ் வெளியிடப்பட்டதால் அந்த அறிவிப்பை பற்றி யாரும் விவாதிக்க முடியாது.
ஜார்ஜ் கோட்டையில் அரசு அலுவலகங்கள் இயங்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையை பராமரிப்பதற்கே கோடிக்கணக்கில் செலவிட வேண்டியிருப்பதாலும், அங்கு போதிய இடவசதிகள் மற்றும் நவீன வசதிகள் இல்லை என்பதாலும் தலைமைச் செயலகம் இடமாற்றம் செய்யப்படுவதாக காரணம் கூறப்பட்டது.
இந்த நிலையில் 2006ஆம் ஆண்டு புதிய ஆட்சி அமைந்தது. சரியான வசதிகளைக் கொண்ட செயலகத்தை அமைப்பதற்காக ஓமந்தூர் அரசினர் தோட்டத்தை அந்த அரசு தேர்வு செய்தது. இதற்காக அந்த பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த கலைவானர் அரங்கம் இடிக்கப்பட்டது.
ஆங்கிலேயே கவர்னர் கன்னிமரா பிரபு 1890ஆம் ஆண்டு தொடங்கி வைத்த 118 ஆண்டுகள் பழைய கட்டிடத்தில் இயங்கும் சென்னையிலேயே முதல் காவல் நிலையமான திருவல்லிக்கேனி காவல் நிலையமும் அகற்றப்பட்டது.
அந்த இடத்தில் ரூபாய் 450 கோடிக்கு மதிப்பிடப்பட்டு, ரூபாய் 1100 கோடி செலவில் புதிய தலமைச்செயலகம் கட்டி முடிக்கப்பட்டது. பிரம்மாண்டமான விழாவில் திறந்து வைக்கப்பட்ட அந்த கட்டிடத்தில் தலைமைச்செயலகம் மட்டுமல்ல, சட்டசபையும் இயங்குகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, தலைமைச் செயலகத்தை மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இதற்காக கோட்டை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை இயங்கி வந்த இடத்தில் முந்தைய அரசால் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நூலகத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் புத்தகங்கள் பாழாகின்றன. செய்திகளை பார்க்கும்போது புதிய தலைமைச்செயலகத்தை அப்படியே கைவிடுவதற்கு இந்த அரசு முடிவெடுத்திருப்பது தெரிகிறது. இது சட்டவிரோதமான, அங்கீகாரமற்ற, பொதுமக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கையாகும். பல கோடி பணத்தை போட்டு கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை அப்படியே விட்டுவிடுவது சரியான செயல்பாடு அல்ல.
தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வதற்காக இந்த தேர்தல் நடத்தப்படவில்லை. அதை இடமாற்றம் செய்வது பற்றி தமிழக அரசு முடிவெடுக்கவில்லை. தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்வதற்கு யார் அதிகாரம் அளித்தது? என்பதை தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும்.
புதிய தலைமைச் செயலகத்தில் செயல்படுவது சரிதான் என்று அரசு எடுத்திருந்த முடிவு, திடீரென்று மாறுவதற்கு என்ன காரணம் என்பதற்கும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். எனவே இந்த மனு மீதான விசாரணை முடியும்வரை புதிய தலைமை செயலகத்தையும், சட்டசபையும் ஜார்ஜ் கோட்டைக்கு இடமாற்றம் செய்யத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழக மக்களே! பார்த்தீர்களா? நீங்கள் இதனால் வரை மாறி மாறி ஆட்சியில் அமர்த்திக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் நிலையை? ஏன் புதிய கட்டிடத்திலேயே சட்டமன்றம் தொடரக்கூடாது? ஏறகன்வே தனது முந்தைய ஆட்சியில் சட்டமன்றத்தை இடம் மாற்றம் செய்யவேண்டும் என்று கூறியவர் தானே இந்த ஜெயலலிதா? ஏன் இன்று மீண்டும் பழைய கட்டிடத்திற்கே மாற்றவேண்டும் என்று ஆணையிட்டுள்ளார்? காரணம் இந்த புதிய சட்டமன்றம் வளாகம் தனது எதிர் கட்சியான தி.மு.க அரசால் கட்டப்பட்டது. அதில் போய் நாம் அரசாங்கத்தை நடத்தினால் நம் கவுரவம் என்னவாகும்? என்ற காரணத்தில்தானே?
சென்ற முறை ஜெயலலிதான் ஆட்சிக்கு வந்த போதும் சரி, இந்த முறை ஆட்சிக்கு வந்த போதும் சரி, அவர் கூறியது "இதனால் வரை தமிழகத்தை ஆட்சி செய்து வந்த தி.மு.க அரசு கஜானாவை காலி செய்துவிட்டது, கடுமையான் நிதி நெருக்கடியில் தான் ஆட்சிப்பொறுப்பை ஏற்கின்றோம்! இது கடுமையான சவால் தான், கடுமையாக போராடவேண்டும்!" என்றெல்லாம் கூப்பாடு போடும் ஜெயலலிதா 1000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு (சாரி! கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்) புதிய தலைமை செயலகத்தை என்ன செய்யப்போகிறார். வேண்டுமென்றால் இடித்து விடுங்கள். உங்களுக்கென்ன கவலை உங்க வீட்டு சொத்தா போகப்போகிறது?
தமிழ மக்களே! இதனால் வரை அரசாங்கத்தால் வழங்கி வந்த இலவச டி.வி, கேஸ் அடுப்பு இனி உங்களுக்கு கிடைக்காது. ஏன் தெரியுமா? அது போன ஆட்சி! இது இந்த ஆட்சி! இவங்க என்ன தேர்தல் அறிக்கை வெளியிட்டாங்களோ! அது தான் உங்களுக்கு கிடைக்கும்! வாயை பொத்திக்கொண்டு கேள்வி ஏதும் கேட்காமல் கொடுத்ததை வாங்கிக்கொண்டு போகவேண்டியது தான்!
ஜெயலலிதாம் அம்மையாரே! உங்களது ஆட்சியில் கண்ணகி சிலையை அகற்றினீர்கள். அதன் பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு சிலையை அதே இடத்தில் மீண்டும் வைத்துள்ளதே! அப்படியென்றால் கண்ணகியின் நிலை.............. ஹையோ! ஹையோ!
செய்தி: முத்து
1 விமர்சனங்கள்:
Ada Vidunga boss arasiyalla ithu vellam sahajam yendru solli kolvathu pol irukerathu ivarhalin sayelpadu tamilaha makkalea neengal ootu illa ottai potathu amma ku illa nam neanjiku inee athu yeappothum thudiyai thudithu kondea irukum 5 andu kalam nammai yar aala pohirarhal yendru kuda theariyamal maabearum thavarai saithu vitterhal Vealila odura onana pdichi veati kulla vitta kathaiya ahidichi nammaloda katha poruthu irunthu parpom innum yean vellam nadaka pohuthoo AMMA ku than vealicham Tamilaha makkaluko ini nam naadu Irunda Kaadu by NILAM pdk
கருத்துரையிடுக